இந்தியாவில் பரவும் பிஏ.2.38 வைரஸால் ஆபத்து? மத்திய அரசு விளக்கம்!

0
இந்தியாவில் பரவும் பிஏ.2.38 வைரஸால் ஆபத்து? மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் பரவும் பிஏ.2.38 வைரஸால் ஆபத்து? மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் பரவும் பிஏ.2.38 வைரஸால் ஆபத்து? மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் தற்போது கண்டறியப்பட்டு வரும் பிஏ.2.38 என்ற புதிய வகை கொரோனா வைரஸால் பாதிப்புகள் இல்லை என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய கொரோனா

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய்த்தொற்றால் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த கொரோனா வைரஸானது டெல்டா, ஒமிக்ரான் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தன்னை தானே உருமாற்றி வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா பாதிப்புகள் இப்போது 4ம் அலையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதன்படி, நாடு முழுவதும் தற்போது ஒமிக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்கள் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் நிமித்தம் ஒவ்வொரு நாளும் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்போது இந்தியாவில் பரவி வரும் இந்த 4ம் அலைத்தொற்று பிஏ.2.38 என்ற வைரசால் உருவாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பிஏ.2.38 வைரஸின் தன்மை குறித்து ஆய்வு செய்த இந்திய சார்ஸ் கோவ் 2 மரபணு வரிசைப்படுத்தல் கூட்டமைப்பு ஒரு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுப்பு குறித்த அறிக்கை – தகவல் வெளியீடு!

இது குறித்த அறிக்கையின்படி, ‘இந்தியாவில் பிஏ.2 மற்றும் பிஏ.2.38 என்ற வகையில் கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், சமீபத்திய வரிசை முறை தொகுதிகளில் பரவலாக உள்ள துணை பரம்பரை என தெரிகிறது. இந்த வைரஸின் தாக்கத்தால் இதுவரை நோய் தீவிரம் மற்றும் மருத்துவமனை சேர்க்கை விகிதம் அதிகரிக்கவில்லை. அதே போல இறப்பு எண்ணிக்கையும் இணை நோய்களால் தான் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த வைரசால் பெரிய அளவுக்கு ஆபத்து எதுவும் இல்லை, என்றாலும் மக்கள் தொடர்ச்சியாக கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here