Daily Current Affairs July 30 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 30 2021 in Tamil
Daily Current Affairs July 30 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 30 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

 சர்வதேச நிகழ்வுகள்

பிரேசிலில் உள்ள இயற்கை தோட்டம் சிட்டியோ பர்லே மார்க்ஸ், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்தைப் பெறுகிறது.

  • பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு இயற்கை தோட்டம் சிட்டியோ பர்லே மார்க்ஸ் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்த தளத்திற்கு கட்டிடக் கலைஞர் ராபர்டோ பர்லே மார்க்ஸ் பெயரிடப்பட்டது.
  • மேற்கு ரியோவில் உள்ள சிட்டியோ பர்லே மார்க்ஸ் ரியோவை பூர்வீகமாகக் கொண்ட 3,500 க்கும் மேற்பட்ட தாவரங்களைக் கொண்டுள்ளது, இது தாவரவியல் மற்றும் இயற்கை பரிசோதனைக்கான ஆய்வகமாகக் கருதப்படுகிறது.

பிரேசில்

  • தலைநகரம் : பிரேசிலியா
  • அதிபர் : ஜெய்ர் போல்சனாரோ
  • நாணயம் :பிரேசிலிய ரியல்
 தேசிய நிகழ்வுகள்

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி க்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் இதரபிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) 27 சதவீதமும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • நடப்பு 2021-22-ஆம் கல்வியாண்டு முதல் இந்த இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு வசதியாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையானது உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் கடந்த 1986-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இளநிலை படிப்புகளுக்கான இடங்களில் 15 சதவீதமும், முதுநிலை படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதமும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன.
  • அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடங்களில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்.சி) 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
  • மருத்துவப் படிப்புகளில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களைப் புகுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் 56 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • EWS– Economic Weeker Section
  • OBC – Other Backward Caste

புதிய கல்விக்கொள்கை

  • 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது.
  • மத்திய அரசின் சார்பில் 2019-ல் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.
  • பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, இந்தியாவை சர்வதேச அறிவுசார் வல்லரசாக மாற்றுவதே இக்கொள்கையின் நோக்கம் ஆகும்.
  • புதிய தேசிய கல்வி கொள்கை, தாய் மொழிக்கும், மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.

வித்ய ப்ரவேஷ் திட்டம்

  • நமது இளைஞர்களை எதிர்கால நோக்குடையதாகவும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருளாதாரத்துக்கான பாதையையும் ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது
  • 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டுகள் அடங்கிய 3 மாதக் கல்வித் திட்டமான வித்ய ப்ரவேஷ் உலகளாவிய திட்டமாக மாற்றப்பட்டு கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தடையின்றிக் கல்வி கிடைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அகாடமி ஆஃப் கிரெடிட்

  • பல்வேறு உயர் கல்விகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க அகாடமி ஆஃப் கிரெடிட் என்ற வங்கியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
  • உயர் கல்வியை சர்வதேச தரத்தில் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

Try Today Current Affairs Quiz

பொறியியல் படிப்புகளை மொழிமாற்றம் செய்ய பிரத்யேகக் கருவி

  • பொறியியல் படிப்புகளில் பிராந்திய மொழிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
  • இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்காள மொழிகளில் 8 மாநிலங்கள் 14 பொறியியல் கல்லூரிகளில் படிப்புகளைத் தொடங்க உள்ளன.
  • 11 இந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளை மொழிமாற்றம் செய்யவும் பிரத்யேகக் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

சைகை மொழி

  • முதல் முறையாக இந்திய சைகை மொழிக்கு, மொழிப் படிப்புக்கான தகுதி வழங்கப்பட்டுள்ளது.
  • சைகை மொழியை மாணவர்கள், ஒரு மொழிப் பாடமாகவே படிக்க முடியும். இதன் மூலம் நம்முடைய மாற்றுத்திறனாளி சகோதரர்கள் சிறப்பாகப் பயன்பெறுவர் என்று நரேந்திரமோடி கூறியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பிற்காக கேரள காவல்துறை ‘இளஞ்சிவப்பு பாதுகாப்பு’(Pink Production)  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • பொது, தனியார் மற்றும் டிஜிட்டல் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட ‘பிங்க் பாதுகாப்பு’ என்ற புதிய திட்டத்தை கேரள காவல்துறை தொடங்கியுள்ளது.
  • இந்த திட்டம் வரதட்சணை தொடர்பான பிரச்சினைகள், சைபர் கொடுமைப்படுத்துதல் மற்றும் பொது இடங்களில் அவமானப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • ‘பிங்க் பாதுகாப்பு’ திட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைத்தார்.

கேரளா

  • தலைநகரம்: திருவனந்தபுரம்
  • முதலமைச்சர்: பினராயி விஜயன்
  • ஆளுநர்: ஆரிப் முகமது கான்

சர்வதேச தூய்மையான காற்று வினையூக்கி திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய நகரமாக இந்தூர் திகழ்கிறது.

  • இந்தியாவின் தூய்மையான நகரமான இந்தூர் சர்வதேச தூய்மையான காற்று வினையூக்கி திட்டத்திற்கு இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நகரமாக உள்ளது.
  • இந்தூர் மாநகராட்சி மற்றும் மத்திய பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒத்துழைப்புடன் இந்தூரில் சுத்தமான மற்றும் தூய்மையான காற்றுக்காக 5 ஆண்டுகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  • சுத்தமான காற்று வினையூக்கி என்பது சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மற்றும் உலக வள நிறுவனம் (WRI) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் (EDF) தலைமையிலான உலகளாவிய நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.

