Daily Current Affairs March 9, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 9, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

சுதந்திர தின வைர விழா ‘அம்ருத் மகோத்சவத்தை’ கொண்டாடும் தேசிய குழுவில் பிரதமர் உரை!!

  • இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை (அம்ருத் மகோத்சவம்) கொண்டாடும் தேசியக் குழுவின் முதல் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி உரை நிகழ்த்தியுள்ளார்.
  • தேசியக் குழுவின் உறுப்பினர்களான முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவி சிங் படேல் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
  • 75 வது சுதந்திர தினம் அடுத்த ஆண்டு கொண்டப்பட இருக்கின்றது. 75 வாரங்களுக்கு முன்பாகவே 75 வது சுதந்திரத்தினத்தினை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் தலைமையிலான இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சகம் ஜவுளிகள் துறை அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

  • மத்திய விவசாயத்துறை அமைச்சகம் மற்றும் ஜவுளிகளத்தூரை அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. நாட்டில் பட்டு வளர்ப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
  • பட்டு வளர்ப்பில் மரம் சார்ந்த வேளாண்-வனவியல் மாதிரிகளை நிறுவுதல் மற்றும் கிருஷி விஜியன் கேந்திரங்கள் மூலம் பட்டு வளர்ப்பு நடவடிக்கைகளை ஆராய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய ஜவுளிகள்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு பெண்கள் பட்டு விற்பனையாளர்களுக்கு புனியாட் ரீலிங் இயந்திரங்களை வழங்கினார்.
  • பட்டு இயந்திரத்தில் தொடர்ந்து வேலை பார்ப்பதன் மூலம் ஏற்படும் கால் வலியினை போக்க இந்த இயந்திரம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் விமானிகளை அதிகளவில் கொண்டுள்ளது இந்தியா!!

  • மத்திய விமானத்துறை அமைச்சர் ஹாதீப் சிங் பூரி சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு பெண் விமானிகளை அதிகளவில் கொண்டுள்ள நாடு நமது நாடு தான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
  • இந்தியாவில் கிட்டத்தட்ட 12.4 சதவீத பெண் விமானிகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் அது 5.4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிகழ்வுகள்

வங்க தேச நாட்டின் 50 வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு!!

  • வங்க தேசம் வரும் மார்ச் 26 ஆம் தேதி 50 வது சுதந்திரதின விழாவினை கொண்டாடவுள்ளது.
  • வங்க தேசத்தின் சுதந்திர தினத்தின் 50 வது பொன் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து வங்க தேசமாக உருவாகியுள்ளது.
  • இதன் 50 வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர ,மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக பிரதமர் வரும் மார்ச் 25 ஆம் தேதி வங்க தேசம் பயணிக்கவுள்ளார். இந்த நிகழ்விற்கு அடுத்து தாஹா – மேற்கு வங்கம் நியூ ஜைபல்பூரி இடையேயான ரயில் சேவையினை துவக்கி வைக்கவுள்ளனர்.

வங்க தேசம் பற்றி

பிரதமர் – ஷேக் ஹசீனா

தலைநகரம் – டாக்கா

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

மாநில நிகழ்வுகள்

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஆதித்யநாத் “குர் மஹோத்சவத்தை” துவக்கி வைத்தார்!!

  • உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ மாவட்டத்தில் “குர் மஹோத்சவத்தை” துவக்கி வைத்தார். இந்த விழாவினை வெல்ல திருவிழா என்றும் அழைக்கின்றனர்.
  • தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவினை அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். சிறந்த முறையில் பாரம்பரிய இனிப்பான வெல்லத்தை தயாரிக்கும் விற்பனையாளர்களை ஊக்குவிப்பதும் வெல்லத்தின் குணநலன்களை மக்களுக்கு எடுத்துரைத்தவுமே இந்த விழாவின் நோக்கம் ஆகும்.

உத்தரபிரதேசம் பற்றி

முதல்வர் – யோகி ஆதித்யநாத்

ஆளுநர்- ஆனந்திபென் படேல்

தலைவர் – லக்னோ

பெண்களை ஊக்குவிக்க ரூ.14 கோடி நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்திய சென்னை ஐஐடி!!

  • இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி-மெட்ராஸ்) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்களிப்பை உயர்த்தும் புதுதிட்டத்தை சர்வதேச பெண்கள் தினத்தில் துவக்கியுள்ளது.
  • “பெண்கள் முன்னணி வகிக்கும் ஐஐடிஎம்” என்ற திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில் பெண்களின்  திறமையை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்படியும் ஐ.ஐ.டி-களின் பாலின விகிதத்தை மேம்படுத்துவதற்கும், ஐ.ஐ.டி-களின் பெண்களுக்கென 800 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடி பற்றி

நிறுவகிக்கப்பட்டது – 1959

தலைவர் – பவன் குமார்

ரூ 1,186 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்துள்ள பஞ்சாப் மாநில அரசு!!

  • பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 1.13 லட்சம் விவசாயிகளின் நலனுக்காக பஞ்சாப் மாநில அரசு நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
  • இந்த பட்ஜட்டினை அந்த மாநிலத்தின் நிதியமைச்சர் மன்ப்ரித் சிங் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் 2020 – 2021 ஆண்டிற்கான பட்ஜெட் ஆகும்.
  • இத்துடன், நிலம் அல்லாத விவசாயிகளுக்கு என்று 526 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் பற்றி

முதல்வர்- அமரீந்தர் சிங்

ஆளுநர்- வி. பி. சிங் பட்னோர்

தலைநகரம் – சிம்லா

Download TNPSC Notification 2021 

விளையாட்டு நிகழ்வுகள்

ரேங்கிங்” மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஞ்சரங் புனியா தங்கம் வென்று சாதனை!!

  • இத்தாலியில் நடந்த “ரேங்கிங்” மல்யுத்த போட்டியில் இந்திய வீரரான பஞ்சரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் 65 கி.கி எடை பிரிவில் பங்கேற்று வெற்றி அடைந்துள்ளார்.
  • உலக தரவரிசை பட்டியலில் 14 புள்ளிகளுடன் முன்னேறி இவர் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டிகளில் இந்தியாவின் வீரர்கள் மொத்தமாக 8 பதக்கங்களை வென்றுள்ளனர்.

அவர்கள்,

தங்கம் – வினேஷ் போகாட் & பஜ்ரங் புனியா

வெள்ளி – சரிதா மோர்

வெண்கலம் – விஷால் காளிரமணா, அர்ஜுன், நீரஜ், குல்தீப் & நவீன்

சர்வதேச குத்து சண்டை போட்டியில் தங்கம் வென்ற மனிஷ் கௌஷிக்!!

  • பக்ஷம் சர்வதேச குத்து சண்டை போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடை பிரிவு போட்டியில் இறுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் மனிஷ் கௌஷிக் தங்க பதக்கம் வென்றுள்ளார். இவர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் பதக்கம்

  • மனிஷ் கௌஷிக் – 63 கிலோ ஆண்கள் பிரிவு

வெள்ளி பதக்கம்

  • விகாஸ் கிரிஷன் – 69 கிலோ ஆண்கள் பிரிவு
  • பூஜா ராணி – 75 கிலோ பெண்கள் பிரிவு
  • மல்லிகை – 57 கிலோ பெண்கள் பிரிவு
  • சிம்ரன்ஜித் கவுர் – 60 கிலோ பெண்கள் பிரிவு
  • முகமது ஹுசாமுதீன் – 57 கிலோ ஆண்கள் பிரிவு
  • ஆஷிஷ் குமார் – 75 கிலோ ஆண்கள் பிரிவு
  • சுமி சங்வான் – 81 கிலோ ஆண்கள் பிரிவு
  • சதீஷ்குமார் – 91 கிலோ ஆண்கள் பிரிவு

வெண்கல பதக்கம்

  • மேரி கோம் – 51 கிலோ பெண்கள் பிரிவு

மரணங்கள்

அறிவியல் தமிழறிஞர் இராம. சுந்தரம் மரணம்!!

  • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை தலைவராக பணியாற்றிய அறிவியல் தமிழறிஞர் இராம. சுந்தரம் தனது 83 வது வயதில் மரணம் அடைந்துள்ளார்.
  • 1981 ஆம் ஆண்டு இவர் தஞ்சாவூர் தமிழ்வளர்ச்சித்துறை பல்கலைக்கழத்தின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் 10க்கும் மேற்பட்ட புத்தகங்ளை எழுதியுள்ளார். இவர் 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

Download CA Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!