தமிழகத்தில் திடீர் விலை உயர்வு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் திடீர் விலை உயர்வு - அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஆட்டம் காட்டி வரும் நிலையில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரு பக்கம் உயர்ந்து வருவது மக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளது. அதன்படி விருதுநகர் சந்தையில் பருப்பு விலை திடீரென அதிகரித்து உள்ளது.

பருப்பு விலை கிடுகிடுவென உயர்வு:

தமிழகம் முழுவதற்கும் காப்பி, தேயிலை, ஏலக்காய், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் முக்கிய நகரமாக விருதுநகர் விளங்கி வருகிறது. மேலும் இப்பொருளுக்கு விருதுநகர் தான் முக்கிய சந்தையாகவும் உள்ளது. தமிழக முழுவதற்குமான எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் சந்தையாக இது உள்ளது. இங்கு ஏற்படும் விலையேற்றம் தமிழ்நாடு முழுவதும் பொருந்தும். அந்த வகையில் இந்த வாரம் சில பருப்புகளின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது, மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு படிக்கிறீர்களா? ஈசியாக பாஸ் பண்ண வழி இது தான் – உடனே பாருங்க!

இதன்படி பாசி பருப்பு நூறு கிலோ மூடைக்கு ரூபாய் 10,550 முதல் ரூபாய் 10,700 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு 100 ரூபாய் விலை உயர்ந்து 10,200 ரூபாய்க்கும், உருட்டு உளுந்தம் பருப்பு 700 ரூபாய் விலை உயர்ந்து 12,000 ருபாய்க்கும் உளுந்து நூறு கிலோ மூடைக்கு ரூபாய் 9800 முதல் ரூபாய் 10,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!