திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் தரிசன டிக்கெட் – தேவஸ்தானம் அறிவிப்பு!

0
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் தரிசன டிக்கெட் - தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் தரிசன டிக்கெட் - தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் தரிசன டிக்கெட் – தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கூட்டத்தை தவிர்க்கும் முயற்சியாக ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் விநியோகம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி கோவில்:

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. அதனால் சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. மேலும் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டதால் கோயிலில் வருமானமும் குறைந்தது. பிறகு அரசின் முயற்சியால் கொரோனா தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்ததும் மீண்டும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு இணையதளம் வாயிலாக ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது. கொரோனா முழுமையாக குறையாததை கருத்தில் கொண்டும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற ஜூலை 10ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!

ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக தரிசன டிக்கெட் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியான சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. அதனை தொடர்ந்து நாளை (ஜூலை 7) செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வினியோகம் காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரியாத பக்தர்களை கருத்தில் கொண்டு மேலும் இலவச தரிசன டிக்கெட்டுகள் மட்டும் கோயில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதற்கேற்றவாறு தேவஸ்தான நிர்வாகம் தேவையான சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. மே மாதம் மட்டும் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தினசரி உண்டியல் வருமானம் என்பது சராசரியாக ரூ. 4 கோடியாக இருக்கும் ஆனால் பக்தர்கள் அதிகரித்தால் இது ரூ.5 கோடியாக அதிகரித்தது. வழக்கம் போல செப்டம்பர் மாதமும் டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here