Daily Current Affairs July 17 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 17 2021 in Tamil
Daily Current Affairs July 17 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

மத்திய -தெற்காசிய  2021 மாநாடு

  • மத்திய -தெற்காசிய 2021 மாநாடு” உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்றது.
  • இதில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர்  செர்கேய் லாவ்ரோவ், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஆப்கானிஸ்தான்  அதிபர் அஷ்ரப்  கனி  ஆகியோர் கலந்துகொண்டனர் .
  • இதில் ஜெய்சங்கர் “நாடுகளுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்துவதற்க்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒருவழி பாதை போல் இல்லாமல் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார.

இந்தியா – பிரிட்டன்  கடற்படை கூட்டுப்பயிற்சி

  • இந்தியா – பிரிட்டன் கடற்படை பங்கேற்கும் கூட்டுப்பயிற்சி ஜூலை 16 2021 அன்று இந்தியபெருங்கடல் பகுதியில் நடைபெற உள்ளது இந்த கூட்டு பயிற்சியில் பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான HMS குயின் எலிசபெத் பங்கேற்கிறது.
  • கடற்படை வலிமையை வெளிக்காட்டும் நோக்கில் இந்தோ -பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சுமார் 40 நாடுகளுடன் தனித்தனியாக கூட்டுப்பயிற்சியை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது.
  • HMS குயின் எலிசபெத் போர்க்கப்பலில் F35B போர்விமானகளும், 14 ஹெலிகாப்டரும் இடம்பெற்றுள்ளன.
  • அக்கப்பலுடன் பிரிட்டன் கடற்படையின் 6 கப்பல்களும், ஒரு நீர்முழ்கி கப்பலும் இந்தியாவுக்கு வந்துள்ளன.
  • இந்த கூட்டுப்பயிற்சி இந்தோ -பசுபிக் பிராந்தியத்தில் உள்ள இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் பெரிய மிதக்கும் சூரிய மின் நிலையம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது

  • உலகின் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டது.
  • தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பரப்பளவில் சிறிய நாடு. இதனை கருத்தில் கொண்டு நீர்நிலையின் மேல், மிதக்கும் வகையிலான சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதை “செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரிஸ்” Sembcorp Industries என்ற நிறுவனம் அமைத்துள்ளது. இதில் 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேசிய நிகழ்வுகள்

நாட்டின் முதல் உணவு தானிய ஏடிம் (ATM ) ஹரியானா மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது

  • நாட்டிலேயே முதன்முறையாக உணவு தானியங்களை வழங்கும் தானியங்கி ஏடிம் இயந்திரத்தை ஹரியானா மாநில அரசு குருகிராமில் நிறுவியுள்ளது .
  • நியாய விலை கடைகளில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவும் , சரியான அளவில் உணவு தானியங்களை வழங்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
  • குருகிராம் பாருக்நகர் நியாய விலைக்கடைகளில் ” அன்னபூர்த்தி ” என்ற தானியங்கி உணவு ஏடிம் நிறுவப்பட்டுள்ளது .
  • இந்த ஏடிம் களில் 5-7 நிமிடங்களில் 70 கிலோ வரைஎல்லான தானியங்களை வழங்க முடியும்
  • ஸ்மார்ட்க்கார்ட் மூலமாகவோ . ஆதார் எண் மூலமாவோ இந்த எந்திரத்தில் உணவு தானியங்களை பெற முடியும்

ஹரியானா

  • தலைநகரம் :சண்டிகர்.
  • முதல்வர் :மனோகர் லால் கட்டர்
  • ஆளுநர் : பந்தாரு :தத்தாத்ரேயா

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் “ உமாங் ஆப்” (UMANG App) இல் வரைபட சேவைகளை  வழங்குவதற்காக  மேப்மிஇந்தியாவுடன் (MapmyIndia) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அரசாங்க சேவைகளை ஆன்லைனில் வழங்குவதன் மூலம் குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்முயற்சிகளை மேலும் மேம்படுத்துவதற்கும், ‘ஆத்மனிர்பர் பாரதத்தின்’ கருப்பொருளைக் கருத்தில் கொண்டு, மேட்மி இந்தியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் “ உமாங் ஆப் ” (UMANG App) இல் வரைபட சேவைகளை வழங்கவுள்ளது
  • மேப்மிஇந்தியா (MapmyIndia) வரைபடங்களுடன் UMANG ஐ ஒருங்கிணைப்பதன் விளைவாக, குடிமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள நியாயவிலைக்கடை, இரத்த வங்கிகள் மற்றும் பலவற்றை ஒரு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
  • மேப்மிஇந்தியாவால் (MapmyIndia) கட்டப்பட்ட இந்தியாவின் மிக விரிவான மற்றும் ஊடாடும் தெரு மற்றும் கிராம அளவிலான வரைபடங்களிலும் இவற்றைக் காண முடியும்.
  • உமாங் ஆப் மற்றும் மேப்மிஇந்தியா இடையேயான இணைப்பு மூலம் குடிமக்கள் ஓட்டுநர் தூரத்தைக் காணவும், திசைகளைப் பெறவும், வழிசெலுத்தலின் போது போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு எச்சரிக்கைகள் உள்ளிட்ட இடங்களுக்கு குரல் மற்றும் காட்சி வழிகாட்டுதல்களையும் வழங்க முடியும்.
  • MeitY – Ministry of Electronics and Information Technology

விவசாயிகள் விரும்பிய மொழியில் ‘சரியான நேரத்தில் சரியான தகவல்களை’ பெற வசதியாக, ‘கிசன்சாரதி’ என்ற டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது .

