கொரோனா பாதித்த பிரபல நடன இயக்குனர் கவலைக்கிடம் – மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் குடும்பம்!

0
கொரோனா பாதித்த பிரபல நடன இயக்குனர் கவலைக்கிடம் - மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் குடும்பம்!
கொரோனா பாதித்த பிரபல நடன இயக்குனர் கவலைக்கிடம் - மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் குடும்பம்!
கொரோனா பாதித்த பிரபல நடன இயக்குனர் கவலைக்கிடம் – மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் குடும்பம்!

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ் சினிமா துறையின் பிரபல நடன இயக்குனர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது குடும்பத்தினரால் அவருக்கான வைத்திய செலவுகளை பார்க்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது ரசிகர்களை வேதனை அடைய வைத்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த வருடத்தில் இருந்து கொரோனா என்ற நோய்த்தொற்று பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இந்த தொற்று பாதிப்பு சாமானிய மக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் பாதித்தது. அதில் சினிமா துறையில் இருப்பவர்கள் விதிவிலக்கு ஒன்றும் கிடையாது. திரைப்பட இயக்குனர் கேவி ஆனந்த் முதல் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் வரை பலரும் இந்த நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.

கர்ப்பமாக இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா – போஸ்டரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அந்த வகையில் தற்போது பிரபல நடன இயக்குனரான சிவ ஷங்கர் கொரோனா நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன்பாக நடன இயக்குனராக அறிமுகமானவர். இவர் 10 மொழி திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி இருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படத்தின் நடன இயக்குனர் இவர் தான். இந்த திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, அஜித் குமார் நடிப்பில் வெளியாகி இருந்த ‘வரலாறு’ திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு நடனம், ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் அந்த திரைப்படத்தில் நடந்து கொள்ளும் விதத்தினையும் கற்று கொடுத்தவர் இவர் தானாம். இது மட்டுமின்றி அருந்ததி, பூவே உனக்காக, வெற்றி கொடி கட்டு, திருடா திருடி போன்ற முக்கிய திரைப்படங்களில் இவர் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். இப்படியாக இருக்க, தற்போது இவர் கொரோனா நோய் தாக்கத்தினால் பாதிப்படைந்து உள்ளார்.

திருமணத்திற்கு பின் மீண்டும் ‘செம்பருத்தி’ சீரியல் ஷூட்டிங்கில் இணைந்த ஷபானா – வைரல் போட்டோ!

இதில் சோகம் என்னவென்றால், இவரது மருத்துவ செலவுகளை பார்க்க முடியாமல் அவரது குடும்பத்தினர் மிகவும் தவித்து போய் இருக்கின்றனர். நடன இயக்குனர் சிவ சுப்பிரமணியனுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் அவரது மகன் அஜய் கிருஷ்ணனை (9840323415) அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here