Daily Current Affairs July 23 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 23 2021 in Tamil
Daily Current Affairs July 23 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 23 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தேசிய நிகழ்வுகள்

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு 2025 வரை நீடித்துள்ளது.

  • பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்.டி.களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு 2025 வரை நீட்டித்துள்ளது.
  • இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2016 இல் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர் மற்றும் பெண்கள் கடன் வாங்குபவர்களுக்கு கடன் வழங்குவதற்காக தொடங்கினார்.
  • ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்திற்கான கடன் தொகை திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளால் (எஸ்சிபி) 10 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை பெறலாம்.

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை , லடாக் யூனியன் பிரதேசத்திற்கான ஒருங்கிணைந்த பல்நோக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.

  • கார்ப்பரேஷனை நிறுவுவதால் யூனியன் பிரதேசமான லடாக் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படும். இது, முழு பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியையும், யூனியன் பிரதேசத்தின் மக்கள்தொகையையும் உறுதி செய்யும்.
  • வளர்ச்சியின் தாக்கம் பல பரிமாணமாக இருக்கும். இது மனித வளங்களை மேலும் மேம்படுத்துவதற்கும், அதன் சிறந்த பயன்பாட்டிற்கும் உதவும். இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் அவற்றின் சீரான விநியோகத்தை எளிதாக்கும். இவ்வாறு, ஆத்மனிர்பர் பாரத்தின் இலக்கை அடைய உதவும்.
  • ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இன் படி, முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைப்பதன் விளைவாக, யூனியன் பிரதேசமான லடாக் (சட்டமன்றம் இல்லாமல்) 31.10.2019 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 இன் 85 வது பிரிவின் கீழ் ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது,
  • லடாக். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக் கூட்டுத்தாபன லிமிடெட் (அனிட்கோ) வரிசையில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தை நிறுவுவதற்கு அந்தக் குழு பரிந்துரைத்தது,

பாரதிய பிரகிருத கிருஷி பததி திட்டம் (BPKP)

  • பாரம்பரிய பூர்வீக நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக 2020-21 முதல் பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனாவின் (PKVY) துணைத் திட்டமாக பாரதிய பிரகிருத கிருஷி பததி (BPKP) யை அரசு செயல்படுத்துகிறது.
  • இத்திட்டம் முக்கியமாக அனைத்து செயற்கை இரசாயன உள்ளீடுகளையும் விலக்குவதை வலியுறுத்துகிறது மற்றும் பண்ணை உயிர்ப் பொருள்களை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கிறது;
  • BPKP இன் கீழ், 3 ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ .12200 நிதி உதவி வழங்கப்படுகிறது.
  • தற்போதைய நிலவரப்படி, 8 மாநிலங்களில் 4.9 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு மற்றும் ரூ. 4980.99 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் தெலுங்கானா இதுவரை இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளவில்லை.
  • BPKP – Bhartiya Prakritik Krishi Padhati
  • PKVY – Paramparagat Krishi Vikas Yojana.
மாநில நிகழ்வுகள்

கொந்தகை அகழாய்வு

  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் அருகருகே முதுமக்கள் தாழி, இறுதிச்சடங்குக்கு பயன்படுத்திய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • கீழடி மற்றும் கொந்தகையில் 7ம் கட்ட அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தானை வென்ற இந்தியா பொன்விழா வெற்றி கொண்டாட்டம்.

  • இந்தியா — பாகிஸ்தான் இடையே, 1971ல் நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்றதன் 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம், சென்னையில் நடைபெற்றது.விழா வெற்றி ஜோதியை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பெற்றுக் கொண்டார்.
  • இந்த வெற்றியின், பொன் விழா கொண்டாட்டங்களை, 2020 டிசம்பரில், பிரதமர் மோடி டில்லியில் துவக்கி வைத்தார்.தேசிய போர் நினைவு சின்னத்தில் உள்ள தீச்சுடரில், நான்கு வெற்றி ஜோதிகள் உருவாக்கப்பட்டன.
  • அந்த ஜோதி, போரில் பங்கேற்ற வீரர்கள், விதவைகள் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக, நாட்டின் நான்கு திசைகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
  • இதன்படி, வெற்றி ஜோதி, தமிழகத்தின் தக்ஷிண பாரத பகுதியின் தலைமையகத்திற்கு, 20ம் தேதி கொண்டு வரப்பட்டது. ஜோதியை, 12வது மெட்ராஸ் ராணுவ படை பிரிவினர், உரிய மரியாதையுடன் பெற்றனர்.
  • இந்த வெற்றி ஜோதி, வரும், 30ம் தேதி, அந்தமான் நிகோபார் தீவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
விண்வெளி

