Daily Current Affairs July 21 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 21 2021 in Tamil
Daily Current Affairs July 21 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

  • சீனாவில் 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • சீனாவில் மின்காந்த சக்தியால் இயங்கும் ‘மேக்லேவ்’ என்ற அதிவேக ரயிலை, ‘சி.ஆர்.ஆர்.சி., ஜூஜோ எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் லிமிடட்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. ஷாண்டோங் மாகாணத்தின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள குவிங்டாவ் நகரத்தில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
  • இந்த ரயில் மணிக்கு 600 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் அதிவேகமாக செல்லும் தரைவழி வாகனம் என்ற பெருமையை இந்த மேக்லேவ் ரயில் பெற்றுள்ளது.

கிளியோபாஸ் த்லமினி ஈஸ்வதினியின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • அண்மையில் இறந்த தெம்பா மசுகுவுக்குப் பிறகு ஈஸ்வதினியின் கிங் மிஸ்வதி III கிளியோபாஸ் த்லமினியை ஈஸ்வதினியின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்வதினி இராஜ்ஜியம்

தலைநகரம் : மேபபானி (நிர்வாகி), லோபாம்பா (சட்டமன்றம்)

நாணயம்: தென்னாப்பிரிக்க ராண்ட் & ஸ்வாசி லிலங்கேனி

பிரதமர்: கிளியோபாஸ் டிலாமினி

மிச்சிகனைச் சேர்ந்த வைதேஹி டோங்ரே 2021 மிஸ் இந்தியா யுஎஸ்ஏ ( MISS INDIA USA) என்ற பட்டத்தை பெற்றார்.

  • மிச்சிகன் (அமெரிக்கா) பகுதியைச் சேர்ந்த 25 வயதான வைதேஹி டோங்ரே 2021 மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என முடிசூட்டப்பட்டார்.
  • இரண்டாவது இடம் : ஜார்ஜியாவைச் சேர்ந்த ஆர்ஷி லலானி
  • மூன்றாவது இடம் : வட கரோலினாவைச் சேர்ந்த மீரா கசாரி
  • இந்திய கிளாசிக்கல் நடனம் கதக்கின் குறைபாடற்ற நடிப்பிற்காக வைதேஹி டோங்ரே ‘மிஸ் டேலண்டட்’ என்ற விருதை வென்றார்.
தேசிய நிகழ்வுகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி நடக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எஸ்.சி., – எஸ்.டி., எனப்படும் பட்டியலினப் பிரிவினர் பற்றிய தகவல் மட்டுமே சேகரிக்கப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி நடக்காது’ என, லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • தற்போது நாடு முழுதும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அதிகபட்சம் 49.5 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்து உள்ளது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
  • பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1931ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2011ல் சமூக, பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • ஓ.பி.சி., பிரிவில் உள்ள ஜாதிகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஜி. ரோஹிணி தலைமையில் ஓ.பி.சி., கணக்கெடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த சூழ்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், அது பல புதிய பிரச்னைகளை உருவாக்கும். ஒவ்வொரு ஜாதியினரும் அதிக அளவு இட ஒதுக்கீடு கேட்கும் சூழ்நிலை உருவாகும். அதை தவிர்க்கவே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளது.

அனைத்து ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அசாம் அரசு அறிவித்துள்ளது.

  • ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு அசாமில் அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
  • அசாமுக்காக இதுவரை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைவருக்கும் அசாம் அரசால் விளையாட்டு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அசாம்

  • தலைநகரம் : டிஸ்பூர்
  • முதல்வர்: ஹிமந்தா பிஸ்வா சர்மா
  • ஆளுநர்: ஜெகதீஷ் முகி

ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் என பெயர் மற்றும் செய்யப்பட்டுள்ளது.

  • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பொதுவான உயர் நீதிமன்றம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கான அதிகாரப்பூர்வமாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம் என மறுபெயரிடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர்

  • தலைநகரம்: ஸ்ரீநகர் (கோடைகாலம்), ஜம்மு (குளிர்காலம்)
  • லெப்டினன்ட் கவர்னர்: மனோஜ் சின்ஹா

பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி ஆவணங்களை வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது.

