Daily Current Affairs July 28 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 28 2021 in Tamil
Daily Current Affairs July 28 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் துபாயில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

  • துபாயில் நாத் அல் செபா பகுதி அருகே உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • டீப் டைவ் என்ற நிறுவனம் இந்த நீச்சல் குளத்தை அமைத்துள்ளது.
  • இந்த நீச்சல் குளம் மொத்தம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்டது ஆகும்.இதில் மொத்த தண்ணீர் கொள்ளளவு 1 கோடியே 40 லட்சம் லிட்டர் ஆகும்.
  • அதாவது கிட்டத்தட்ட 6 ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் அளவாகும். இந்த ஆழமான நீச்சல் குளத்தில் ஹைப்பர் பேரிக் என்ற பகுதி உள்ளது. இதில் ஒரு நகரம் தண்ணீரில் மூழ்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

ஸ்வீடன் சர்வதேச சூரிய கூட்டணியில் (ISA) இணைகிறது

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முன்முயற்சியான சர்வதேச சூரிய கூட்டணிக்கான (ISA) கட்டமைப்பின் ஒப்பந்தத்தை முன்னணி ஐரோப்பிய நாடான சுவீடன் ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2040 க்குள் 100% புதுப்பிக்கத்தக்க மின்சார திறனை அடைவதற்கான லட்சிய இலக்கை ஸ்வீடன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுவீடன்

  • தலைநகரம் : ஸ்டாக்ஹோம்
  • நாணயம்: ஸ்வீடிஷ் க்ரோனா
  • பிரதமர்: ஸ்டீபன் லோஃப்வென்

சர்வதேச சூரிய சக்தி கூட்டணி

  • ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு : 2015
தேசிய நிகழ்வுகள்

கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மாநிலத்தின் 20-ஆவது முதல்வராக அவர் பதவியேற்கவிருக்கிறார்.
  • 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசுப் பொறுப்புகளில் வாய்ப்பு அளிப்பதில்லை என்ற பாஜகவின் விதிமுறையை ஏற்று, கட்சி மேலிடத்தின் விருப்பத்துக்கு இணங்க கர்நாடக மாநில முதல்வர் பதவியை பி.எஸ்.எடியூரப்பா (78) ராஜிநாமா செய்தார்.
  • பசவராஜ் பொம்மை ஜனதாதளத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கர்நாடக அரசியலில், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகௌடவின் மகன் எச்.டி.குமாரசாமிக்குப் பிறகு, முன்னாள் முதல்வரின் மகன் முதல்வராகப் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும்.

முதல்வராக பதவி வகித்த தந்தை- மகன்

தமிழ்நாடு

  • கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான வெவ்வெறு காலகட்டங்களில் தமிழ்நாட்டின் முதல்வராக திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி 5 முறை பதவி வகித்தார்.
  • தற்போது அவரின் மகன் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக தமிழ்நாட்டின் முதல்வராகியுள்ளார்.

கர்நாடகம்

  • முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவே கௌடா கர்நாடக முதல்வராகவும் 1994-1996-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.
  • அவரின் மகன் குமாரசாமியும் அந்த மாநில முதல்வராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.
  • கடந்த 1988-1989-ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக எஸ்.ஆர்.பொம்மை பதவி வகித்தார்.
  • அவரின் மகனான பசவராஜ் பொம்மை தற்போது அந்த மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரம்

  • கடந்த 2004-2009-ஆம் ஆண்டு வரை ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பதவி வகித்தார்.
  • அவரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் முதல் அந்த மாநில முதல்வராக உள்ளார்.

ஒடிஸா

  • கடந்த 1961-63 மற்றும் 1990-95-ஆம் ஆண்டுகளில் ஒடிஸா முதல்வராக பிஜு பட்நாயக் பதவி வகித்தார்.
  • அவரின் மகன் நவீன் பட்நாயக் கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது 5-ஆவது முறையாக அந்த மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

ஜம்மு-காஷ்மீர்

  • ஜம்மு-காஷ்மீரில் அப்துல்லா குடும்பத்தின் 3 தலைமுறையினர் முதல்வர் பதவியை வகித்துள்ளனர்.
  • அந்த வரிசையில் முதலில் இடம்பெற்றவர் ஷேக் அப்துல்லா.
  • அவரைத் தொடர்ந்து அவரின் மகன் ஃபரூக் அப்துல்லா.
  • ஃபரூக்கின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோர் ஜம்மு-காஷ்மீர் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.