சுவாதி மோகன்

  • சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் “புலம் பெயர்ந்த சாதனையாளர்கள்’ என்ற தலைப்பில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் ஜெட் உந்து சக்தி ஆய்வகத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் குழுவின் மேற்பார்வையாளராக சுவாதி மோகன் பணியாற்றுகிறார்
  • நாசாவின் 2020 செவ்வாய் கிரக திட்டத்துக்கான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு பணிகளின் மேற்பார்வையாளராகவும் இருந்த இந்திய வம்சாவளி என்ஜினீயர் சுவாதி மோகனுடன் வீடியோ கான்பெரென்ஸ் மூலம் கலந்துரையாட உள்ளார்
விளையாட்டு

ஒலிம்பிக் ஒரு பார்வை

  • பண்டைய கால ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து நவீன கால ஒலிம்பிக் போட்டிகள் 4ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடத்தப்பட்டு வருகிறது.
  • சர்வதேச ஒற்றுமை திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக்கில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
  • ஒலிம்பிக் போட்டியானது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்கத்தில் தோன்றியது. இதன் பின்னர் முதல் நவீன ஒலிம்பிக் 1896-ம் ஆண்டு ஏதன்ஸ் நகரில் நடைபெற்றது.
  • ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ சின்னம் ஐந்து மோதிர வளையங்கள் ஆகும். இது ஐந்து கண்டங்களான அமெரிக்கா (வடக்கு மற்றும் தெற்கை இணைத்து), ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகியவற்றை குறிக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக்

  • ஒலிம்பிக் வரலாற்றில் ஓராண்டு காலத்துக்கு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு காரணம் கரோனா வைரஸ் பெருந்தொற்றுதான்.
  • டோக்கியோ நகரில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது.
  • இன்று தொடங்கும் (23-ம் தேதி) ஒலிம்பிக் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் சின்னம் மிரைடோவா’ ஆகும். இது ஜப்பானிய கலாச்சாரத்தின் பாரம்பரியம் மற்றும் நவீனம் ஆகிய இரண்டிற்கும் இடையிலான மரியாதையாக கருதப்படுகிறது.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது 42 இடங்களில் நடத்தப்படுகிறது. இவை டோக்கியோ விரிகுடா மண்டலம் மற்றும் பாரம்பரிய மண்டலம் என இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • கரோனா வைரஸ் பெருந்தொற்று காணமாக போக்கியோ நகரில் அவசரபிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.
  • ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 1964-ம் ஆண்டு டோக்கியோ நகரம் ஒலிம்பிக் போட்டியை நடத்தியிருந்தது.
  • இதன் மூலம் கோடைகால ஒலிம்பிக் போட்டியை – 2-வது முறையாக நடத்தும் ஆசியாவின் முதல் நகரமாக டோக்கியோ திகழ்கிறது.
  • ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள், பயன்படுத்தப்படாத செல்போன்கள், லேப் டாப் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

பங்கேற்கும் நாடுகள்

  • டோக்கியோ ஒலிம்பிக்கில் 200 நாடுகளைச் சேர்ந்த 11,000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொன்றன.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் 33 வெவ்வேறு விளையாட்டுகளில் 339 நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கராத்தே, சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங்  மற்றும் விளையாட்டு க்ளைம்பிங் ஆகிய நான்கு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் ஆகியவை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இதில் இளம் வீராங்கனை என்று  பெருமை சிரியாவின் பேரின் டென்னிஸ் வீராங்கனை வெலண்டா பெற்றுள்ளார். அவருக்கு 12 வயது
  • அதிக வயதானவியர் என்ற பெருமையை கைலம்பாக நாட்டை சேர்ந்த 57 வயதான டேரில் டென்னிஸ் வீரர் தி எலியாலியன் பெற்றுள்ளார்.

தொடக்க விழா

  • வரலாற்றில் விசித்திரமாக அமைந்துள்ள டோக்கியோ!ஒலிம்பிக்கின் தொடக்க விழா நியூ நேஷனல் மைதானத்தில் நடைபெறுகிறது. 68 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த  மைதானத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் 1 ஆயிரம் பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
  • தொடக்க விழாவில் ஜப்பானின் பேரரசர்! நருஹிடோ, அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடென், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட உலகத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
  • தொடக்க விழாவுக்கு முன்னதாகவே கால்பந்து, சாப்ட் பால் உள்ளிட்ட சில விளையாட்டுகள் தொடங்கப்பட்டு விட்டன.