  • விவசாயிகள் விரும்பிய மொழியில் ‘சரியான நேரத்தில் சரியான தகவல்களை’ பெற வசதியாக, ‘கிசன்சாரதி’ என்ற டிஜிட்டல் தளம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஸ்ரீ அஸ்வினிவைஷ்ணா ஆகியோருடன் இணைந்து தொடங்கப்பட்டது.
  • டிஜிட்டல் இயங்குதளம் கிசான் சரதி விவசாயிகளுக்கு அவர்கள் விரும்பிய மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெறுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது
  • விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகள் குறித்த தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை விஞ்ஞானிகளிடமிருந்து நேரடியாக டிஜிட்டல் தளத்தின் மூலம் பெறலாம்.
 மாநில செய்திகள்

கீழடி அகழாய்வு

  • நீர் மேலாண்மையில் தமிழர்கள்  பழங்காலத்திலேயே சிறந்து விளங்கிவர்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற உறை கிணறுகள் உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன
  • கீழடியில் தற்போது 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது .
  • இங்கு சுடுமண் கிண்ணம் மற்றும் பாசிமணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம்

  • 2004 ம் ஆண்டு ஜூலை 16 ம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது .இதில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்
  • 17 ம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 16 அன்று அனுசரிக்கப்பட்டது

சிவகங்கை அருகே கி.பி 16 ம் நூற்றாண்டை  சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது

  • சிவகங்கை அருகே சோழபுரத்தில் கி.பி 16 ம் நூற்றாண்டை  சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • சோழபுரம் குண்டகண்மாயில் நான்கரை அடி  உயரமுள்ள , நான்கு பக்கங்களை கொண்ட அந்த கல்லின் ஒரு பகுதியில் 30 வரியில் சிதைந்த நிலையில் எழுத்துக்களும் , மற்றொரு பகுதியில் வாமனஉருவமும் பொறிக்கப்பட்டுள்ளது

Try Today Current Affairs Quiz

  • மேலும் காத்தமை நாயக்கர் என்னும் பெயரும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது
  • மன்னார் ஆட்சியின் போது பெரும்பாலும் நிலம் தொடர்பான ஆவணங்களிலோ அல்லது கல்லிலோ வாமன உருவம் பொறிக்கப்படுவது வழக்கம்

“Mobile System’ என்ற புதிய திட்டம்  மலைவாழ் பகுதியிலுள்ள குழந்தைகளுக்காக தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது .

  • மலைவாழ் பகுதியிலுள்ள குழந்தைகள் , கல்வி கற்காமல் இடைநிற்கும் மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு தொடங்கி உள்ளது .
  • தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் N. கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தார்
விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

  • 16 அணிகள் பங்கேற்கும் 7 வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வருகிற அக்டோம்பர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற இருக்கிறது
  • இந்த போட்டியில் எந்தெந்த அணிகள் இடம்பெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது .
  • குரூப்- 1 பிரிவில், நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து , தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும்
  • குரூப் -2 பிரிவில், முன்னாள் சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளும் இடம் பெற உள்ளன .
  • ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா , பாகிஸ்தான் அணிகள் 2019ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு முதல் முறையாக சந்திக்க இருக்கின்றன
  • ICC– International Cricket Council

ஒலிம்பியாட் சதுரங்க போட்டி

  • சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து பார்வை குறைபாடு உடையவர் .
  • இவர் 2021 அக்டோம்பர்  16 ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான ஒலிம்பியாட் சதுரங்க போட்டியில் இந்திய அணி சார்பில் கேப்டனாக பங்கேற்கிறார்.
  • மேலும் இவர் 2020 ம் ஆண்டு 63 நாடுகள் பங்கேற்று இணையதளம் மூலம் நடத்தப்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சதுரங்க போட்டியில் இந்தியா அணிக்கு கேப்டனாக பணியாற்றியுள்ளார்.
  • இந்தியாவிலிருந்து இந்த போட்டியில் மொத்தம் 5 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்திய டென்னிஸ் வீரர் – சுமித் நாகல்

  • இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர்  ஒற்றையர் பிரிவில் பங்கேற்பதற்க்கு தகுதிபெற்றுள்ளார்.
  • மேலும் ஆடவர் இரட்டை பிரிவில் ரோஹன் போபண்ணா உடன் இணைந்து சுமித் நாகல் சேர்ந்து விளையாட உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய குழுவினருக்கு பாதுகாப்பு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற ஐ பி எஸ் அதிகாரி பி.கே .சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

டென்னிஸ் வீரர் – ஜோகோவிச்

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் செர்பியா அணிசார்பில் ஜோகோவிச் பங்குபெறஉள்ளர்.
  • 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஜோகோவிச் ஏற்கனவே பெற்றுள்ளார்.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜோகோவிச் தங்கம் வென்றால், கோல்டன் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
  • ஏற்கனவே இந்த சிறப்பை ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் மட்டுமே 1988-ல் நிகழ்த்தி உள்ளார்.

