விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்துள்ள தனம் சுஜிதா – வைரல் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து பிரேக் எடுத்துள்ள தனம் சுஜிதா - வைரல் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து பிரேக் எடுத்துள்ள தனம் சுஜிதா - வைரல் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்துள்ள தனம் சுஜிதா – வைரல் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தனம் அண்ணியாக அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ள நடிகை சுஜிதா, தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். அப்போது தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா:

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் அனைவருமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகின்றனர். அதிலும் சீரியலின் ஆரம்பம் முதல் அனைவரின் கவனத்தையும் பெற்றவர் நடிகை சுஜிதா தான். இவர் தமிழில் மட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் கன்னட பதிப்பான வதினம்மா சீரியலிலும் இதே கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். இதேபோல் தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் சினிமா மற்றும் சீரியலில் முக்கிய நடிகையாக இருப்பவர்.

Exams Daily Mobile App Download

இவர் பிறந்த 3 மாதம் முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருவதால், நடிப்பில் அதிக அனுபவம் உடையவர். இவர் நடிப்பது தவிர அனைத்து பிரபலங்களும் தற்போது செய்து வரும் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். கதைகேளு கதைகேளு என்ற பெயருடன் இயங்கி வரும் அந்த சேனலில் தனது அனைத்து அனுபவங்களையும் சுஜிதா பகிர்ந்து வருகிறார். இதை தவிர தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் இடங்கள், பண்டிகை நாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றையும் பகிர்ந்து வருவார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா வீட்டில் புது வரவு – ரசிகர்கள் வாழ்த்து!

அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் நடுவே பிரேக் எடுத்து விட்டு, தனது குடும்பத்துடன் குன்னூர் மற்றும் கோத்தகிரிக்கு நடுவே உள்ள ஒரு ஊருக்கு சென்று கோடை விடுமுறையை அனுபவித்து வருகிறார். தான் தங்கியிருக்கும் ரிசார்ட்டில் இருந்து மலையில் ஏறும் பயிற்சியான ட்ரெக்கிங் செல்ல இருப்பதாகவும், குழந்தைகளுடன் செல்வதற்கு தகுந்த வகையில் இது சின்ன மலை தான் என்றும் தனது வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!