Daily Current Affairs March 10, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs March 10, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs March 10, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Daily Current Affairs March 10, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10 மார்ச் 2021

 தேசிய நிகழ்வுகள்

உத்திரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்துள்ளார்!!

  • உத்திரகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் யாரும் எதிர்பாராத வகையில் ராஜினாமா செய்துள்ளார். இவர் மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
  • தற்போது இதன் காரணமாக உத்திரகண்ட் அமைச்சரவையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • உத்திரகண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை வெளியிட்டார் பிரதமர் மோடி!!

  • ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் பற்றி 21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
  • ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் ஜம்மு காஷ்மீரின் தர்மார்த் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கரண் சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  • கீதையை ஆழ்ந்து படிக்க ஆயிரக்கணக்கான அறிஞர்கள் தங்களின் முழு வாழ்வையும் அர்ப்பணித்துள்ளனர் என்றும்,  இதை ஒரு வேதத்தின் ஒவ்வொரு வசனத்திலும் வெவ்வேறு விளக்கங்களின் பகுப்பாய்வு மற்றும் பல விசித்திரமான விஷயங்களின் வெளிப்பாடு ஆகியவற்றில் இதை தெளிவாகக் காண முடியும் என்று பிரதமர் முறை நிகழ்த்தினார்.

சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேதுவை பிரதமர் தொடங்கி வைத்தார்!!

  • இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். திரிபுராவில் ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
  • திரிபுரா மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வங்கதேச பிரதமரின் காணொலி செய்தி நிகழ்ச்சியின் போது ஒளிபரப்பப்பட்டது. வங்க தேசம் மற்றும் இந்தியாவை இணைக்கும் பேனி நதியின் மேல் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் 1.5 கிலோமீட்டர் அளவு நீளம் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.

வங்க தேசம் பற்றி

பிரதமர் – ஷேக் ஹசினா

தலைநகரம் – டாக்கா

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

92 மெகாவாட்-திட்டங்களுக்காக ஐனாக்ஸ் விண்ட் ஒருங்கிணைந்த எரிசக்தி உள்கட்டமைப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

  • ஐனாக்ஸ் விண்ட் நிறுவனம் 92 மெகாவாட் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த எரிசக்தி உள்கட்டமைப்புடன் (Integrum Energy Infrastructure) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த திட்டங்கள் மூலமாக 2 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலைகள் 113 மீட்டர் ரோட்டார் விட்டதுடனும், 92 மீட்டர் மைய உயரத்துடனும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஐனாக்ஸ் விண்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு இந்த காற்றாலைகளை வழங்கும்.

ஐனாக்ஸ் விண்ட் நிறுவனம் பற்றி

தலைமையகம் – இந்தியா

தலைவர் – கைலாஷ் தாரச்சந்தனி

நிர்வகிக்கப்பட்டது – 2009

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைச்சகம் இன்வெஸ்ட் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைச்சகம் இன்வெஸ்ட் இந்தியாவுடன் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காகவும், திறன் வளர்ப்பிற்காகவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் ஊட்டச்சத்து, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, பெண்கள் அதிகாரம் மற்றும் மிஷன் பயன்முறையில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு ஆகியவையே ஆகும்.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அதிதி தாஸ் ரவுத் மற்றும் இன்வெஸ்ட் இந்தியாவின் துணைத் தலைவர் ஹிந்தோல் சென்குப்தா ஆகியோர் தலைமையில் கையெழுத்திடப்பட்டது.

குழந்தைகள் நல பாதுகாப்பு அமைச்சகம் பற்றி

நிர்வகிக்கப்பட்டது – 2006

தலைமையகம் – புது டெல்லி

Download TNPSC Notification 2021 

JMC Projects இந்திய நிறுவனம் மாலத்தீவு நாட்டின் கட்டமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது!!

  • JMC Projects என்னும் இந்திய நிறுவனம் மாலத்தீவு நாட்டின் கட்டுமான நிறுவனமான Fahi Dhiriulhun Corporation உடன் 2000 வீடுகளை வடிவமைக்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 137 கோடி டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் பிரபலமான ஒரு பைனாஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த திட்டத்திற்கான பணம் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நிதி தேவைகள் பூர்த்தியானதும் இந்த திட்டத்திற்கான கட்டுமானம் துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

JMC Projects நிறுவனம் பற்றி

நிர்வகிக்கப்பட்டது – 1982

தலைவர் – ஷைலேந்திர குமார் திருப்பதி

விளையாட்டு நிகழ்வுகள்

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்தியாவின் அஸ்வின் தேர்ந்தெடுப்பு!!

  • சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து நாட்டிற்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக விளையாடியதற்காக அவர் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக சர்வதேச கிரிக்கெட் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சென்னையில் நடைபெற்ற இரெண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் 2வது இன்னிங்ஸில் 106 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அந்த போட்டியின் போது அவர் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் அஸ்வின் 174 ரன்கள் சேர்த்ததுடன் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஒரு மனதாக ஐசிசி அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி பற்றி

நிர்வகிக்கப்பட்டது – 1909

தலைவர் – கிரெக் பார்க்லே

சிஇஓ – மனு சாவ்னி

டி 20 தரவரிசை இந்தியாவின் ஷிபாலிக்கு 2 ஆம் இடம்!!

  • மகளிருக்கான சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் டி 20 தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஷிபாலி வர்மா ஓரிடம் முன்னேறி 744 புள்ளிகளுடன் 2 வது இடத்தினை பிடித்துள்ளார்.
  • அதே பிரிவில் பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிரிதி மாந்தனா 693 புள்ளிகளுடன் 7 இடத்தில் உள்ளார்.
  • அழ ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா 304 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளார்.

சேஸிங்கில் மந்தனா உலக சாதனை!!

  • தென் ஆப்பிரிக்க அணியுடன் நேற்று நடத்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா அட்டமிழக்காமல் 80 ரன்களை விளாசி தள்ளினார்.
  • இதன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் இலக்கை துரத்தும் போது தொடர்ச்சியாக 10 முறை 50+ ஸ்கோர் அடித்த முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
  • இவரது சாதனையை எந்த கிரிக்கெட் வீரரோ அல்லது வீராங்கனையையோ நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நாட்கள்

No Smoking Day 2021!!

  1. இன்று சர்வதேச புகைபிடித்தல் எதிர்ப்பு தினம் ஆகும். இந்த தினத்தில் மக்கள் புபுகைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
  2. அதே போல் புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து எப்படி மீண்டு வரலாம் என்பது குறித்தும் விளக்கப்படுகின்றது.
  3. மக்களுக்கு இந்த பழக்கம் மூலமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் உணர்த்த இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
  4. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரெண்டாம் புதன்கிழமையில் கொண்டாடப்படுகின்றது.

Download CA Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!