ஒலிம்பிக் ஒரு பார்வை

  • 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற இருக்கிறது.
  • 200 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 11.000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபெற உள்ளனர்

மைக்கேல் பெல்ப்ஸ்

  • ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 23 தங்க பதக்கங்களை வென்றவர் என்ற பிரமாண்ட சாதனையை அமெரிக்கா நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் நிகழ்த்தியுள்ளார்.
  • 2000ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பங்கேற்றார் . ஒட்டுமொத்தமாக இவரிடம் 28 ஒலிம்பிக் பதக்கங்கள் உள்ளன

இயான் மில்லர்

  • அதிகபட்சமாக 10 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர் .
  • கனடாவின் குதிரையேற்ற வீரர் இயான் மில்லர் முதல் முறையாக 1972 பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார் .

மர்ஜோரி ஜெஸ்ட்ரிங்

  • ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிக சிறிய வயதில் (13 வயது) தங்கப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையை பெற்றவர்.
  • அதிக பதக்கங்களை பெற்றுள்ள நாடு
  • அமெரிக்கா – 2523 பதக்கங்கள்
  • ஜெர்மனி – 1346 பதக்கங்கள்

டேபிள் டென்னிஸ்

  • 1988 ம் ஆண்டு முதல் முதலாக டேபிள் டென்னிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டது .
  • அது முதல் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது
  • சீனா – 53 பதக்கம்
  • தென்கொரியா – 18 பதக்கம்
  • 1912 – ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்ஸ்
  • இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் முதலிடம் பெற்றவர்களுக்கு முழுமையான தங்கத்தில் செய்யப்பட்ட பதக்கங்கள் கடைசியாக வழங்கப்பட்டன
  • ஒலிம்பிக் சின்னமான 5 வளையங்களை குறிக்கும் வகையில் முதல்முறையாக 5 கண்டங்களை சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர் .
  • மேலும், நேரத்தை கண்டறிய தானியங்கி இயந்திரங்கள் மற்றும் அழைப்பு விடுக்கும் பொது மைக் வசதியும் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன.

1920- ஆன்ட்வொர்ப் ஒலிம்பிக்ஸ்

  • முதல் உலக போரால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நாட்டுமக்களை கௌரவப்படுத்தும் வகையில் ஆன்ட்வொர்ப் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன
  • தொடக்க விழாவின் போது 5 வலையங்களுடன் கூடிய ஒலிம்பிக் கொடி , முதல் முதலாக ஏற்றப்பட்டது .
  • அனைத்து வீரர் வீராங்கனைகள் சார்பில் விளையாட்டு உறுதிமொழியை வீரர் ஒருவர் முதல்முறையாக ஏற்றார் .
  • சமாதானத்தை குறிக்கும் வகையில் முதல் முறையாக புறாக்களும் பறக்கவிடப்பட்டன

1916- பெர்லினின் ஒலிம்பிக்ஸ்

  • பெர்லினில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதல் உலக போர் காரணமாக ரத்து செய்யபட்டன.
  • 2004- கிரீஸ் ஒலிம்பிக்ஸ்
  • கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் 28 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது .
  • இந்தியாவின் ராஜ்யவர்தன் சிங் துப்பாக்கி சுடுதல் (டபுள் ற்ற) போட்டியில் வெளிப்பதக்கம் வென்றார் .
  • இதன்மூலம் 104 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் போட்டியின் தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றார்
புத்தகம்

“Urdu Poets and Writers – Gems of Deccan” என்ற புத்தகத்தை  ஜே.எஸ். இப்தேகர் எழுதியுள்ளார்

  • “Urdu Poets and Writers – Gems of Deccan’” என்ற புத்தகத்தை மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ். இப்தேகர் எழுதியுள்ளார்
  • இந்த புத்தகத்தை துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வெளியிட்டார்
முக்கிய தினங்கள்

சர்வதேச நீதிக்கான உலக தினம் – ஜூலை 17

  • சர்வதேச நீதிக்கான உலக தினம் ஆண்டுதோறும் ஜூலை 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது சர்வதேச குற்றவியல் நீதி நாள் அல்லது சர்வதேச நீதி தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • சர்வதேச குற்றவியல் நீதிக்கான வளர்ந்து வரும் அமைப்பை இந்த நாள் அங்கீகரிக்கிறது.

உலக ஈமோஜி தினம் -ஜூலை 17

  • உலக ஈமோஜி தினம்2014 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று அனுசரிக்கப்படுகிறது.

Try Today Current Affairs Quiz

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!