Daily Current Affairs July 14 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 14 2021 in Tamil
Daily Current Affairs July 14 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 14 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

பீம் – யு .பி .ஐ  பூட்டானில் அறிமுகப்படுத்தப்பட்டது

  • மத்திய அரசின், மொபைல் போன் பண பரிவர்த்தனைக்கான பீம் – யு .பி .ஐ பூட்டானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  • இந்தியாவின் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் யு .பி .ஐ எனப்படும் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை தளத்தில் மின்னணு பணப்பட்டுவாடா வசதியை வழங்குகிறது இதற்காக பீம் என்ற மொபைல் செயலியை 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது
  • இத்தகைய பீம் – யு .பி .ஐ வசதி நம் அண்டைநாடான பூட்டானில் , மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கானபெரென்ஸ் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தார் .
  • கொரோனா காலத்தில் மக்கள் மின்னணு முறையில் பொருட்கள் வாங்க இந்த வசதி உதவி உள்ளது
  • இந்தியா நிதி தொழிற்நுட்ப துறையின் மிக சிறந்த சாதனைகளில் ஒன்றாக உள்ளது
  • UPI– Unified Payments Interface
  • BHIM-Bharat Interface for Money

பூட்டான்

தலைநகரம் : திம்பு

நாணயம் :பூட்டானிய ந்குல்ட்ரம்

பிரதமர் :லோட்டே ஷெரிங்

தேசிய நிகழ்வுகள்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெரும் வீரர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடினர்

  • டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு 228 பேர் கொண்ட இந்தியா அணி கலந்து கொள்ள இருக்கிறது
  • பிரதமர் நரேந்திரமோடி வீரர், வீராங்கனைகள் ஒவ்வொருவருடனும் உரையாடி அவர்கள் கடந்து வந்த பாதை மற்றும் சாதனைகளை நினைவு கூர்ந்துள்ளார்
  • மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக செயல்படவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

அயோத்தி வளர்ச்சி திட்டம்

  • அயோத்தியை சர்வதேச ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள உத்தரபிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது
  • அய்யோத்தில் ராமர்கோவில் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது .
  • அத்துடன் அயோத்தியில் ராமர் பெயரில் பிரமாண்டமான சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது
  • ராமபிரான் 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததை நினைவு கூறும் வகையில் அய்யோத்தில் சரயு நதிக்கரையில் ” ராமாயன் வனம் ” உருவாக்கப்பட உள்ளது
  • 1200 ஏக்கரில் வேதிக் நகரம் அமைக்கப்படவுள்ளது
  • உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது

தேசிய கடல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்

  • நம் நாட்டில் ஒன்பது கடலோர மாநிலங்களும் நான்கு யூனியன்  பிரதேசங்களும் உள்ளன. கடலோர பாதுகாப்பு பணிகளை மத்திய அரசு கவனித்து வருகிறது.
  • தேசிய கடல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது
  • அதன்படி கடல் பாதுகாப்பை வலுப்படுத்த தேசிய கடல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது

இந்தியாவின் முதல் பச்சை ஹைட்ரஜன் இயக்க திட்டம்

  • இந்தியாவின் முதல் பச்சை ஹைட்ரஜன் இயக்கம் திட்டத்தை லடாக்,லேவில் அமைக்க என்டிபிசி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லிமிடெட் முடிவுசெய்துள்ளது

கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை நடத்த ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது

  • பிப்ரவரி 2022 இல் ‘கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு – 2021’ ஏற்பாடு செய்ய ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
  • கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின் போது 2021 பிரிக்ஸ் விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஹரியானா அறிவித்துள்ளது

இந்தியாவின்  மிகப்பெரிய சூரிய பூங்காவை ரான் ஆஃப் கட்சில் அமைக்க என்.டி.பி.சி (NTPC) முடிவு செய்துள்ளது 

  • என்.டி.பி.சி யின் 100% துணை நிறுவனமான என்.டி.பி.சி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி லிமிடெட், குஜராத்தின் கவாடாவில் உள்ள ரான் ஆஃப் கட்சில் 4,750 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவை அமைக்க புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் (MNRE) முன்வந்துள்ளது.
  • நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தியாளரால் கட்டப்படும் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய பூங்காவாக இது இருக்கும்.
  • சமீபத்தில், ஆந்திராவின் சிம்ஹாத்ரி வெப்ப மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியனை 10 மெகாவாட் (ஏசி) என்டிபிசி நியமித்துள்ளது.

