Daily Current Affairs July 27 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 27 2021 in Tamil
Daily Current Affairs July 27 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

துனிசியாவின்  பிரதமர் ஹைக்கேம்  மெசிசி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

  • நாட்டின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் அரசு சரியாக செயல்படவில்லை எனக் கூறி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அதிபர் மேற்கொண்டுள்ளார்.
  • இதைத் தொடர்ந்து, பிரதமரை பதவி நீக்கம் செய்வதாகவும், நாடாளுமன்ற செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும் அதிபர் கையஸ் சயீத் அறிவித்துள்ளார்.

துனிசியா

  • தலைநகரம் :துனிஸ்
  • நாணயம் :துனிசிய தினார்
  • அதிபர் : கையஸ் சயீத்

சவூதி அரேபியா வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

  • சவூதி அரேபியா வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்கான் அல் சௌத் ஜூலை 27 அன்று பாகிஸ்தானுக்கு செல்கிறார்.
  • இருதரப்பு உறவு மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
  • சவூதி வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா

  • தலைநகரம் : ரியாத்
  • நாணயம் :சவுதி ரியால்
  • இளவரசர் :முகமது பின் சல்மான்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.

  • அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இந்தியாவுக்கு ஜூலை 27 அன்று 2 நாள் பயணமாக வருகிறார்.
  • பதவி ஏற்ற பிறகு, அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை ஆண்டனி பிளிங்கன் சந்தித்து பேசுகிறார்.
  • இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் அடங்கிய ‘குவாட்’ அமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
  • வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, மின்னணு, புதுமை கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றி விவாதிக்கப்படும்.
  • ராணுவ துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசப்படும். என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா

  • தலைநகரம் :வாஷிங்டன்
  • நாணயம் :டாலர்
  • அதிபர் :ஜோபைடன்

‘ குவாட்’ கூட்டணி

  • அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின.
  • 2017-ம் ஆண்டு இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா இணைந்தது

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தஜிகிஸ்தானுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் 2021 ஜூலை 27 முதல் 29 வரை தஜிகிஸ்தானின் துஷான்பேவுக்கு வருகை புரிந்துள்ளார்
  • துஷன்பேவுக்கு வருகை தந்தபோது, ​​ரக்ஷா மந்திரி தனது தாஜிக் பிரதிநிதி கர்னல் ஜெனரல் ஷெராலி மிர்சோவை சந்தித்து இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் பரஸ்பர ஆர்வத்தின் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஜிகிஸ்தான்

  • தலைநகரம் :துஷன்பே.
  • நாணயம் :தஜிகிஸ்தானி சோமோனி
  • அதிபர் :எமோமலி ரஹ்மோன்
தேசிய நிகழ்வுகள்

கர்நாடகா முதலவர் பி.எஸ் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

  • கர்நாடகா முதலவர் பி.எஸ் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  • 75 வயதான பிறகு முக்கியப் பதவிகளை இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற நடைமுறை பாஜகவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
  • 78 வயதான எடியூரப்பாவுக்கு மட்டும் விலக்களித்திருந்த பாஜக மேலிடத்தலைமை, 2023-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சிக்கு புதிய தலைமையை உருவாக்கத் திட்டமிட்டு வந்தது.
  • அதன்படி எடியூரப்பா, தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் அளித்தார். ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்படுவதாகவும் ஆளுநரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
  • புதிய முதல்வர் பதவி ஏற்கும் வரை காபந்து முதல்வராக நீடிக்கும்படி எடியூரப்பாவை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
  • கர்நாடக முதல்வராக பி.எஸ். எடியூரப்பா 4 முறை முதல்வர் பதவி வகித்தும், ஒருமுறைகூட அவரால் பதவிக்காலம் முழுவதுமாக முதல்வர் பதவியில் நீடிக்க முடியவில்லை.
  • பாஜக சார்பில் ஒருவர்கூட முழுமையாக 5 ஆண்டு காலம் முதல்வர் பதவியில் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காபந்து அரசாங்கம்

  • முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பொறுப்பேற்கும் வரை தற்காலிகமாகப் பொறுப்பில் இருக்கும் அரசு காபந்து அரசு என்பதாகும்.

பெகாஸஸ் உளவு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது.

  • இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாஸஸ் என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பல தலைவர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
  • மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி, தொழிலதிபர் ,பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன் உரையாடல் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • இந்தச் சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பீம்ராவ், கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிராமய் பட்டாச்சார்யா ஆகியோரைக் கொண்ட இரண்டு நபர் விசாரணை ஆணையத்தை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது.
  • நாட்டில் முதல்முறையாக மேற்கு வங்காளம் மாநிலம் பெகாஸஸ் விவாகரத்துக்கு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

5 நாள் பயணமாக மம்தா பானர்ஜி டெல்லி சென்றார்

  • மேற்குவங்காள சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று, முதல்மந்திரியாக பதவி ஏற்ற அவர், அதன் பிறகு முதல்முறையாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியையும், ஜனாதிபதியையும் நேரில் சந்திக்க இருக்கிறார்.
  • 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளார். அப்போது மோடியிடம் மாநில வளர்ச்சி குறித்து அவர் ஆலோசிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

My Gov (மை கோவ்)

  • பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடியால் 2014 ஜூலை 26 அன்று அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மைகோவ் இன்று 18 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்த பயனர்களைக் கொண்டுள்ளது.
  • ஏறக்குறைய அனைத்து அரசுத் துறைகளும் தங்கள் குடிமக்களின் ஈடுபாட்டு நடவடிக்கைகள், கொள்கை வகுப்பிற்கான ஆலோசனைகள் மற்றும் பல்வேறு அரசாங்க திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்காக குடிமக்களுக்கு தகவல்களை பரப்புவதற்காக மைகோவ் தளத்தை பயன்படுத்துகின்றன.
  • இந்த தளம் தற்போது 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • நல்லாட்சி” என்ற இலக்கை அடைய இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் மைகோவ் உத்தரபிரதேசம் என்பதை தொடங்கியுள்ளது
 மாநில நிகழ்வுகள்

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு

  • வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான உத்தரவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • அரசுப் பணி நியமனங்கள், கல்வி வாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது.
  • இந்த இடஒதுக்கீட்டுக்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இதன்மூலம், நிகழாண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து கல்விச் சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்புகளில் பின்பற்றப்படும் இனசுழற்சி பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்கள் பெயர் தனியாக இடம்பெற்றுள்ளது. இதனால், இனசுழற்சி பின்பற்றப்படும் போது, வன்னியர்கள் தனித்த அடிப்படையில் வாய்ப்புகளைப் பெறுவர்.
  • இன சுழற்சி பட்டியலில் Moat Backward Classes(V) என வன்னியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் அருகே கிருஷ்ணதேவராயர் கால செப்புப் பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • 600 ஆண்டுகள் பழைமையான அரிய வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய செப்புப்பட்டயம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்தை சேர்ந்தது  மேலும் அந்த  பட்டயத்தில் அவரது மெய்கீர்த்தி சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
  • செப்புப்பட்டயமானது 615 கிராம் எடையோடு, 36 செ.மீ. நீளமும், 23.5 செ.மீ. அகலமும் கொண்டது.
  • இரு பகுதிகளாக உள்ள இதனை துளையிட்டு வளையங்களால் இணைத்துள்ளனர்.,
  • இதில்  ‘சிவன் துணை ஸ்ரீஅருணாத்திரியீஸ்வரர் சாதனப் பட்டயம்’ எனத் தொடங்கி 46 வரிகள் எழுதப்பட்டுள்ளன.
  • கி.பி.1515-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இப்பட்டயம் திருவண்ணாமலை ‘தனியூர்’ தகுதி பெற்றிருந்ததை விளக்குகிறது.
  • தொண்டை மண்டலமானது 24 கோட்டங்களை உள்ளடக்கியது என விரிவாகக் கூறப்பட்டுள்ளது.அரிய வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய இச்செப்புப்பட்டயம் தொண்டை மண்டல வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள, தமிழக வீராங்கனைகள் இருவருக்கு, அரசு பணி வழங்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

  • தமிழகத்தில், நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்பட உள்ளது. அங்குள்ள, ஆறு வயது முதல், 14 வயது உள்ள விளையாட்டு ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள, தமிழக வீரர்கள், 11 பேரில், ஒன்பது பேர், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் உள்ளனர்.
  • மிகவும் வறுமையான பின்னணியில் இருந்து வந்த சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகியோருக்கு, போட்டி முடிந்து தாயகம் திரும்பியதும், முதல்வர் அரசு பணி வழங்க உள்ளார்.என, விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

‘வென்று வா வீரர்களே’ என்ற பாடலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

  • தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்றுள்ள, வீரர்கள், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில், ‘வென்று வா வீரர்களே’ என்ற பாடலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், வரலாற்றில் முதல் முறையாக, தமிழகத்தில் இருந்து, 11 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
  • அவர்களுக்கு துணை நிற்கும் வகையில், உலகில், 77 நாடுகளில் வசிக்கும் தமிழர்களை, ‘வென்று வா வீரர்களே’ என்ற ஒற்றை வரியில் இணைத்து, அவர்களுக்கு துணை நிற்பது தான், இந்த பாடலின் நோக்கம்.
  • இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ,இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
கூட்டுபயிற்சி

கட்லாஸ் எக்ஸ்பிரஸ் கப்பற்படைபயிற்சி- 2021

  • ஒருங்கிணைந்த கடல்சார் சட்ட அமலாக்க திறனை மேம்படுத்துவதற்கும் பிராந்திய கடற்படைகளுக்கு இடையில் இயங்கக்கூடிய தன்மையை அதிகரிப்பதற்கும் இந்த கப்பற்படைபயிற்சி ஆபிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் நடத்தப்படுகிறது.
  • ஜூலை 26 அன்று தொடங்கப்பட்ட பயிற்சி ஆகஸ்ட் 6 ஆம் தேதி நிறைவடையும்.
  • இந்த பயிற்சியில் கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2021 இல் இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) தல்வார் பங்கேற்கிறது.
  • கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலில் தேசிய மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் வருடாந்திர கடல்சார் பயிற்சியாகும்.

