Daily Current Affairs July 26 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

1
Daily Current Affairs July 26 2021 in Tamil
Daily Current Affairs July 26 2021 in Tamil
தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

16 வது ஜி 20 உச்சி மாநாட்டில் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது.

  • 16 வது ஜி 20 உச்சி மாநாட்டில் இரண்டு நாள் கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், மத்திய சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் அஸ்வினி சபே ஆகியோருடன் பங்கேற்றார்.
  • இத்தாலி தற்போதைய தலைவராகவும், மரியோ டிராகி ஜி 20 உச்சிமாநாட்டின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.
  • ஜி 20 இன் உறுப்பு நாடுகள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா

குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளது.

  • ஜி 20
  • தலைமையகம் : கான்கன், மெக்சிகோ
  • ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு :1999

உலகின் முதல் 3 டி-அச்சிடப்பட்ட எஃகு பாலம் ஆம்ஸ்டர்டாமில் திறக்கப்பட்டுள்ளது.

  • உலகின் முதல் 3 டி-அச்சிடப்பட்ட எஃகு பாலம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இந்த பாலத்தை நெதர்லாந்து ராணி மெக்ஸிமா திறந்து வைத்தார்.
  • இது ஒரு டச்சு ரோபாட்டிக்ஸ் நிறுவனமான MX3D ஆல் உருவாக்கப்பட்டது, இது நிபுணர்களின் கூட்டமைப்புடன் இணைந்து 3D- அச்சிடும் தொழில்நுட்பத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
  • நெதர்லாந்து
  • தலைமையகம் : ஆம்ஸ்டர்டாம்
  • நாணயம்: யூரோ
  • பிரதமர்: மார்க் ருட்டே

தேசிய நிகழ்வுகள்

அம்ருத் மகோத்சவம்

  • ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டில் இந்தியா அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, நாடு முழுவதும் ‘அம்ருத் மகோத்சவம்’ கொண்டாடப்படவுள்ளது.
  • இதுதொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. பல இந்தியர்கள் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் தேசிய கீதத்தைப் பாடுவது ஒரு நிகழ்ச்சியாகும்.
  • இதற்காக, புதிய வலைதளமும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வலைதளத்தின் உதவியுடன் ஒருவர் தேசிய கீதத்தைப் பாடி, அதில் பதிவு செய்ய முடியும் என்று பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

தெலங்கானா ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

  • தெலங்கானா மாநிலம், வரங்கல்லில் உள்ள ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதாக மத்திய கலாசார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • கணபதி தேவா என்ற காகதிய வம்ச மன்னரின் ஆட்சிக் காலத்தில் 13-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட பிரசித்தி பெற்ற இக்கோயிலின் மூலவர் ராமலிங்கேசுவரர். எனினும், இந்த அற்புதமான கோயிலை வடிவமைத்த கட்டடக் கலைஞரான ராமப்பாவின் பெயரால் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • காகதிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் இப்போதைய தெலங்கானா, ஆந்திரத்தை உள்ளடக்கிய பெரும்பாலான பகுதிகளையும், கிழக்கு கர்நாடகம், தெற்கு ஒடிஸாவின் சில பகுதிகளையும் 12 முதல் 14-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்து வந்தனர்.
  • UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization.
  • தலைமையகம் :பாரிஸ், பிரான்ஸ்
  • தலைவர் :ஜோஹர் அலய்
  • ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு :16 நவம்பர் 1945.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

  • ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா , மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர்.
  • ஜூலை 24 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராம்நாத் கோவிந்த், திங்கள்கிழமை (ஜூலை 26) லடாக்கின் திராஸ் பகுதிக்குச் சென்று, கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி அங்குள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் பயணத்தை முன்னிட்டு இரு யூனியன் பிரதேசங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் 4 ஆண்டுகளை நிறைவு செய்தார்.

  • ராம்நாத் கோவிந்த்(76) கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதி, நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.
  • அத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் அவர் ஆற்றியுள்ள பணிகளை, அந்த அலுவலகம் மின்னூலாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.
  • ஒவ்வொரு குடிமகனுக்கும் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் கடந்த 4 ஆண்டுகளில் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு பயணித்துள்ளார்.
  • கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசின் 43 மசோதாக்கள், மாநில அரசுகளின் 20 மசோதாக்கள் என மொத்தம் 63 மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரியில் ஜெனரல் திம்மையா நினைவு அருங்காட்சியகத்தையும் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
  • புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக, மாநில ஆளுநர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார்.