  • ‘லெஜிட் டாக்’ பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி ஆவணங்களை வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
  • லெஜிட் டாக் என்பது ஒரு பிளாக்செயின் தொழிற்நுட்பமாகும்.இது கிட்டத்தட்ட 1 மில்லியன் டேம்பர்-ப்ரூஃப் டிப்ளோமா சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் உலகின் மிகப்பெரிய பிளாக்செயினில் இயங்கும் கல்வி நற்சான்றிதழ் முறை ஆகும்.

மகாராஷ்டிரா

தலைநகரம் : மும்பை

முதலமைச்சர்: உத்தவ் தாக்கரே

ஆளுநர்: பகத் சிங் கோஷ்யரி

கரிம பொருட்கள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ‘ராஜ் கிசான் ஆர்கானிக்’ மொபைல் செயலியை ராஜஸ்தான் அரசு உருவாக்கியுள்ளது.

  • கரிம பொருட்கள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ‘ராஜ் கிசான் ஆர்கானிக்’ என்ற மொபைல் செயலியை ராஜஸ்தான் விவசாய அமைச்சர் லால்சந்த் கட்டாரியா அறிமுகப்படுத்தினார்.
  • தனிப்பட்ட விவசாயிகள் அல்லது உழவர் குழுக்கள் தங்களை இந்த செயலியில் பதிவு செய்து வாங்குபவர்களுக்கு நேரடியாக தங்கள் தயாரிப்புகளை விற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்

  • தலைநகரம்: ஜெய்ப்பூர்
  • முதல்வர்: அசோக் கெஹ்லோட்
  • ஆளுநர்: கல்ராஜ் மிஸ்ரா

குஜராத்தில் பாலிகா பஞ்சாயத்தின் முதல் சர்பஞ்சாக 20 வயதான பாரதி கார்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • குஜராத்தின் குனாரியா கிராமத்தில் உள்ள பாலிகா பஞ்சாயத்தின் முதல் சர்பஞ்ச் ஆனார்.
  • பெண்கள் மற்றும் இளம்பருவ பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண 21 வயதிற்குட்பட்ட சிறுமிகளால் நிர்வகிக்கப்பட வேண்டிய ஒரு தனித்துவமான அமைப்பான பாலிகா பஞ்சாயத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை குனாரியா கிராமம் நடத்தியது.
  • மொத்தம் 410 வாக்காளர்கள், அவர்கள் அனைவரும் 10–21 வயதுக்குட்பட்ட பெண்கள், ஒரு சர்பஞ்சைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்தனர்.

குஜராத்

தலைநகரம் : காந்திநகர்

ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்

முதல்வர் விஜய் ரூபானி

மாநில நிகழ்வுகள்

நீதிபதி முருகேசன் ஆணையம்

  • தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்குக்கு ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அமைத்திருந்தார்.
  • என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில், அதனை சரிசெய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
  • இந்த ஆணையம் தற்போது 86 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
  • ஆணையம் பரிந்துரைத்து இருக்கும் உள் ஒதுக்கீட்டை பரிசீலித்து, நடப்பு கல்வியாண்டிலேயே சம்பந்தப்பட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

“முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற விழா சென்னையில் நடத்தப்பட்டது.

  • “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற விழா சென்னையில் நடத்தப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்றும்  தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டுக்கான மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவோம் என்றும் அவர் கூறினார்.
  • இந்த நிகழ்ச்சியில், 35 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. மேலும், 9 ஆலைகளுக்கான அடிக்கல்லும், 5 ஆலைகளின் செயல்பாடுகளை தொடக்கியும் வைத்தார்.
  • ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன்மூலம் சுமார் 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஒற்றைச் சாளர இணையம் 2.0

  • தொழில் புரிவதை எளிதாக்கவும், அரசின் அனுமதிகளை விரைந்து வழங்கிடவும் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0-வை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
  • இப்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில் 24 துறைகளின் 100 சேவைகள் கொண்ட ஒரு மேம்படுத்தப்பட்ட இணையதளமாக இருக்கும்.
  • இணைய முறையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். உரிய துறைகளுக்கு அவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும். உரிய துறைகளுடன் காணொலி மூலமாகச் சந்திப்புகள் நடத்தப்படும்.
  • செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வாடிக்கையாளர்களுடன் உடனடி உரையாடல்கள் நடத்தப்படும். இந்த வசதிகள் அனைத்தும் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 மூலமாக கிடைக்கும்.
விண்வெளி