உத்தர பிரதேசம்

  • உத்தர பிரதேச முதல்வராக முலாயம் சிங் யாதவ் 3 முறை பதவி வகித்தார்.
  • அவரின் மகன் அகிலேஷ் யாதவ் கடந்த 2012-2107-ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார்.

ஜார்க்கண்ட்

  • ஜார்க்கண்ட் முதல்வராக சிபு சோரன் 3 முறை பதவி வகித்தார்.
  • அந்த மாநிலத்தின் தற்போதைய முதல்வராக சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் உள்ளார்.
  • கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆவது முறையாக முதல்வர் பதவியேற்றார்.

அருணாசல பிரதேசம்

  • அருணாசல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவி வகித்து வரும் நிலையில்,
  • அவரின் தந்தை டோர்ஜி காண்டுவும் அந்த மாநில முதல்வராக இருந்துள்ளார்.
  • உத்தரகண்ட்
  • உத்தரகண்ட் முதல்வராக கடந்த 2012-2014- ஆண்டு வரை விஜய் பஹுகுணா பதவி வகித்தார்.
  • அவரின் தந்தை ஹேம்வதி நந்தன் பஹுகுணா உத்தர பிரதேச முதல்வராக பதவி வகித்தார்.

ஹரியாணா

  • ஹரியாணா முதல்வர்களாக தேவி லால், அவரின் மகன் ஓம் பிரகாஷ் சௌதாலா ஆகியோர் பதவி வகித்துள்ளனர்.

மகாராஷ்டிரம்

  • மகாராஷ்டிர முதல்வர்களாக சங்கர்ராவ் சவாண், அவரின் மகன் அசோக் சவாண் ஆகியோர் பதவி வகித்துள்ளனர்

முதல்வராக பதவி வகித்த தந்தை – மகள்

  • முதல்வர்களாக தந்தையும் மகனும் மட்டுமன்றி தந்தையும் மகளும் பதவி வகித்துள்ளனர்.
  • ஜம்மு-காஷ்மீர் முதல்வராக முஃப்தி முகமது சயீத் இருந்த நிலையில், அவரின் மகள் மெஹபூபா முஃப்தியும் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

முதல்வராக பதவி வகித்த தந்தை – மருமகன்

  • ஆந்திர முதல்வராக என்.டி.ராம ராவ் பதவி வகித்துள்ள நிலையில், அவரின் மருமகனான சந்திரபாபு நாயுடுவும் முதல்வராக இருந்துள்ளார்.

முதல்வராக தந்தை, துணை முதல்வராக மகன்

  • தமிழ்நாட்டின் முதல்வராக மு.கருணாநிதி இருந்துபோது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக பதவி வகித்துள்ளார்.
  • பிகாரில் லாலு பிரசாத் யாதவ் முதல்வரான நிலையில், அவரின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானார்.
  • பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக இருந்தபோது அவரின் மகன் சுக்பிர் சிங் பாதல் துணை முதல்வராக இருந்தார்.

5 நாள் சுற்றுப்பயணமாக  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ்நாட்டிற்கு வருகை புரிய உள்ளார்.

  • ஆகஸ்ட் 2-ம் தேதி வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
  • மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 ஆம் தேதி சட்ட சபையில் கருணாநிதியின் உருவ படத்தை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
  • அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்க்கு வருகை புரிய உள்ளார்.
  • குன்னூர் வெலிங்டன் ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 3-ந் தேதி ஊட்டி வருகிறார். மேலும் அங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளார்.

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவீரா சேர்க்கப்பட்டுள்ளது.

  • உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலாவீரா நகரை யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் கலாசார அமைப்பு சேர்த்துள்ளது.
  • தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள ராமப்பா கோயில் உலக பாரம்பரிய பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும் தோலாவீரா நகரை உலக பாரம்பரிய பட்டியலில் யுனெஸ்கோ ​சேர்த்துள்ளது.
  • இத்துடன் சேர்த்து உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் நம் நாட்டின் 40 இடங்கள் இடம் பெற்றுள்ளன
மாநில நிகழ்வுகள்

தகைசால் தமிழர் விருது

  • தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் விருது உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
  • தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
  • இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்ய முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் தேர்வு செய்யப்படும் தகைசால் தமிழர் விருது பெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் சுதந்திர தின விழாவின் போது முதல்வரால் அளிக்கப்படும்.

‘மக்களை தேடி மருத்துவம்’ எனும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது.

  • நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மருந்து-மாத்திரைகளை அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் தான் இந்த ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்.
  • இதேபோல தொற்றா நோய்களான புற்றுநோய், காசநோய், சிறுநீரக சிகிச்சைகளுக்கும் வீடு தேடி மருத்துவம் பார்க்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
  • அடுத்த (ஆகஸ்டு) மாதம் முதல் வாரத்தில் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தொடங்கி வைக்கிறார்.

கீழடி அகழாய்வில் வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது.

  • கீழடியின் 7ம் கட்ட அகழாய்வில் கி.மு 6ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே கீழடியில் தங்கத்தால் ஆன பொருள் கிடைத்த நிலையில் தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வெள்ளி நாணயம் வணக்கத்திற்கு பயன்பட்டிருக்கலாம் என்றும் இது கி.மு 2 முதல் கி.மு 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமானிய எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பயிற்சி ஒத்திகை

இந்தியா மற்றும் பிரான்ஸ் கடற்படைகள் பிஸ்கே விரிகுடாவில் பாதுகாப்புப் பயிற்சியை நடத்துகின்றன

  • இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ் தபார் பிரெஞ்சு போர் கப்பலான எஃப்.என்.எஸ் அக்விடைன் மற்றும் பிஸ்கே விரிகுடாவில் பிரெஞ்சு கடற்படையின் நான்கு ரஃபேல் போர் விமானங்களுடன் இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது.
  • நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் வான் பாதுகாப்பு பயிற்சிகள் உட்பட பலவிதமான பயிற்சிகளை அவர்கள் நடத்தினர்.

பிரான்ஸ்

  • தலைநகரம்: பாரிஸ்
  • நாணயம்: யூரோ
  • தலைவர்: இம்மானுவேல் மக்ரோன்
  • பிரதமர்: ஜீன் காஸ்டெக்ஸ்
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்

அல் ரஷீதி

  • துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற அல் ரஷீதி ( 57)குவைத் சேர்ந்தவர்.
  • இவர் பதக்கம் வென்றுள்ள மிக மூத்த போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நிஷியா மாம்ஜி

  • ஸ்கேர்ட் போர்டு போட்டியில் தங்கம் வென்ற நிஷியா மாம்ஜி(13) ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்.
  • இவர் பதக்கம் வென்றுள்ள மிக இளம் வயது போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 டோக்கியோ ஒலிம்பிக்  – இந்திய வீரர்கள்

பி.வி.சிந்து

  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
  • மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹாங்காங் வீராங்கனை யீ நகன் செயுங்கை வீழ்த்தி காலியுறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தருண்தீப் ராய்

  • ஒலிம்பிக்ஸ் வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியின் முதல் சுற்றில் உக்ரைன் வீரர் ஒலெக்சி ஹன்பின்னை வீழ்த்தி இந்திய வீரர் தருண்தீப் ராய் வெற்றி பெற்றார்.

லோவ்லினா போர்கோஹெய்

  • குத்துச்சண்டையில் மகளிருக்கான 69 கிலோ பிரிவில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெயின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
  • முன்னதாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் ஜெர்மனிய வீராங்கனை நாடினே அபெட்ஸை வென்றார்.
  • ஜெர்மனியில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் குத்துச்சண்டை போட்டியாளராக நாடினே இருந்தார். உலக சாம்பியன்ஷிப்பில் இருமுறை வெண்கலம் வென்றுள்ள நாடினே, முன்னாள் ஐரோப்பிய சாம்பியனும் ஆவார்.
  • ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்றுள்ள 9 பேர் கொண்ட இந்திய அணியில் முதல் போட்டியாளராக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்
  • லோவ்லினா. உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2 முறை வெண்கலம் வென்றவரான லோவ்லினா, காலிறுதிச் சுற்றில் சீன தைபேவின் நீன் சின் சென்னை எதிர்கொள்கிறார்.
முக்கிய தினங்கள்

உலக இயற்கை பாதுகாப்பு தினம் – ஜூலை 28

  • உலக இயற்கை பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் ஜூலை 28 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • உலகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
  • 2021 ன் கருப்பொருள் : “காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்கள் மற்றும் கிரகத்தை நிலைநிறுத்துதல் “.

உலக ஹெபடைடிஸ் தினம் – ஜூலை 28

  • கடுமையான கல்லீரல் நோய் மற்றும் ஹெபடோசெல்லுலர் புற்றுநோயை ஏற்படுத்தும் கல்லீரலின் அழற்சியான வைரஸ் ஹெபடைடிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 அன்று உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 2021 ன் கருப்பொருள் “ஹெபடைடிஸ் காத்திருக்க முடியாது”

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!