ஒடிசாவில் பூரி நகரை சேர்ந்த சிறுமி நந்தினி பட்னாயக் (வயது 14).  ஐஸ்கிரீம் குச்சிகளை கொண்டு மினி டோக்கியோ ஒலிம்பிக் மைதானம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

  • ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ப்பணிக்கும் நோக்கில் இதனை அவர் தயாரித்து உள்ளார்.
  • ஏறக்குறைய 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஐஸ்கிரீம் குச்சிகள் எனக்கு தேவைப்பட்டது. அவற்றை கொண்டு மினி ஒலிம்பிக் ஸ்டேடியம் ஒன்றை உருவாக்கி உள்ளேன்.  நம்முடைய விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் இதனை அமைத்திருக்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

யுனெஸ்கோவின் ‘வரலாற்று நகர்ப்புற இயற்கை திட்டத்தை மத்திய பிரதேச முதல்வர்  அறிமுகப்படுத்தினார்.

  • மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் யுனெஸ்கோவின் ‘வரலாற்று நகர்ப்புற இயற்கை’ திட்டத்தை மத்திய பிரதேசத்தின் குவாலியர் மற்றும் ஓர்ச்சா ஆகிய நகரங்களில் தொடங்கினார்.
  • குவாலியர் மற்றும் ஓர்ச்சா நகரங்கள் யுனெஸ்கோவால் 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘வரலாற்று நகர்ப்புற நிலப்பரப்பு திட்டத்தின்’ கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன.
  • அவற்றின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் அதே வேளையில் வேகமாக வளர்ந்து வரும் வரலாற்று நகரங்களை உள்ளடக்கிய மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட வளர்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • மத்தியப் பிரதேசம்
  • தலைநகரம் : போபால்
  • முதல்வர்: சிவராஜ் சிங் சவுகான்
  • ஆளுநர்: மங்குபாய் சாகன்பாய் படேல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவராக அரமனே கிரிதருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ) தலைவர் பதவியின் கூடுதல் பொறுப்பை அரமனே கிரிதருக்கு வழங்கப்பட்டது.
  • அவர் உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சுக்பீர் சிங் சந்துவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுளளார்.
  • அடுத்த உத்தரவு வரும் வரை அவர் அந்த பதவியை வகிப்பார். அவர் தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) செயலாளராக பணியாற்றி வருகிறார்.
  • NHAI- National Highways Authority of India
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
  • தலைமையகம்: புது தில்லி
  • தலைவர்: அரமனே கிரிதர்

விண்வெளி

வியாழன் கோளின் 80 நிலவுகளில் ஒன்றான யூரோப்பாவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, நாசா ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

  • வியாழன் கோளின் 80 நிலவுகளில் ஒன்றான யூரோப்பாவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அந்த நாட்டின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • உயிரினங்கள் வாசிப்பதற்கான சாத்தியக்கூறுகள் யூரேப்பாவில் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அந்த நிலவுக்கு ஆய்வுக் கலனை வரும் 2024 செலுத்துவதற்கான இந்தத் திட்டத்தில், ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் கனரக ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது.
  • 23 அடுக்குகளைக் கொண்ட, ஓரளவு மீண்டும் பயன்படுத்தத்தக்க ஃபால்கன்தான் உலகில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் என்று கூறப்படுகிறது.

இறப்பு

தமிழறிஞர் இரா.இளங்குமரனார் காலமானார்.

  • உடல்நிலை குறைவு காரணமாக ஜூலை 25 அன்று தனது 94-ஆவது வயதில் காலமானார்.
  • இலக்கணச் செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை – அதன் பண்பாட்டைத் தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்திடுவதற்காக தனது

94-ஆவது அகவையிலும் தொடர்ந்து பணியாற்றியவர் இளங்குமரனார்.

  • தமிழ்மறையாம் குறள்நெறி வழியில் தமிழர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தியதுடன், வள்ளுவர் தவச்சாலை என்பதை நிறுவி, வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர்.
  • புத்தாயிரம் (2000) ஆண்டு தொடக்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குமரி முனையில் 133 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த மகத்தான நிகழ்வில், அய்யா இளங்குமரனார் பங்கேற்று உரையாற்றியது தனிச்சிறப்பாகும்.