அமேசான் நிறுவனம் – ” புளு ஆர்ஜின் “

  • உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமேசான் நிறுவனரான ஜெப் பெசாசின் விண்வெளி சுற்றுலா பயண திட்டத்திற்க்காக “புளு ஆர்ஜின்” என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி பொறியாளர்கள் “நியூ செப்பர்டு” என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளனர்.
  • விண்வெளி வீரர்களுடன், செலுத்துனர் இல்லாமல் தானியங்கி முறையில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட முதல் விண்கலம் நியூ ஷெப்பார்ட் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த விண்கலத்தில் ஜெப் பெஸோசுடன்  அவரது சகோதரர் மார்க் பெஸோஸ்,  82 வயதான விண்வெளி பயிற்சி பெற்ற வீராங்கனை மேரிவாலஸ், 18 வயதான ஆலிவர் டேமென் மற்றும் இந்தியாவை சேர்ந்த சஞ்சல் கவாண்டே ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.
  • 10 நிமிடங்கள் 20 வினாடிகளில் இந்த விண்வெளி பயணம் நிறைவுபெற்றது .
  • இதன் மூலம்  விண்வெளிக்கு பயணம் செய்த மிக வயதானர் என்ற பெருமையை மேரிவாலசும், மிக இளம் வயது நபர் என்ற பெருமையை ஆலிவர் டேமென்னும் பெற்றுள்ளனர்.
  • விண்வெளிக்கு செல்லும் 5வது இந்தியர் என்ற பெருமையை மஹாஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண் சஞ்சால் கவாண்டேபெற்றுள்ளார.
  • இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு சென்ற ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், சிரிஷா பண்ட்லா ஆகியோரது வரிசையில் தற்போது சஞ்சால் கவான்டேவும் இடம்பெற்றுள்ளார.
  • ஏற்கனவே லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன் தன் “விர்ஜின் கேலடிக்” குழுவினருடன் விண்வெளி சுற்றுலா பயணத்தை சமீபத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பொருளாதாரம்

“சூப்பர் சேவர் கிரெடிட் கார்டு” – ICICI வங்கி வெளியிட்டுள்ளது.

  • வாடிக்கையாளர்கள் பல்வேறு கடன் அட்டைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரே அட்டையில் அவற்றின் எல்லா பலன்களையும் பெறுவதற்காக ” கோ பிராண்ட் கிரெடிட்” கார்டை  ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இணைந்து  ICICI வங்கி வெளியிட்டுள்ளது.
  • இந்த அட்டையை தினமும் பயன்படுத்தி எரிபொருள் மட்டுமில்லாமல் , அனைத்து சேவைகளிலும், இ – வர்த்தகங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அறிவியல்/ தொழிற்நுட்பம்

ஆறு நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  • ஆறு அதிநவீன பிரமாண்டமா நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இரு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.
  • “ப்ராஜெக்ட் – 75 இந்தியா ” திட்டத்தின் கீழ் 43000 கோடி செலவில் ஆறு அதிநவீன நீர்மூழ்கிகப்பல்களைஉள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நம் கடற்படையில் 140க்கும் மேற்பட்ட போர்கப்பல்கள்  இடம்பெற்றுள்ளன.
  • மும்பையை சேர்ந்த மஸாகன்  டாக் கப்பல் காட்டும் நிறுவனம் மற்றும் டியூப்ரோ நிறுவனம் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ரஷியாவில் சர்வதேச விமான கண்காட்சி: முதல்முறையாக இந்திய விமானப்படை குழு பங்கேற்றது.

