Daily Current Affairs June 3 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

1
Daily Current Affairs June 3 2021 in Tamil
Daily Current Affairs June 3 2021 in Tamil

                                    தினசரி நடப்பு நிகழ்வுகள் – 3 ஜூன் 2021

Top Current Affairs June 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தேசிய  நிகழ்வுகள்:

மத்திய சுகாதார துறை அமைச்சகம் 30 கோடி கோவிட் -19 தடுப்பூசி உற்பத்திகளுக்காக ஹைதராபாத்திலுள்ள பயோலொஜிக்கல் – இ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

  • மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 30 கோடி  கோவிட் -19 தடுப்பூசி உற்பத்திக்காக பயோலொஜிக்கல்-இ நிறுவனத்துடன் ஓப்பந்தம் மேற்கொண்டுள்ளது , அதற்கு முன் தொகையாக ரூ 1500 கோடியை மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு அளித்துள்ளது.
  • தடுப்பூசி உற்பத்திக்கான கால அளவாக ஆகஸ்ட் – டிசம்பர் 2021 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • பயோலொஜிக்கல்- இ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியானது COVID-19 க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு வால் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பீஹார் மாநில அரசு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பெண்களுக்கு33 % இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது 

  • பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் அறிக்கையின் படி அம்மாநிலத்திலுள்ள பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .
  • பெண்களுக்கான உயர்கல்வி விகிதத்தை அதிகரிப்பது மற்றும் பெண்களை உயர் கல்வியில் சேர ஊக்குவிப்பது போன்ற நோக்கங்களை   இத்திட்டம் கொண்டுள்ளது.

மனித உரிமைகள் குழுவின் (HUMAN RIGHTS COMMISSION) புதிய தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இந்திய மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவராக ஜூன் 2 ஆம் தேதி டெல்லியில் பதவியேற்றுள்ளார்.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பாரத்  பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி சோதனையானது பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

  • குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி சோதனையானது பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று தொடங்கப்பட்டுள்ள்ளது இதற்கென 15 தன்னார்வல குழந்தைகள்  தேர்வு செய்யப்பட்டு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளனர்.

வேளாண் துறை அமைச்சகத்தின் மூலமாக விதைப் பெட்டக திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • விதை பெட்டக திட்டமானது வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களால் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இத்திட்டத்தின் நோக்கமானது  உயர் விளைச்சல் தருகின்ற உற்பத்தி விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதாகும்.

தேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக தனது பங்கை வெற்றிகரமாக முடித்தார்.

  • தேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக தனது பங்கை வெற்றிகரமாக முடித்தார், மேலும் அவர் ஜூன் 2 அன்று வீடியோ கான்ப்ரென்ஸ் மூலம் உலக சுகாதார அமைப்பின் 149 வது அமர்வு, நிர்வாக சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
சர்வதேச நிகழ்வுகள்:

ரஷ்ய விண்வெளி வீரர்கள் தங்கள் விண்வெளிப் பயணத்தை பன்னாட்டு விண்வெளி மையத்தில் நிகழ்த்தியுள்ளனர்.

  • ரஷ்ய விண்வெளி வீரர்களான ஒலெக் நோவிட்ஸ்கி மற்றும் பியோட்ர் டுப்ரோவ் ஆகியோர் பன்னாட்டு விண்வெளி மையத்தில் 7 மணி நேரத்திற்கும் மேலாக தங்கள் விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொண்டனர்.

ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் கார்க் தீ விபத்த்திற்கு உள்ளாகி ஓமான் வளைகுடாவில் மூழ்கியது.

  • 1977 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கார்க் போர்  கப்பலானது  ராணுவத்திற்கு எரிபொருள், உணவு மற்றும் பிற உதவிகளை வழங்கி  வந்தது.
Download TNPSC Notification 2021 

வெள்ளி கிரகத்திற்கான தங்களது புதிய விண்வெளி திட்டத்தினை நாசா அறிவித்துள்ளது இத்திட்டமானது ஒரு ரோபோடிக் திட்டமாகும் .

  • வெள்ளி கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் புவியியல் அம்சங்களை ஆராய ஒரு புதிய ரோபாட்டிக்ஸ் திட்டத்தினை தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் அறிவித்துள்ளது .
  • இந்த ரோபோடிக்ஸ் திட்டத்திற்கு டாவின்சி+ மற்றும் வெரிடாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டமானது 2028 முதல் 2030 க்குள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாராளுமன்றத்தின் 11 ஆவது பிரதமராக ஐசக் ஹெர்ஸ்வ்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • இவர் முன்னாள் தொழிலாளர் நல தலைவராக இருந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கென்யாவின் சுகாதார அமைச்சகத்தின் சுகாதார இயக்குநர் டாக்டர் பேட்ரிக் அமோத் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் 149 வது அமர்வின் போது, ​​மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக டாக்டர் பேட்ரிக் அமோத் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
பொருளாதார நிகழ்வுகள்:

தூய்மையான ஆற்றல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு மற்றும் விரைவு படுத்துவதற்கான உலகளாவிய முன்முயற்சியான திட்டத்தினை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இத்திட்டமானது சிலியின் பூஜ்ய இணைய சமர்ப்பின் மூலமாக ஜூன் 2 ல் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகம் MODEL TENANCY ACT” எனப்படும் மாதிரி குத்தகை சட்டத்திற்கு   ஒப்புதல் அளித்துள்ளது.

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தச் சட்டம் நாட்டில் வாடகை வீடுகளை ஊக்குவிக்கும் என்றும், ‘வாடகைக்கு கிடைக்கும் 1.1 கோடி காலியான வீடுகள் 2022 க்குள் பிரதமரின் ‘அனைவருக்கும் வீட்டுவசதி’ திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்  என்றும் கூறினார்.

இந்தியாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் குறியீட்டின் மூன்றாவது பதிப்பை இன்று நிதி  ஆயோக் வெளியிட்டுள்ளது.

  • இந்தியாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் குறியீட்டின் அறிக்கையினை நிதி  ஆயோக்-ன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார்.
  • அறிக்கையின்படி, நாட்டின் ஒட்டுமொத்த எஸ்டிஜி மதிப்பெண் 6 புள்ளிகள் அதிகரித்துள்ளது, இது 2019 ல் 60 ஆக இருந்து 2020-21ல் 66 ஆக உயர்ந்துள்ளது.
விளையாட்டு நிகழ்வுகள்:

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ஹாக்கி அணியின் உலக தரவரிசை பட்டியலை  இன்று வெளியிட்டது.

  • இந்த தரவரிசையில் இந்திய ஆண்கள்ஹாக்கி  அணி 4 வது இடத்தையும் மகளிர் ஹாக்கி அணி 9 வது இடத்தையும் பிடித்தது.
  • பெல்ஜியம் முதலிடத்தைப் பிடித்து அட்டவணையில் முன்னிலை வகிக்கிறது.
முக்கிய தினங்கள்:

ஜூன் 2 – தெலுங்கானா மாநிலம் உருவாக்கபட்ட தினம்:

  • ஜூன், 2 2014 அன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் தெலுங்கானா இருந்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. எனவே ஜூன் 2 ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம் உருவாக்கபட்ட தினமாக கொண்டாடப்படுகின்றது.
  • ஜூன் 2 – உலக மிதிவண்டி தினம்
  • ஜூன் 3 – தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த தினம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!