Daily Current Affairs July 31 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 31 2021 in Tamil
Daily Current Affairs July 31 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 31 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

வியட்நாமின் பிரதமராக பாம் மின் சின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • ஹனோயில் நடந்த 15 வது தேசிய சட்டசபையின் தேர்தலில் வியட்நாமின் பிரதமராக பாம் மின் சின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வியட்நாம்

  • தலைநகரம்: ஹனோய்
  • நாணயம்: வியட்நாமிய டாங்
  • பிரதமர்: பாம் மின் சின்

லெபனான் நாட்டின் புதிய அதிபராக நஜிப் மிகடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • லெபனான் நாட்டின் கோடீஸ்வரர் தொழிலதிபர் நஜிப் மிகடி லெபனானின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னாள் அதிபர் நவாஃப் சலாம் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.மிகடி கிட்டத்தட்ட 72 வாக்குகளை பெற்று புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லெபனான்

  • தலைநகரம்: பெய்ரூட்
  • நாணயம் :லெபனான் பவுண்டு
  • ஜனாதிபதி : மைக்கேல் அவுன்
  • பிரதமர் :நஜிப் மிகடி
 தேசிய நிகழ்வுகள்

‘வேளாண் துறைக்கான தகவல் கொள்கை ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • ‘வேளாண் துறைக்கான தகவல் கொள்கை ஒன்றை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
  • தேசிய விவசாயிகள் பதிவேடு ஒன்றை உருவாக்கவும் அதில் விவசாயிகளின் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட விவசாய நிலப் பதிவு விவரங்களை சேர்க்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • தற்போது வேளாண் துறை மற்றும் அரசின் பல்வேறு பதிவுகளில் பொதுப்படையாக இடம்பெற்றிருக்கும் விவரங்களை கொண்டு விவசாயிகளின் பதிவேடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • விவசாயிகளின் செலவினத்தை குறைத்து, அவர்களின் வருவாயை அதிகரிக்கச் செய்வதோடு, விளைபொருள்களின் தரத்தை உயர்த்துவதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.

அசாம் – மிசோரம் எல்லை பிரச்சனை

  • அசாம், மிசோரம் மாநிலங்களுக்கிடையேயான எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவிவரும் நிலையில், வட கிழக்கு இந்தியா ஒன்றாகவே இருக்கும் என மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
  • மிசோரம் எல்லை கிராம மக்கள், காவல்துறையினர் மற்றும் அசாம் எல்லை கிராம மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த சில நாட்களாகவே அங்கு பதற்றம் நிலவுகிறது.

அசாம்

  • தலைநகரம் :திஸ்பூர்.
  • முதல்வர்: ஹிமந்தா பிஸ்வா சர்மா
  • ஆளுநர்: ஜெகதீஷ் முகி

மிசோரம்

  • தலைநகரம் :ஐஸ்வால்.
  • முதல்வர் :ஜோரம்தாங்க
  • ஆளுநர் :ஹரி பாபு கம்பம்பட்டி.

ராஜஸ்தான் அரசு “மிஷன் நிர்யதக் பானோ”  என்னும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

  • ராஜஸ்தானில் இருந்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ராஜஸ்தான் அரசு “மிஷன் நிர்யதக் பானோ” ஐ அறிமுகப்படுத்துகிறது
  • ராஜஸ்தான் அரசாங்கத்தின் தொழில்துறை துறை மற்றும் ராஜஸ்தான் மாநில தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு நிறுவனம் (RIICO) ராஜஸ்தானில் ஆர்வமுள்ள ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காக ‘மிஷன் நிரயதக் பானோ’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.
  • இந்த பிரச்சாரம் உள்நாட்டு வர்த்தகர்களை தங்கள் வணிகத்தை வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்கு ஆறு படிகளில் பதிவு செய்வதையும் கையளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ராஜஸ்தான்

  • தலைநகர்: ஜெய்ப்பூர்
  • முதல்வர்: அசோக் கெலாட்
  • கவர்னர்: கல்ராஜ் மிஸ்ரா
 மாநில நிகழ்வுகள்

போலீஸாருக்கு கட்டாயம் வார விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

  • தமிழக போலீஸாருக்கு கட்டாயம் வார விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
  • காவலர்கள் தங்கள் உடல் நலனை கவனித்து கொள்ள ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகை நேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு தொடங்கப்பட்டுள்ளது.

  • சங்ககாலக் கோட்டை இருந்த இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
  • கோட்டை, கொத்தளங்களோடு உள்ள இந்த அகழாய்வுப் பணிக்கு இந்தியத் தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
  • அங்கு தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட மேலாய்வின்போது கருப்பு, ஊதா வண்ணவளையல்களின் உடைந்த பகுதிகள், உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட இரும்புத் துண்டுகள், நிறமற்றகண்ணாடி படிகம், குறியீடுகளுடன்கூடிய பானை ஓடுகள் கிடைத்தன.
  • சங்க காலத்தைச் சேர்ந்தபச்சை, கருஞ்சிவப்பு, ஊதா, பழுப்பு, கருப்பு, இளமஞ்சள் வண்ணங்களில் மணிகள் கிடைத்துள்ளன.
 விருதுகள்

சத்புரா புலிகள் காப்பகம் சிறந்த மேலாண்மைக்கான நாட்வெஸ்ட் குரூப் எர்த் ஹீரோஸ் விருதை வென்றுள்ளது.