புத்தகம்

“ஓவர் இட்: ஹவ் டு ஃபேஸ் லைஃப் ஹர்டில்ஸ் வித் கிரிட், ஹஸ்டல் மற்றும் கிரேஸ் (“Over It: How to Face Life’s Hurdles with Grit, Hustle, and Grace”) என்ற புத்தகத்தை லோரி சூசன் ஜோன்ஸ் எழுதியுள்ளார்.

  • மூன்று முறை ஒலிம்பியனும் உலக சாம்பியனுமான ஹார்ட்லரான லோரி சூசன் ஜோன்ஸ் (லோலோ ஜோன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறார்) “Over It: How to Face Life’s Hurdles with Grit, Hustle, and Grace” என்ற தலைப்பில் ஒரு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • இந்த புத்தகத்தை தாமஸ் நெல்சன் என்பவர் வெளியிட்டார்.

விளையாட்டு

இந்தியாவில் ஹாக்கி வீரர்களுக்காக பிளேயர் சார்ந்த வலைத்தளமான ‘ஹீரோஸ் கனெக்ட்(‘Heroes Connect) ஐ ஹாக்கி இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது

  • ஆண்கள் மற்றும் பெண்கள் விளையாட்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களின் விரிவான தரவுத்தளத்தை உருவாக்கும் முயற்சியில், ஹாக்கி இந்தியா தனது சொந்த பிளேயர் சார்ந்த இணைய அடிப்படையிலான தளமான ‘ஹீரோஸ் கனெக்ட்’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
  • முன்னாள் மற்றும் தற்போதைய இந்திய ஹாக்கி வீரர்களை விளையாட்டைச் சுற்றி ஆக்கபூர்வமான விவாதங்களைத் தொடங்க மற்றும் ஊக்குவிப்பதற்காக தனித்துவமான பதிலளிக்கக்கூடிய தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக கேடட் மல்யுத்தப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் பிரியா மாலிக்

  • ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
  • இதில் மகளிர் 73 கிலோ எடைப்பிரிவில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பெலாரஸின் கேஸ்னியா படோபோவிச்சை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
  • இளம் வீராங்கனையான பிரியா மாலிக், புது தில்லியில் நடைபெற்ற தேசிய பள்ளிகள் விளையாட்டுப் போட்டியிலும், கேலோ இந்தியா போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரே நாளில் தங்கம் வென்ற அண்ணன் – தங்கை

  • தற்காப்பு கலைகளில் ஒன்றான ஜூடோ போட்டியில் ஆண்கள் 66 கிலோ பிரிவில் ஜப்பானின் ஹிபுருமி அபேவும், பெண்கள் 52 கிலோ பிரிவில் அவரது தங்கை உடே அபேவும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
  • ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே நாளில் அண்ணன்-தங்கை தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தென்கொரியா  பெண்கள் அணி

  • ஒலிம்பிக்கில் வில்வித்தை பெண்கள் அணி பிரிவு 1988 ம் ஆண்டு சேர்க்கப்பட்டது.
  • அது முதல் பெண்கள் அணிகள் பிரிவில் தோல்வியே சந்திக்காமல் வாகை சூடி வரும் தென்கொரியா பெண்கள் அணி அந்த வரலாற்று சாதனையை இந்த ஒலிம்பிக்கிலும் தக்கவைத்து கொண்டது.
  • தென்கொரியா அணி , ரஷ்ய அணியை தோற்கடித்து தொடர்ந்து 9 வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 13 வயது ஜப்பான் சிறுமி நிஷியா மோமிஜி

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஸ்கேட்டிங் போட்டியில் 13 வயதான ஜப்பானை சேர்ந்த சிறுமி நிஷியா மோமிஜி தங்கம் வென்று உள்ளார்.
  • இதன் மூலம்பதக்க பட்டியலில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் ஜப்பான் உள்ளது.
  • அதே போல் ரஷியாவை சேர்ந்த 13 வயது ராய்சா லீல் வெள்ளி பதக்கத்தை வென்றார்.
  • ஜப்பானின் பனா நாகயமா வெண்கலபதக்கம் வென்றார்.
  • இறுதி போட்டிக்கு மொத்தம் 7 பேர் தேர்வு பெற்று இருந்தனர். இதில் சிறுமிகள் இருவர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் – இந்திய வீரர்கள்

ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதலில் வெள்ளி வென்றார்  இந்திய வீராங்கனை மீராபாய் சானு