  • ரஷியாவின் சுகோவ்ஸ்கியில் நடைபெறும் மேக்ஸ் சர்வதேச விமானக் கண்காட்சியில் முதல்முறையாக இந்திய விமானப் படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு பங்கேற்கவுள்ளது.
  • ரஷியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேக்ஸ் சர்வதேச விமானக் கண்காட்சி நடைபெறும். இந்தக் கண்காட்சி இவ்வாண்டு ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • இந்தக் கண்காட்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக ‘துருவ்’ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
  • கடந்த 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சாரங் குழு, சர்வதேச அளவில் முதல்முறையாக 2004-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய விமான கண்காட்சியில் கலந்து கொண்டது.
  • இதுதவிர, உத்தரகண்டில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் ரஹத், 2017-ஆம் ஆண்டு தாக்கிய ஒக்கி புயல் மற்றும் 2018-ஆம் ஆண்டு கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்தக்குழு மீட்பு பணிகளில் ஈடுபட்டது.

ரஷியா நீண்ட தூரம் சென்று தாக்கும் அதிவேக எஸ்-500 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

  • தரையிலிருந்து நீண்ட தூர வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான அதிவேக எஸ் 500 வகை ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இதில் ஏவுகணை திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
  • ப்ரோமிதியஸ் என்று அழைக்கப்படும் எஸ் -500 அமைப்பு, கப்பல் ஏவுகணைகளையும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் அழிக்கும் திறன் கொண்டது. மேலும் சுமார் 600 கிமீ (373 மைல்) இலக்கை இடைமறித்து தாக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்டிஓ(DRDO) உருவாக்கிய அதிவலிவு கொண்ட டைட்டானியம் கலவை

  • போர் விமானங்கள் உள்ளிட்டவற்றின் கருவிகளைத் தயாரிப்பதற்காக அதிக வலிமை கொண்ட பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உருவாக்கியுள்ளது.
  • ‘பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையில் வனேடியம், இரும்பு, அலுமினியம் ஆகியவை டைட்டானியத்துடன் கலக்கப்படுகின்றன. இந்த உலோகக் கலவையானது குறைந்த எடையுடையதாக உள்ளது. அதே வேளையில், அதிக வலிமை கொண்டுள்ளதாகவும் கலவை திகழ்கிறது.
  • இந்த உலோகக் கலவை மூலம் கருவிகளைத் தயாரிப்பதன் வாயிலாக, போர் விமானங்கள் உள்ளிட்டவற்றின் எடை 40 சதவீதம் வரை வெகுவாகக் குறையும்.
  • பீட்டா டைட்டானியம் உலோகக் கலவை மூலமாகத் தயாரிக்கப்படும் கருவிகளின் அரிப்புத்தன்மை எஃகை விடக் குறைவாகவே உள்ளது.
விளையாட்டு

ஐ.சி.சி –ன்(ICC)  புதிய உறுப்பினர்களாக மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை சேர்ந்துள்ளன.

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் சுவிட்சர்லாந்தை தனது 78 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்த்துள்ளது.
  • மங்கோலியா மற்றும் தஜிகிஸ்தான் ஆசியா பிராந்தியத்தின் 22 மற்றும் 23 வது உறுப்பினர்கள்.
  • ஐரோப்பாவின் 35 வது உறுப்பினராக சுவிட்சர்லாந்து இணைந்தது, ஐ.சி.சி இப்போது 106 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது (12 முழு உறுப்பினர்கள் மற்றும் 94 இணை உறுப்பினர்கள்).

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC)

தலைமையகம்: துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ)

தலைவர்: கிரெக் பார்க்லே

ஐ.சி.சி.(ICC) ஒருநாள் போட்டிக்கான பேட்டிங்’ தரவரிசையில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

  • சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் விராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது.
  • ‘பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், மீண்டும் ‘நம்பர்-1 இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் இவர், 9வது முறையாக முதலிடத்தை கைப்பற்றினார்.
  • மற்ற இந்திய வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் முறையே 9, 17வது இடத்தில் உள்ளனர்.
  • ‘பவுலிங் தரவரிசையில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி 5வது இடம், பூணம் யாதவ் 9வது இடத்தில் உள்ளனர்
  • ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 5வது இடத்தில் நீடிக்கிறார். இவர், பவுலிங் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச ‘டுவென்டி-20’