  • மத்தியப் பிரதேசத்தின் சத்புரா புலிகள் காப்பகம், சிறந்த நிர்வாகத்திற்கான எர்த் கார்டியன் பிரிவில் நேட்வெஸ்ட் குழு எர்த் ஹீரோஸ் விருதைப் பெற்றுள்ளது.
  • உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் (UNESCO) சத்புரா புலிகள் சரணாலயமும் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்

  • தலைநகரம்: போபால்
  • முதல்வர்: சிவராஜ் சிங் சவுகான்
  • கவர்னர்: மங்குபாய் சாகன்பாய் படேல்
 அறிவியல் & தொழிற்நுட்பம்

இந்தியா-இந்தோனேஷியா

  • இந்திய கடற்படை மற்றும் இந்தோனேசிய கடற்படைக்கு இடையேயான இந்தியா-இந்தோனேஷியா ஒருங்கிணைந்த ரோந்து (CORPAT) 36 வது பதிப்பு ஜூலை 30 மற்றும் ஜூலை 31 வரை நடைபெறுகிறது.
  • இந்திய கடற்படை கப்பலான உள்நாட்டில் கட்டப்பட்ட கடல் ரோந்து கப்பல் (ஐஎன்எஸ்) சரயு, இந்தோனேசிய கடற்படை கப்பலான கேஆர்ஐ பங் டோமோவுடன் 2021 ஜூலை 30 முதல் ஒருங்கிணைந்த ரோந்து (CORPAT) பணியை மேற்கொள்கின்றன.
  • இந்தியா மற்றும் இந்தோனேசியா 2002 முதல், வருடத்திற்கு இரண்டு முறை சர்வதேச கடல் எல்லைக் கோடு (ஐஎம்பிஎல்) வழியாக ஒருங்கிணைந்த ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இந்த முக்கியப் பகுதியை வணிகக் கப்பல், சர்வதேச வர்த்தகம் மற்றும் சட்டபூர்வமான நடத்தை ஆகியவற்றிற்காகப் பாதுகாக்கும் நோக்கத்துடன் கடல்சார் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.
  • இரு கடற்படைகளுக்கிடையேயான கடல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்தோ பசிபிக் முழுவதும் நட்புறவின் வலுவான பிணைப்புகளை உருவாக்கவும் முயல்கிறது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக “ரோபோ” மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் முதன்முறையாக “ரோபோ” மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைமையத்தை, சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ‘டிரிகா’ என்ற புதிய வகை துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட புதியரக துப்பாக்கி (டிரிகா) அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த புதியரக டிரிகா துப்பாக்கி 3.1 கிலோ எடை கொண்ட சிறியரக துப்பாக்கியாகும்.
  • டிரிகா துப்பாக்கி சுடும்போது ஏற்படும் ஒளியை மறைத்து, சப்தத்தை குறைத்து, மற்ற துப்பாக்கிகளை விட அதிகதூரத்துக்கு சுடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் – ஜோகோவிச்

  • ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்ததின் மூலம் கோல்டன் ஸ்லாம் வெல்லும் ஜோகோவிச்சின் கனவு தகர்ந்தது.
  • ஜெர்மனியின் 4-ஆம் நிலை வீரர் அலெக்சாண்டர் வெரேவ்-உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை தோற்க்கடித்து  இறுதிச் சுற்றுக்கு  முன்னேறியுள்ளார்.
  • இறுதி போட்டியில் அலெக்சாண்டர் வெரேவ் ரஷிய வீரர் காரன் கச்சனோவுடன் மோத உள்ளார்.
  • ஒரே ஆண்டில் ஆஸி. பிரெஞ்சு, விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகளில் பட்டம்,, ஒலிம்பிக் தங்கம் வென்றால் கோல்டன் ஸ்லாம் என்பர்.
  • கடந்த 1988-இல் ஜெர்மனி வீராங்கனை ஸ்டெப்பி கிராஃப் மட்டுமே கோல்டன் ஸ்லாம் சாதனையை நிகழ்த்தினார்.
  • இந்நிலையில் நிகழாண்டு ஆஸி., பிரெஞ்சு, விம்பிள்டன் போட்டிகளில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • தற்போது ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று, யுஎஸ் ஓபன் போட்டியிலும் பட்டம் வென்று கோல்டன் ஸ்லாம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தலாம் என்ற இலக்குடன் இருந்த ஜோகோவிச்சின் கனவு தகர்ந்தது.

 டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய வீரர்கள்

பி.வி.சிந்து

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஒற்றையர் பாட்மிண்டன் அரையிறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற்றார் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து.
  • காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அகேன் எமகுச்சியுடன் மோதி வென்றுள்ளார்.
  • அரையிறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை தைபேயின் டை சூவுடன் மோத உள்ளார்.
  • டை சூ கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ரவுண்ட் 16 சுற்று வரை வந்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் ரவுண்ட் 16 சுற்றில் சிந்துவிடம் தோற்று வெளியேறினார். தற்போது முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
  • இரண்டாவது அரையிறுதியில் சென் யூபை-ஹெ பிங்ஜியோ மோதுகின்றனர்.
  • உலக சாம்பியனான பி.வி.சிந்து ஏற்கெனவே கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

லவ்லினா போரோகைன்

  • இந்தியாவின் லவ்லினா போரோகைன், ஒலிம்பிக் போட்டி மகளிர் குத்துச்சண்டையில் 69 கிலோ வெல்டர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் சீன தைபேயின் நியன் சின்னை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளார்.
  • நடப்பு உலக சாம்பியன் துருக்கியின் பியுஸ்நாஸ் சர்மெனெல்லியை அரையிறுதிச் சுற்றில் எதிர்கொள்கிறார் லவ்லினா.
  • இதன் மூலம் வெண்கல பதக்க வாய்ப்பையும் உறுதி செய்துள்ளார். அஸ்ஸாமைச் சேர்ந்த 23 வயது லவ்லினா இரண்டு முறை உலகப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
  • ஏற்கெனவே 2008 ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங், 2021 ஒலிம்பிக்கில் மேரி கோம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர். தற்போது குத்துச்சண்டையில் லவ்லினா வெல்லும் 3-ஆவது பதக்கம் இதுவாகும்.

ஹாக்கி

ஆடவர் அணிகள்

  • ஹாக்கியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
  • காலிறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய ஆடவர் அணி ஜப்பான் அணியை
  • வீழ்த்தியது.
  • இந்திய அணி கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது.
  • இதுவரை ஒலிம்பிக் போட்டியில் 8 முறை தங்கம் வென்ற ஒரே அணி என்ற சிறப்பு இந்தியாவுக்கு உண்டு. கடந்த 1980-ஆம் ஆண்டுக்கு பின் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி எந்த பதக்கத்தையும் வெல்லவில்லை.

மகளிர் அணிகள்

  • மகளிர் பிரிவில் இந்தியா அயர்லாந்தை வீழ்த்தியது. இதன் மூலம் காலிறுதிச் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
  • தனது கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியா. இதில் கட்டாயம் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு இந்திய மகளிர் தகுதி பெறுவர்.
  • கடந்த 2016 ஒலிம்பிக் போட்டிக்கு 36 ஆண்டுகள் கழித்து தகுதி பெற்றது இந்தியா. தொடர்ந்து இரண்டாவது முறையாக டோக்கியோ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அவினாஷ் சாப்லே

  • டோக்கியோ பிரதான ஒலிம்பிக் மைதானத்தில் ஆடவர் 3000 மீ. ஸ்டீபிள் சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் சாப்லே அனைத்து ஹீட்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 13-ஆவது இடத்தையே பெற்றார். எனினும் 8:18:12 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தை கடந்து சாப்லே புதிய தேசிய சாதனையை படைத்தார்.
  • கடந்த மார்ச் மாதம் பெடரேஷன் கோப்பை போட்டியில் தான் நிகழ்த்தியை 8:20;20 நிமிஷ சாதனையை முறியடித்தார் சாப்லே.
முக்கிய தினங்கள்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி  பிறந்த தினம் – ஜூலை 30

  • முத்துலட்சுமி ரெட்டி ஜூலை 30 1886 தமிழ்நாட்டில் அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.
  • இந்தியாவின் முதல் பெண் எம்.எல்.ஏ. முத்துலட்சுமியின் 136-வது பிறந்த தினம் ஆகும்.

சாதனைகள்

  • புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்த முதல் மாணவி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர்.
  • 1927 முதல் 1930 வரை அவர் சென்னை மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார்.
  • சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவியை வகித்த முதல் பெண்மணி. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர். சென்னை மாகாண சமூக நல வாரியத்தின் முதல் பெண் தலைவர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் ஆகிய பதவிகளை வகுத்துள்ளார்.

சமூகம்

  • பெண்ணுரிமைக்காக போராடியவர்களில் முதன்மையானவர். பெண்களுக்கு ஓட்டுரிமையைப் போராடிப்பெற்றவர். பன்னெடுங் காலமாக இருந்துவந்த தேவதாசி முறையை ஒழிப்பு மசோதா கொண்டுவந்தவர்.இந்த மசோதா 1947 சென்னை தேவதாசிச் சட்டம் என்ற பெயரில் சட்டமானது.
  • அவ்வை விடுதியை 1930ல் பெண்களுக்காக தொடங்கினார். 1952 ம் ஆண்டு சென்னையில் அடையார் புற்றுநோய் மையத்தை ஏற்படுத்தினார்.
  • 1956-ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
  • 22, ஜூலை, 1968 அன்று முத்துலட்சுமி ரெட்டி உயிரிழந்தார்.

மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் – ஜூலை 30

  • ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 அன்று மனிதக் கடத்தல் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினம் 2013 இல் ஐநா பொதுச் சபையால் தொடங்கப்பட்டது.
  • 2021ன் கருப்பொருள் : “பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் வழி நடத்துகின்றன”

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!