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ள மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு 49 கி பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
  • ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கத்துடன் பதக்க வேட்டையை தொடங்கியிருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது என்று ராம்நாத் கோவிந்த், நரேந்திரமோடி போன்ற பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  • இந்திய ஆண்கள் அணியில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தரூன்தீப் ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்திய ஆண்கள் அணி  கஜகஸ்தான் ஆண்கள் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
  • காலிறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி தென்கொரியாவை எதிர்கொள்கிறது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு சரத் கமல் தகுதி பெற்றார்,

  • 32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான இன்று ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் சரத்கமல்-தியாகோ அபோலோனியா (போர்ச்சுகல்) மோதினர்.
  • இப்போட்டியில் போர்ச்சுகல் வீரர் டியாகோ அப்போலோனியாவை 3-2 என்ற செட் கணக்கில்  சரத் கமல் வீழ்த்தினார். இதன் மூலம் மூன்றாவது சுற்றுக்கு சரத் கமல் தகுதி பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  இந்திய பாட்மிண்டன் வீராங்கனையும் உலக சாம்பியனுமான பி.வி.சிந்து, குத்துச்சண்டை நட்சத்திரம் மேரி கோம், மனிகா பத்ரா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். .

பி.வி.சிந்து:

  • பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து தொடக்க சுற்றில் இஸ்ரேல் வீராங்கனை சேனியா போலிகர்போவாவை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் ஹாங்காங் வீராங்கனை சியுங் கேன் யியை எதிர்கொள்கிறார் சிந்து.
  • கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் இலக்குடன் களமிறங்கியுள்ளார்.

மேரி கோம்:

  • மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் இந்தியாவின் மேரி கோம் டொமினிக்கன் குடியரசின் இளம் வீராங்கனை மியுகுலினா ஹெர்ணாண்டஸ் கார்ஸியாவை வீழ்த்தி ப்ரி குவாட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
  • அடுத்த சுற்றில் 3-ஆம் நிலை வீராங்கனை கொலம்பியாவின் இங்கிரிட் வலேன்சியாவை எதிர்கொள்கிறார் கோம். ஏற்கெனவே இரு முறை இங்கிரிட்டை வென்றுள்ளார் மேரி கோம்.

மனிகா பத்ரா:

  • டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா உக்ரைனின் மார்கரிட்டா பெஸோட்ஸ்காவை வென்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
  • பெஸோட்ஸ்கா 32-ஆவது இடத்தில் உள்ள நிலையில், 62-ஆவது இடத்தில் உள்ள மனிகா அவரை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ரோயிங் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் லால் ஜால்-அரவிந்த் சிங் இணை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

  • சீ பாரஸ்ட் வாட்டர்வேயில் நடைபெற்ற ஆடவர் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் பந்தய தூரத்தை 6:51: 36 நிமிட நேரத்தில் கடந்து மூன்றாவது இடத்தை பெற்றனர். இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
  • ஒலிம்பிக்கில் இது இந்திய வீரர்களின் சிறப்பான தகுதியாகும் என ரோயிங் பெடரேஷன் தலைவர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
  • அரையிறுதியில் பங்கேற்கும் 12 போட்டியாளர்களில் நமது வீரர்களும் உள்ளனர். இரண்டு அரையிறுதி பந்தயங்கள் 6 படகுகளுடன் நடைபெறும். அதில் முதல் மூன்று இணைகள் இறுதிக்குள் நுழையும் என்றார்.

முக்கிய தினங்கள்

கார்கில் விஜய் திவாஸ் – ஜூலை 26

  • கடந்த 1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. மூன்று மாதங்களாக ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது.
  • 1999, ஜூலை 26 ஆம் தேதி இந்திய ராணுவம் இந்த வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது சுமார் 60 நாட்கள் தொடர்ந்தது..
  • இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் போர் வீரர்களை கெளரவிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • 22-வது கார்கில் போர் வெற்றி தினத்தில் தில்லியில் உள்ள கார்கில் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

தேசிய பெற்றோர் தினம் – ஜூலை 25

  • தேசிய பெற்றோர் தினம் ஜூலை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 2021 இல் இது ஜூலை 25 அன்று வருகிறது.
  • குழந்தைகளின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் அனைத்து பெற்றோர்களையும் கெளரவிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • 2021 ன் கருப்பொருள் : “உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெற்றோர்களையும் பாராட்டுங்கள்”

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!