MNRE – Ministry of New and Renewable Energy

NTPC– National Thermal Power Corporation

மாநில நிகழ்வுகள்

நீட் தேர்வு ஆய்வுக்குழு

  • நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை தமிழக அரசுக்கு தெரிவிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ .கே .ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது .
  • நீட் தேர்வு பாதிப்பு குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்பது , அவர்களின் நிலையை ஆராய்வது ஆகிய பணிகளுக்காகவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது
  • இந்த குழு ஆய்வுசெய்து தனது அறிக்கையை தமிழக அரசிடம்  சமர்ப்பிக்கும் .
  • மாணவர்களின் நிலை குறித்து நீட் தேர்வுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்யமுடியுமா என்பது குறித்தும் இந்த குழு ஆய்வு செய்யும்

விலையில்லா 2ஜி டேட்டா கார்டு

  • மாணவர்களுக்கு தமிழக அரசால் விலையில்லா 2ஜி டேட்டா கார்டு வழங்கப்பட்டுள்ளது
  • கொரோனா காரணமாக தற்போது கல்வி நிறுவனங்கள் செயல்படுவது இல்லை என்றாலும் மாணவர்கள் இந்த ஆண்டுக்கான படங்களை இணையவழி , இன்னையவழிநூலகம் போன்ற முறைகளில் பயின்று வருகின்றனர்
  • மாணவர்களுக்கு இந்த விலையில்லா 2ஜி டேட்டா கார்டு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

ராஜராஜ சோழன் கல்வெட்டு

  • தொண்டி அருகே நம்புதாளையில் ராஜராஜ சோழன் பெயரில் அமைந்த ராரா பெருவழியை (நெடுஞ்சாலை) குறிக்கும் , 800 ஆண்டுகள் பழைமையான பிற்கால பாண்டியர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
இறப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யஷ்பால் சர்மா காலமானார்

  • இந்தியா கிரிக்கெட் அணியின்முன்னாள் மீடில் ஆர்டர் பேட்ஸ்மனும் 1983 ம் ஆண்டு உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணியின் அங்கம் வகித்தவர்
  • 1983ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் கபில் தேவுக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்தார்
  • ஓய்வுக்கு பிறகு அவர் இந்தியா அணியின் தேர்வாளர் . நடுவர் . ரஞ்சி போட்டிக்கான உத்தரபிரதேச அணியின் பயிற்சியாளர் ஆகிய பதவிகளை வகித்தவர்
விளையாட்டு

ஒலிம்பிக் ஒரு பார்வை

உலகின் மின்னல் வேக மனிதர் – உசேன் போல்ட்

  • ஒலிம்பிக் தடகள விளையாட்டில் தவிர்க்க முடியாத ஒரு நபர் உசேன் போல்ட் ஜாம்மைக்க நாட்டை சேர்ந்தவர்
  • 2008,2012, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் (100 மீட்டர். 200 மீட்டர்) தொடர்ந்து 3 முறை தங்கம் வென்ற முதல் வீரர் உசேன் போல்ட்.
  • 2017 ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற அவர் தனது 30 வது வயதில் ஓய்வு பெற்றார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கான நடுவராக இந்தியாவை சேர்ந்த தீபக் காப்ரா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்

  • டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கான நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்தியர்  தீபக் காப்ரா ஆவார்
  • இவர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் .
  • 2010 காமன்வெல்த் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்
  • முதல் இந்திய நடுவராக 2014 ல்  ஆசிய விளையாட்டு போட்டிகள், இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் செயல்பட்டுள்ளார்
  • உலகக்கோப்பை உள்பட 20 போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்

உலக பேட்மிட்டன்

  • 2026 ம் ஆண்டுக்கான உலக பேட்மிட்டன் சாம்பியன் ஷிப் போட்டியை இந்திய நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

TN Job “FB  Group” Join Now

  • 2023 ல் சுதிர்மன் கோப்பை போட்டியை இந்தியா ஒருங்கிணைக்க இருந்த நிலையில் அந்த பொறுப்பை சீனாவிடம் ஒப்படைத்தது கொரோனா சூழல் காரணமாக தற்போது பின்லாந்தில் நடைபெறவுள்ளது
நியமனம்