இந்திரா (INDRA) கூட்டு ராணுவப்பயிற்சி -2021

  • இந்தியா -ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சியின் 12 வது பதிப்பு ஆகஸ்ட் 01 முதல் 13 வரை ரஷ்யாவின் வோல்கோகிராட்டில் நடைபெறும்.
  • INDRA-21 கூட்டு ராணுவப்பயிற்சி இந்திய மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் இயங்குதளத்தை மேலும் வலுப்படுத்தும் மற்றும் இரு நாடுகளின் குழுவினரிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள உதவும்.
  • பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்த பயிற்சி மற்றொரு மைல்கல்லாக இருக்கும், மேலும் இது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பின் பிணைப்பை வலுப்படுத்த உதவும்.

ரஷ்யா

  • தலைநகரம் : மாஸ்கோ
  • நாணயம் :ரஷ்ய ரூபிள்.
  • அதிபர் :விளாடிமிர் புடின்
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்

13 வயது ஜப்பான் வீராங்கனை – மோமிஜி நிஷியா

  • டோக்கியோ ஒலிம்பிக்கில் அறிமுகமான ஸ்கேட்டிங் போட்டியில் ஜப்பானை சேர்ந்த மோமிஜி நிஷியா 13 வயதில் தங்கம் வென்றுள்ளார்.
  • அவரது வயது 13 ஆண்டு 330 நாட்கள் தான். இதன் மூலம் குறைந்த வயதில் தங்கம் வென்ற முதல் ஜப்பான் நாட்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • மிக குறைந்த வயதில் ( 13 வயது  268 நாட்கள் )ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை அமெரிக்கா வீராங்கனை மர்ஜோரி கெஸ்ட்ரிங் பெற்றுள்ளார்.(1936 – பெர்லின் ஒலிம்பிக்ஸ்)

டோக்கியோ ஒலிம்பிக் பளுதுாக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • ஜப்பானில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் 49 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு(26) வெள்ளிப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.
  • இப்போட்டியில் சீனாவின் ஹோ ஜிஹுய் தங்கம், இந்தோனேஷியாவின் ஐசா விண்டி கேன்டிகா வெண்கலம் கைப்பற்றினர்.
  • இந்நிலையில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தப்பட்டது உறுதியானால், அவரது பதக்கம் பறிக்கப்படும். இரண்டாவது இடம் பிடித்த மீராபாய் சானுவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
  • மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் அரசு சார்பில் கூடுதல் டி.எஸ்.பி.,யாக புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவருக்கு, ரூ. ஒரு கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய வீரர்கள்

  • டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் தனது 2-ஆவது சுற்றில் போர்ச்சுகல் வீரர் தியேகோ அபோலோனியாவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
  • அடுத்த சுற்றில், நடப்புச் சாம்பியனான சீன வீரர் மா லாங்கை எதிர்கொள்ளவிருக்கிறார்.
  • டேபிள் டென்னிஸில் அனைத்து போட்டிகளிலும் ஒற்றையர் பிரிவு பட்டங்களை வென்றுள்ள மா லாங், நடப்பு உலக சாம்பியனாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • தற்போது டேபிள் டென்னிஸ் களத்திலிருக்கும் ஒரே இந்திய போட்டியாளர் சரத் கமல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி 2-வது வெற்றி பெற்றுள்ளது.

  • 32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை சந்தித்தது.
  • விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
  • இந்தியா ஒலிம்பிக்  தொடரில் இந்திய ஆடவர் அணி 2-வது வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
முக்கிய தினங்கள்

அப்துல் கலாம் நினைவு தினம் – ஜூலை 27

  • ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், 1931 அக்டோம்பர் 15ம் தேதி ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பிறந்தார்.
  • மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றியுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’வில் 20 ஆண்டுகள் பணியாற்றினார்.
  • ‘அக்னி, பிருத்வி, ஆகாஷ்’ உட்பட ஐந்து ஏவுகணை திட்டங்களிலும், பொக்ரான் அணுகுண்டு சோதனையிலும் முக்கிய பங்காற்றினார்.
  • ‘பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண்’ உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். 30-க்கும் மேற்பட்ட பல்கலைகள், இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன.
  • கடந்த 2002ல், நாட்டின் 11-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். ‘அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள்’ உள்ளிட்ட சில புத்தகங்கள் எழுதியுள்ளார்.
  • 2015 -ஜூலை 27ம் தேதி, தன் 84வது வயதில் இயற்கை எய்தினார். இன்று அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இவரது பிறந்தநாளான அக்டோபர் 15-ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!