நடப்பு நிகழ்வுகள் ஜூன் 21, 2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 19, 2018

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

முக்கியமான நாட்கள்

ஜூன் 21 – சர்வதேச யோகா தினம்

2018 தீம் – “Yoga for Peace”

 • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 மற்றும் நடைபெறும் உலகளாவிய நிகழ்வு இது, யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவதே இதன் நோக்கமாகும்.

ஜூன் 21 – உலக ஒட்டகச் சிவிங்கி தினம்

 • உலக ஒட்டகச் சிவிங்கி தினம் ஒட்டகச்சிவிங்கிக்கு ஆதரவை உயர்த்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் காடுகளில் இந்த விலங்குகள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றிய ஆழமான புரிதலை வழங்குதல் ஆகும்.

ஜூன் 21 – உலக இசை தினம்

 • உலக அளவில் ஜூன் 21 ஆம் தேதி தான் உலக இசை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 21 – சுத்தமான காற்று தினம் 2018

 • இந்த சிறப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாட்டு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் பல்வேறு வழிகளில் மக்கள் காற்றை தூய்மையாக வைத்துக் கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கொண்டாடப்படுகிறது.

தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்

4 வது சர்வதேச யோகா தினம்

 • 4வது சர்வதேச யோகா தினம் உத்தரகண்ட் டெஹ்ராடூன், வன ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. பிரதம மந்திரி 50,000 யோகா ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் யோகா செய்தார்.

ராஜஸ்தான்

கோட்டா நகரத்தில் கின்னஸ் உலக சாதனை உருவாக்கப்பட்டது

 • ராஜஸ்தான் கோட்டா நகரத்தில் சர்வதேச யோகா தினத்தின் நான்காவது பதிப்பைக் குறிக்க 05 லட்சம் பேர் யோகா செய்து கின்னஸ் உலக சாதனை உருவாக்கப்பட்டது.

கேரளம்

கேரளாவில் தோட்டக்கலை வரி ரத்து

 • தோட்டத் துறையில் இருந்து விவசாய வருவாய் வரி (ஏஐடியை) சேகரிப்பதை கேரள அரசு நிறுத்த முடிவு செய்கிறது.
 • தோட்டக்கலை வரி வசூல் செய்யும் நாட்டின் ஒரே மாநிலம் கேரளா ஆகும்.

சர்வதேச செய்திகள்

சுரினாமில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்

 • இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், ஜூன் 21, 2018 இல் சுரினாமில் அந்நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடினார்.
 • ஜனாதிபதி – டிசைரே டெலோனோ பூடர்ஸ்
 • துணை ஜனாதிபதி – மைக்கேல் அஸ்வின் ஆதின்

நியூயார்க் நகரில் இயற்கை சிகிச்சை மையம்

 • அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இயற்கைச் சிகிச்சை மையத்தை பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.

பெண்கள் விளையாட்டு அரங்கத்துள் நுழைவதை ஈரான் அனுமதி

 • தெஹ்ரானின் மிகப்பெரிய கால்பந்து மைதானம் 1979ல் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்கள் விளையாட்டு அரங்கத்தினுள் நுழைய ஈரான் அனுமதி.

குழந்தை பெற்ற நியூசிலாந்தின் பெண் பிரதமர்

 • நியூசிலாந்தின் பிரதமர் ஜசிண்டா ஆர்டெர்ன் பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்ற இரண்டாவது பெண் தலைவரானார்.

அறிவியல் செய்திகள்

கோகோ, கொரில்லா 46 வயதில் இறந்தது

 • கொரில்லா அறக்கட்டளை 46 வயதான கோகோ என்ற பெயரைக் கொண்ட சைகை மொழி அறிந்த மேற்கு பள்ளத்தாக்கு கொரில்லா இறந்ததாக அறிவித்தனர்.

முதன்முறையாக இரு மாநிலங்களுக்கு இடையில் புலிகள் அறிமுகம்

 • மத்திய பிரதேச மாநிலத்தில் கன்ஹா டைகர் ரிசர்விலிருந்து மூன்று வயதுடைய புலி T-2, முதல் முறையாக ஒடிசாவின் சாட்கோசியா டைகர் ரிசர்வ்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் ஒப்பந்தம்

 • இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் நிலையான நீர் வளர்ச்சிக்கு பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்.

மாநாடுகள்

விரல் அச்சுப் பணியகத்தின் 19 ஆவது இயக்குநர்கள் இந்திய மாநாடு

 • முதல் முறையாக ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் மாநாட்டில் விரல் அச்சு அடையாள அமைப்புகள் மற்றும் மாநில விரல் அச்சுப் பணியகத்தின் நவீனமயமாக்கப்படுதல் குறித்து விளக்கம்.

திட்டங்கள்

தேசிய விருதுகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டல்கள்

 • தேசிய விருதுகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான புதிய வழிமுறைகளை மனித வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது ஒரு புதிய முன்முயற்சியாகும், முந்தைய நுழைவுகளை மாநில அரசு தேர்வு செய்தது.

காண்டீபம் திட்டம்

 • 2021 க்குள் தடகளத்தில், 2022 ஆம் ஆண்டில் ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில், 2024 ஒலிம்பிக்கில் போட்டியிட மற்றும் 2028 ஆம் ஆண்டில் பதக்கங்களை வென்றெடுக்கவும் ஆந்திரப்பிரதேசம் நாட்டில் முதலிடம் பெறுவதுதான் இந்த திட்ட த்தின் நோக்கமாகும்

தரவரிசை & குறியீடு

யுஎஸ் இல் சிறந்த 100 பிராண்டுகளில்  டி.சி.எஸ்.

 • 58 வது ரேங்க்டாடா கன்சல்டன்சி சர்வீஸ் லிமிடெட் (டிசிஎஸ்)

.நா. அறிக்கை : 2017ல் உலகளாவிய அகதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்

 • உலகளாவிய அகதிகளின் எண்ணிக்கையானது ஆண்டுதோறும் 13% உயர்ந்து 2017 ல்4 மில்லியனை எட்டியுள்ளது, ஐ.நா. அறிக்கை

விருதுகள்

 • பிரதமர் விருது – நாஷிக்கின் விஷுவஸ் மண்டலிக் மற்றும் மும்பையில் உள்ள யோகா நிறுவனம் (யோகா ஊக்குவிப்பிற்கும் மேம்பாட்டிற்கும் சிறந்த பங்களிப்பு)

இந்தியா ஸ்மார்ட் நகரங்கள் விருது – 2018

 • சூரத் ஸ்மார்ட் சிட்டி – ‘சிட்டி விருது
 • போபால் மற்றும் அகமதாபாத் – ‘புதுமையான ஐடியாவிருது

நியமனங்கள்

 • டாக்டர் அத்துல் கவாண்டேஅமேசான், பபெட், ஜேபி மோர்கன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட உடல்நல நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

உழவன் செயலி

 • விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற பெயரில் செல்போன் ஆப் அறிமுகம்.
 • உழவன்’ மொபைல் ஆப் மூலம் வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர்காப்பீடு விவரங்களை அறியலாம்.

ஹரியாலி

 • பஞ்சாப் மாநில அரசு இலவச மரக்கன்றுகளைப் பெற ‘ஐ-ஹரியாலி’ எனும் மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டு செய்திகள்

 • மகளிர் பிரிவில் சோனியா லதர் (57 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), ஆண்கள் பிரிவில் ஹிமான்ஷூ சர்மா (49 கிலோ), ஆஷிஷ் (64 கிலோ) ஆகியோர் உலான்பாடார் சர்வதேச குத்துசண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினர்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here