டி .என் .பி .எஸ் .சி  உறுப்பினர்கள் நியமனம்

  • டி .என் .பி .எஸ் .சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக முனியநாதன் ,ஜோதி சிவஞானம் , அருள்மதி , ராஜ்மரியசூசை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
  • இவர்களது பதவி காலம் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை ஆகும்
  • ஏற்கனவே டி .என் .பி .எஸ் .சி ன் புதிய செயலாளராக IAS உமா மஹேஸ்வரி மற்றும் தேர்வு கட்டுப்பட்டு அலுவலராக IAS கிரண் குமார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
விண்வெளி

விண்வெளி ஒரு பார்வை

  • முதல் செயற்கைகோள் : ஸ்புட்னிக்-1 (ரஷ்யா), அக்டோம்பர் 4, 1957
  • நிலவில் முதல் கலம் : லூனா 2(ரஷ்யா) செப்டம்பர் 14, 1959
  • விண்வெளியில் பரந்த முதல் மனிதர் : யூ ரி ககாரின் (ரஷ்யா) ஏப்ரல் 12, 1961 வேஸ்டோக் 1 விண்கலம்
  • முதல் விண்வெளி பெண் : வேலென்டினா டெரெஸ்க்கோவா (ரஷ்யா) ஜுன்  , 1963  வேஸ்டோக் 6 விண்கலம்
  • நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் :  நீல் ஆம்ஸ்டராங் (அமெரிக்கா). ஜூலை 20, 1969
  • சர்வதேச விண்வெளி நிலையம் : 2000ல் கட்ட ஆரம்பித்து 2011ல் கட்டிமுடிக்கபட்ட சர்வதேச விண்வெளி நிலையம் தான் மனிதர்கள் கட்டிய மிகப்பெரிய கட்டுமானம் ஆகும் . இது  புவியை ஒரு நாளைக்கு 16 முறை சுற்றி வருகிறது .

இந்தியா

  • ஆரியப்பட்டா- இந்தியாவின் முதல் விண்வெளிக்கலம்  , இஸ்ரோ உருவாக்கியது ஆனால்  ரஷ்யா தான் அதை செலுத்தியது
  • சந்திராயன் -1 : நிலவை சுற்றும் கலம் . 2008 ல் அனுப்பப்பட்டது
  • மங்கள்யான் : செவ்வாய்யை சுற்றும் கலம் . 2013ல் அனுப்பப்பட்டது   முதல் முயற்சியில வெற்றி பெற்ற முதல் நாடு இந்தியா ஆகும்
  • 2016ல் இஸ்ரோ 20 விண்கலங்களை ஒரே ஏவுகளத்தின் மூலம் அனுப்பியது
  • 2017ல் ஒரே ஏவுகலத்தின் மூலம் 104 விண்கலங்களை இஸ்ரோ அனுப்பியது உலக சாதனையாகும்
புத்தகம்

“A Kashmiri Century: Portrait of a Society in Flux” என்ற புத்தகத்தை  கெம்லதா வக்லு எழுதியுள்ளார்

  • இந்த புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா வெளியிட்டது.

வெங்கையா நாயுடு கிராமப்புற இந்தியா மற்றும் விவசாயம் குறித்த ‘Palleku Pattabhishekam’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்

  • இந்தியாவின் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, முன்னாள் எம்.பி. யலமஞ்சிலி சிவாஜி எழுதிய ‘Palleku Pattabhishekam’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
  • இந்த புத்தகம் கிராமப்புற இந்தியா மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
முக்கிய தினங்கள்

பாஸ்டில் தினம் அல்லது பிரெஞ்சு தேசிய தினம்- ஜூலை 14

  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 அன்று பாஸ்டில் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் 1789 ஜூலை 14 அன்று பாஸ்டில் ஆண்டுவிழாவைக் குறிக்கிறது, இது பிரெஞ்சு புரட்சியின் திருப்புமுனையாகும்.

உலக காகித பை நாள் – ஜூலை 12

  • பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகிதப் பைகளைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை பரப்ப இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் சிதைவதற்கு பல ஆண்டுகள் ஆகும், அதேசமயம் காகித பைகளை குறைத்து எளிதாக மறுசுழற்சி செய்யலாம்.
  • 2021 ன் கருப்பொருள் : “பிளாஸ்டிக்கை ஒழித்து பூமியைப் பாதுகாக்கவும்”

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!