மத்தியப் பிரதேசம்

  • தலைநகரம் : போபால்
  • முதல்வர்: சிவராஜ் சிங் சவுகான்
  • ஆளுநர்: மங்குபாய் சாகன்பாய் படேல்

ஆயுர்வேதத்தை மேம்படுத்தும் ‘தேவரண்ய யோஜனா’  என்னும் திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

  • மக்களின் உடல்நலம் மற்றும் பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான இரட்டை நோக்கங்களுடன் ஆயுஷ் அடிப்படையிலான பொருளாதார மேம்பாட்டுத் திட்டமான ‘தேவரண்ய யோஜனா’ என்னும் திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஆயுஷ் மற்றும் சுற்றுலாவை ஒன்றாக இணைத்து இந்த திட்டத்தின் மூலம் பழங்குடிப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சி ஆகும்.
 மாநில நிகழ்வுகள்

1000 ஆண்டுகள் பழமையான வணிக சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • பழனி அருகே கோதைமங்கலம் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான வணிக சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சித்திரமேழிப் பெரியநாட்டார் என்ற வணிககுழுவை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இக்குழு கி.பி 11ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்.
  • இந்த சின்னத்தின் மூலம் பழனி பகுதி பண்டைய காலத்தில் வணிகத்திலும் முக்கிய இடமாக இருந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
 விண்வெளி

இயற்கை பேரிடர்களை துல்லியமாக கணிக்கும் செயற்கைக்கோளை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

  • இயற்கை பேரிடர்களை துல்லியமாக கணிக்கும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இந்த ஆண்டு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • இஸ்ரோவின் பூமி கண்காணிப்புக்கான ஜியோ-இமேஜிங் செயற்கைக்கோள் இஓஎஸ்-3 ( EOS-03) செயற்கைகோள் தினமும் 4-5 முறை பூமியை படமெடுக்கும் திறனுடையது.
  • மேலும் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு இந்த வாகனம் ஏதுவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோ

  • தலைவர் : கைலாசவடிவு சிவ
  • தலைமையகம் : பெங்களூரு
  • ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1969
அறிவியல் / தொழிற்நுட்பம்

இந்திரா 2021 கடற்படை கூட்டுப்பயிற்சி

  • இந்திய கடற்படைக்கும் ரஷ்ய கடற்படைக்கும் இடையிலான இருபது ஆண்டு இருதரப்பு கடல் பயிற்சியான 12 வது பதிப்பு 2021 ஜூலை 28 முதல் 29 வரை ரஷ்யாவின் பால்டிக் கடலில் நடைபெற்றது.
  • இந்திரா கடற்படை கூட்டுப்பயிற்சி  2003 இல் தொடங்கப்பட்டது
  • ரஷ்ய கடற்படையின் 325 வது கடற்படை தின கொண்டாட்டங்களில் பங்கேற்க ஐ.என்.எஸ் தபார் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு விஜயம் செய்ததன் ஒரு பகுதியாக இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
  • இரு கடற்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பின் பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த பயிற்சி உதவுகிறது.
 விளையாட்டு

தேசிய பெண்கள் ஆன்லைன் செஸ் போட்டி

  • தேசிய பெண்கள் ஆன்லைன் செஸ் பட்டத்தை டெல்லியை சேர்ந்த வாண்டிகா அகர்வால் பெற்றுள்ளார்.
  • இரண்டாம் இடம் : அர்பிதா முகர்ஜி (மேற்கு வங்காளம் )
  • மூன்றாம் இடம் : ஸ்ரீஜா சேஷாத்ரி (தமிழ்நாடு )

டோக்கியோ ஒலிம்பிக்

ஆஸ்திரேலியா

  • கேனோ ஸ்லாலோம் எனப்படும் துடுப்புப் படகுப் போட்டியில் மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜெஸ்ஸிகா ஃபாக்ஸ் தங்கம் வென்றார்.
  • ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ள மகளிர் பிரிவில் தங்கம் வென்று அவர் வரலாறு படைத்துள்ளார்.
  • இங்கிலாந்தின் மல்லோரி ஃபிராங்கிளின் (108.68) வெள்ளியும், ஜெர்மனியின் ஆன்ட்ரியா ஹெர்ஸாக் (111.13) வெண்கலமும் வென்றனர்.
  • கேனோ ஸ்லாலோம் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவு நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக மகளிர் தனிநபர் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய வீரர்கள்

தீபிகா குமாரி

  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் வீராங்கனை தீபிகா குமாரி, ரஷ்யாவின் வீராங்கனை பெரோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

லவ்லினா

  • டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் மகளிர் குத்துச்சண்டைக்கான 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வீராங்கனை லவ்லினை, சீனா தைபே வீராங்கனை நின் சின் சென்-ஐ  வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா.
  • லவ்லினை அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு 2 ஆவது பதக்கம் உறுதியாகி உள்ளது.

ஹாக்கி ஆடவர் பிரிவு

  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்தியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
  • நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
  • கடந்த 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இதே நாளில் (ஜூலை 29) தான் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தது. அதுவே, ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வென்ற கடைசி தங்கமாகும்.
  • அதற்கு முன் 7 முறை தங்கம் வென்ற இந்தியா, 1980-க்குப் பிறகு ஒலிம்பிக்கில் ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளது.
முக்கிய தினங்கள்

சர்வதேச நட்பு தினம் – ஜூலை 30

  • நண்பர்களின் முக்கியத்துவத்தையும் வாழ்க்கையில் நட்பையும் குறிக்கும் வகையில் ஜூலை 30 அன்று சர்வதேச நட்பு தினம் கொண்டாடப்படுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களில் அமைதியை மேம்படுத்துவதில் நட்பு வகிக்கும் பங்கையும் இந்த நாள் பரிந்துரைக்கிறது.
  • 2021 ன் கருப்பொருள் : “ஆழமான சர்வதேச நட்பு”.

Try Today Current Affairs Quiz

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!