இந்தியா

  • .இந்த ஒலிம்பிற்க்காக இந்தியா 68 ஆடவர் , 52 மகளிர் என 120 போட்டியாளர்கள் அடங்கிய குழுவை அனுப்பியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய குழுவில் 228 பேர் இடம் பெற்றுள்ளனர்.
  • தொடக்க விழாவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். அடடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியர் தேசியக்கொடியை ஏந்திச் செல்கின்றனர்
  • இந்திய வீரர், வீராங்கனைகள் வில்வித்தை , தடகளம்.குத்துச்சண்டை, பாட்மிண்டன், குதிரையேற்றம், வாள்வீச்சு, கோஃல்ப், ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, ஜூடோ, படகுவலித்தல், துப்பாக்கி சுடுதல், பாய்மரப்படகு, நீச்சல், டேபின் யோ டென்னிஸ், டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம் என தலா 18 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.
  • ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா 9 தங்கம் உட்பட 28 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 8 தங்கம் ஆடவர் – ஹாக்கியில் கிடைத்தவையாகும். மற்றொரு தங்கம்
  • 2008-ம் ஆண்டு துப்பாக்கி சுடுதலில் அபிநவ் பிந்த்ரா வென்றது.
  • ஒலிம்பிக் வரலாற்றில் ஹாக்கியை தவிர்த்து தடகளம், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பளுதூக்குதல், இடம் குத்துச்சண்டை , பாட்மிட்டன் ஆகியவற்றில் இந்தியா பதக்கம் கைப்பற்றியுள்ளது.
  • புதிய அதிகபட்சமாக 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்கள் வென்றிருந்தது.
  • கடைசியாக நடைபெற்ற 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2 பதக்கங்களை மட்டுமே வென்றது.

தமிழக வீரர்கள்

  • டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தில் இருந்து 11 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
  • ஆடவருக்கான 5 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த – ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோரும் – 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேஷன், தனலட்சுமி சேகர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
  • அதேவேளையில் ஆடவர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சத்தியன், சரத் கமல் ஆகியோரும் வாள்வீச்சில் பவானி தேவியும் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் பாய்மரப் படகு போட்டிகளில் நேத்ரா குமணன், கணபதி, வருண் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
  • பவானி தேவி, ஒலிம்பிக்கில் வாள்வீச்சு பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

1988 சியோல் ஒலிம்பிக்ஸ்

  • ஒலிம்பிக்ஸ் போட்டியில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டது.
  • இந்த ஒலிம்பிக்ஸில்தான் ஜெர்மனி வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் தங்கம் வென்று, ‘கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’ பெற்ற ஒரே டென்னிஸ் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார்.

1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸ்

  • 32 ஆண்டுகால தடைக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது தென் ஆப்பிரிக்கா.
  • பாட்மிண்டன், மகளிர் ஜூடோ ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டன.
  • சீன நீச்சல் வீராங்கனை ஃபு மிங்ஷியா (13), ஒலிம்பிக் வரலாற்றிலேயே தங்கம் வென்ற மிக இளவயது போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார்.

1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸ்

  • ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, போட்டிக்காக அங்கீகரிக்கப்பட்ட 197 நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
  • பீச் வாலிபால், மௌன்டைன் பைக்கிங், லைட்வெயிட் ரோயிங், மகளிர் கால்பந்து போன்றவை முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.
  • இந்த ஒலிம்பிக்ஸ் மூலம் 24 நாடுகள் முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் பங்கேற்றன.
  • ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துடன் கேரியர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் வீரர் என்ற பெருமையை அமெரிக்காவின் ஆன்ட்ரே அகஸி பெற்றார்.
முக்கிய தினங்கள்

சந்திர சேகர் ஆசாத் பிறந்த தினம் – ஜூலை 23

  • சந்திரசேகர சீதாராம் திவாரி எனப்பட்ட சந்திரசேகர ஆசாத் அவர்கள், 1906 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சபுவா மாவட்டத்திலுள்ள “பாப்ரா” என்ற இடத்தில் பிறந்தார்.
  • இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். 1931 பிப்ரவரி 27 அன்று இயற்க்கை எய்தினார்.
  • அலகாபாத்தில் உள்ள அல்ப்ரெட்” பூங்கா “சந்திரசேகர ஆசாத் பூங்கா” என அழைக்கப்பட்டு வருகிறது.

பால கங்காதர திலகர் பிறந்த தினம் – ஜூலை 23

  • திலகர் 1856-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் நாள் மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் பிறந்தார்.
  • ஒரு இந்தியத் “தேசியவாதியும்”, “சமூக சீர்திருத்தவாதியும்”, விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே.
  • இவரது பெயருடன் கௌரவப் பட்டமான “லோகமான்ய” என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர்.
  • தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!