  • சர்வதேச ‘டுவென்டி-20′ போட்டிக்கான பேட்டிங்’ தரவரிசையில் இந்தியாவின் ஷபாலி வர்மா முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 3வது இடத்துக்கு முன்னேறினார்.
  • பவுலிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 6வது இடம, பூணம் யாதவ் 8வது இடத்தில் உள்ளனர்.
  • ‘ஆல்-ரவுண்டர் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா 5வது இடத்தில் தொடர்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக் – 2021

  • ஒலிம்பிக் போட்டி நாளை மறுநாள் முறைப்படி நடைபெற உள்ள நிலையில் கால்பந்து மற்றும் பேஸ்பால் இரண்டு நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்குகிறது.

ஒலிம்பிக் ஒரு பார்வை

  • ஒலிம்பிக் திருவிழா 1896 ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
  • ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் சில புதிய விளையாட்டுகள் சேர்க்கப்படுவதும், சில விளையாட்டுகளுக்கு ஓய்வு அளிக்கப்படுவதும் வழக்கம்.
  • அதன் படி இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள 33 விளையாட்டுகளில் ஸ்போர்ட் கிளைம்பிங்,சர்ப்பிங் ,ஸ்கேட்போர்டிங், கராத்தே ஆகிய 4 போட்டிகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

1964 – டோக்கியோ ஒலிம்பிக்ஸ்

  • ஆசியக் கண்டத்தில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும்.
  • இப்போட்டியில் தான் ஸ்டாப் வாட்ச் மூலம் பந்தய நேரத்தை கணக்கிடுவது கடைசியாக மேற்கொள்ளப்பட்டது.
  • கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி அணிகள் ஒரே அணியாக பங்கேற்ற கடைசி போட்டி இது தான்.
  • வாலிபால், ஜூடோ அறிமுகம் செய்யப்பட்டது.

1968 – மெக்ஸிகோ சி ஒலிம்பிக்ஸ்

  • லத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும்.
  • வழக்கமான சிந்தர்   ஓடுபாதைக்கு பதிலாக   ஆல்வெதர்   தடகள    ஓடுபாதை அறிமுகம்  செய்யப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து மெக்ஸிகோ சிட்டி உயரமாக இருந்ததால், 800 மீ. வரையிலான ஓட்டம், குதித்தல், எறிதல், பளுதூக்குதல், போன்றவற்றில்  உலக சாதனைகள்  நிகழ்த்தப்பட்டன.
  • மெக்ஸிகன் தடைதாண்டும்   வீராங்கனை   பசிலியோ   ஒலிம்பிக்  ஜோதி ஏற்றிய   முதல்   பெண்  ஆனார்.  ஸ்வீடனைச்  சேர்ந்த  பென்டத்லான்  வீரர் ஹேன்ஸ்  குன்னார்  ஊக்கமருந்தை  பயன்படுத்திய   முதல்  ஒலிம்பிக்  வீரர் ஆனார்.

1972 – முனிக் ஒலிம்பிக்ஸ்

  • இப்போட்டியில்  தான்   மிகவும்   சோகமான சம்பவமாக   பாலஸ்தீன   கறுப்பு செப்டம்பர்   இயக்க   பயங்கரவாதிகளால்   இஸ்ரேலைச்  சேர்ந்த 11 வீரர்கள், 1 பயிற்சியாளர், 1 மேற்கு ஜெர்மனி   காவலர்   சுட்டுக்  கொல்லப்பட்டனர்.
  • முதன்முறையாக ஒலிம்பிக் மாஸ்காட் சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது.
  • 52 ஆண்டுகள் கழித்து வில்வித்தை போட்டி நடத்தப்பட்டது
முக்கிய தினங்கள்

சர்வதேச செஸ் தினம் – 20 ஜூலை

  • சர்வதேச செஸ்  தினம்  ஒவ்வொரு ஆண்டும்  ஜூலை 20 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் FIDE (உலக செஸ் கூட்டமைப்பு) ஸ்தாபக   நாளாக கொண்டாடப்படுகிறது.
  • 1924 ஜூலை 20 அன்று பிரான்சின் பாரிஸில்   நடந்த எட்டாவது  கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில்  இருந்து  இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!