சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வு – கண்ணீருடன் பதிவு!

0
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வு - கண்ணீருடன் பதிவு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வு - கண்ணீருடன் பதிவு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வு – கண்ணீருடன் பதிவு!

தென் ஆப்பிரிக்கா அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாகவும், கிரிக்கெட் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்

டேல் வில்லியம் ஸ்டெய்ன் என்பவர் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் இதுவரை டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டி, T 20 உள்ளிட்ட அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடியுள்ளார். இது தவிர டைடன்ஸ் அணிக்காக அந்நாட்டின் உள்ளூர் போட்டிகளிலும் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் மணிக்கு 145 முதல் 146 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுக்கூடிய அபரா திறமைகளை உள்ளடக்கியவர்.

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு – பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளிலும் பல்வேறு அணிகளை சார்ந்து விளையாடிய இவர் இந்திய மக்கள் மத்தியில் பிரபலம். டேல் ஸ்டெய்ன் கடந்த 2010 ஆண்டு நடைபெற்ற IPL போட்டிகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சார்பாக விளையாடி இருந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மணிக்கு 156.2 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இருந்தார். இது டேல் ஸ்டெய்னின் அதிவேகமான பந்துவீச்சாக கருதப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதே நேரத்தில் 2008 இல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையை தனதாக்கி கொண்டவர். இவர் ஆடிய IPL போட்டிகளை பொருத்தளவு, 3 முறை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகவும் விளையாயுள்ளார். இந்நிலையில் டேல் ஸ்டெய்ன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட் பயணத்தில் தன்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!