Daily Current Affairs July 10 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 10 2021 in Tamil
Daily Current Affairs July 10 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10 ஜூலை 2021

Top Current Affairs June 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

அணுசக்தி விண்வெளி பாதுகாப்பு ஒத்து ழைப்பு ஆகியவை குறித்து ரவிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவுடன் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

  • மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவை சந்தித்து ஆப்கன், ஈரான் சிரியா நாடுகளின் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
  • இந்த ஆண்டு நடைபெறும் இரு நாடு களுக்கு இடையேயான மாநாட்டில் இருநாட்டு நல்லுறவு மற்றும் அணுசக்தி, விண் வெளி பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

பிரிக்ஸ் S&T ஸ்டீயரிங் கமிட்டியின் 12 வது கூட்டத்தில் இந்தியா முன்மொழியப்பட்ட தலைமையிலான பிரிக்ஸ் கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு செயல் திட்டத்திற்கு (2021-24) அனைத்து பிரிக்ஸ் நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன .

  • ஒருவருக்கொருவர் புதுமை சுற்றுச்சூழல் அமைப்பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் புதுமைப்பித்தர்கள் மற்றும் தொழில்முனைவோரின் நெட்வொர்க்கிங் வசதிக்கும் திட்டத்தை இந்தியா முன்மொழிந்தது
  • செயல் திட்டத்தின் விவரங்களை பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு தொழில்முனைவோர் கூட்டாண்மை (STIEP) செயற்குழு உருவாக்கும்.
  • இந்த திட்டத்தை அந்தந்த நாட்டின் STI மைய புள்ளி மூலம் பிரிக்ஸ் ஸ்டைப் பணிக்குழுவுக்கு அனுப்பலாம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
  • இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) 2021 ஜூலை 8 ஆம் தேதி பிரிக்ஸ் S&T ஸ்டீயரிங் கமிட்டியின் 12 வது கூட்டத்தை நடத்தியது.
  • அனைத்து பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல் அமைச்சகங்களும் நிறுவனங்களும் இதில் பங்கேற்றன.
  1. STIEP – Science, Technology Innovation Entrepreneurship partnership
  2. DST- Department of Science and Technology
தேசிய  நிகழ்வுகள்

பொது சிவில் சட்டம்

  • பொது சிவில் சட்டம் அமல்படுத்தவேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
  • இந்தியா அரசியலமைப்பு சட்டத்தின் 44வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது

இந்தியாவில் இரண்டு சட்டங்கள் உள்ளன
1. கிரிமினல் சட்டம்- எல்லோருக்கும் பொதுவானது
2. சிவில் சட்டம்- பொதுவானது அல்ல (மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது)

ஜம்மு-காஷ்மீர் அரசு புவிசார் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் “PROOF” (Photographic Record Of On-site Facility) என்னும் மொபைல் செயலிக்கு ஒப்புதல் அளித்துள்ளது

BEAMS விண்ணப்பத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக சம்பந்தப்பட்ட கருவூலங்களில் பில்களை விரும்பினால், “PROOF” (Photographic Record Of On-site Facility) மொபைல் பயன்பாடு மூலம் ஜியோ குறிக்கப்பட்ட புகைப்படங்களை பதிவேற்ற ஜம்மு-காஷ்மீர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

BEAMS போர்ட்டலில் இருந்து “PROOF” பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

BEAMS -Budget, Estimation, Allocation & Monitoring System

ஜம்மு-காஷ்மீர்

  • தலைநகரம்: ஸ்ரீநகர் (கோடை), ஜம்மு (குளிர்காலம்)
  • லெப்டினன்ட் கவர்னர்: மனோஜ் சின்ஹா

சுற்றுலா மற்றும் உள்நாட்டு விருந்தோம்பல் துறையை வலுப்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் யாத்திரா(yatra) என்னும் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை வலுப்படுத்தவும் செயல்படுத்தவும் மத்திய சுற்றுலா அமைச்சகம் யாத்திரா என்னும் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

மாநில நிகழ்வுகள்

மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம்

  • தமிழகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று தமிழர் சமூக மேம்பாட்டு பேரவை வலியுருத்தியுள்ளது .
  • 2013 – ல் மகாராஷ்டிர அரசும், 2017-ல் கர்நாடக அரசும்  மூட நம்பிக்கை ஒழிப்பு  சட்டத்தை நிறைவேற்றி உள்ளது .
  • கர்நாடக அரசு 2020 -ல் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது .

ஒலிம்பிக்கில் பங்குபெறும் தமிழக வீரர்கள்

  • 32 வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்தது ஆனால் கொரோன அச்சுறுத்தல் காரணமாக இதுவரை யில்லாத அளவு ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டு  ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ம் தேதி வரை நடைபெற உள்ளது
  • ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 120 பேர் கலந்துகொள்ள உள்ளனர் . அதில் 11 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் .
  • அதிலும் குறிப்பாக தடகள போட்டியில்\26 பேர் கொண்ட இந்தியா அணி கலந்துகொள்ள உள்ளது. இதில்  5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். (ஆரோக்கியராஜ் , தனலட்சுமி, சுபா வெங்கடேஷ், ரேவதி வீரமணி, நாகநாதன் பாண்டி) இவர்களை தவிர நேத்ர குமணன்,வருண் தக்கர், கணபதி (பாய்மரப்படகு), சத்யன், சரத்கமல்(டேபிள் டென்னிஸ்),பாவனிதேவி (வாள்சண்டை)
  • ஒலிம்பிக்கில் வாள்சண்டை போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் தமிழ்நாட்டை சேர்ந்த பாவனிதேவி என்பது குறிப்பிடத்தக்கது
  • தமிழ்நாட்டில் இருந்து இதுவரை 6 பேர் மட்டுமே ஹாக்கி அணியில் விளையாடி ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றிருக்கின்றனர்.அப்போது அந்த அணியின் கேப்டனாக தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கரன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

மத்ஸய சேது  செயலி

  • மீன்வளர்ப்பு தொழிற்நுட்பங்களை இணையவழியில் கற்றுக்கொள்வதற்க்காக தமிழக விஞ்ஞானி சிவராமன் “மத்ஸ்ய சேது” செயலியை உருவாக்கியுள்ளார்
  • மீன்வளர்ப்பு குறித்த செல்போன் செயலி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (ICAR-CIFA) இந்தி யாவில் மீன் வள ஆராய்ச்சிக்கான முன்னோடி நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்களை இணையவழியில் அனைவரும் கற்றுக்கொள்ள மத்ஸ்ய சேது” என்ற செல்போன் செயலியை உருவாக்கி உள்ளது.
  • இந்த செயலியை மத்திய நன்னீர் உயிர்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஐ. சிவராமன் உருவாக்கி இருக்கிறார்.
  • இதை 7 மொழிகளில் கேட்டு தெரிந்துகொள்ள முடியும் ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் பார்த்து கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இதில் தற்போது ஆங்கிலம், இந்தி மொழிகளில் வீடியோக்கள் தயாராக உள்ளன. மற்ற மொழிகளிலான வீடியோக் கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. என்றும் கூறப்பட்டுள்ளது
  • ICAR– The Indian Council of Agricultural Research
  • CIFA – Central Institute of Freshwater Aquaculture

தமிழகத்தில்வீடு தேடி வரும் மருத்துவ திட்டம்செயல்படுத்தவுள்ளது

  • தமிழகத்தில் இறப்பு சதவீதத்தை குறைக்க ” வீடு தேடி வரும் மருத்துவ திட்டம்” தொடங்கப்படவுள்ளதாக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர்  சுப்பிரமணியன் தெரிவிதித்துள்ளார்

முதல்வர்  பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது

  • முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம்(www.cmprf.tn.gov.in)             தொடங்கப்பட்டுள்ளது
  • பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் பங்களிப்புகள் வருமான வரி சட்டத்தின் கீழ் 100 சதவீதம் விலக்கு பெற தகுதி உடையவை
விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்

  • கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நே ற்று நடந்த அரை இறுதியில் இத்தாலி வீரர் மாட்டியோபொரேட்டினி, போலந்து நாட்டை சேர்ந்த ஹர்காக்ஸுடன்  மோதினார். இதில் மாட்டியோபொரேட்டினி, வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்
  • கிராண்ட்ஸ்லாமில் முதல் முறையாக இறுதி சுற்றை – எட்டியுள்ள பெரேட்டினி, விம்பிள்டன் ஒற்றையரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இத்தாலி நாட்டவர் என்ற சாதனையையும் படைத்தார்
  • இறுதி போட்டியில் ஜோகோவிச் மற்றும் பெர்ரெட்டினி மோத உள்ளனர்

யூரோ கோப்பை 2020

  • ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியான யூரோ , நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்
  • இந்த ஆண்டின் இறுதிப்போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய அணிகள் மோத உள்ளனர் .
  • இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் கடந்த 1966-ல் உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்பெல்லிங் பீ

  • அமெரிக்காவில் மிக கடினமான ஆங் கில வார்த்தைகளை தவறின்றி உச்ச ரிக்கும்” ஸ்பெல்லிங் பீ ” எனும் போட்டி, 1925ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
  • பள்ளி மாணவர்களுக்காக நடத்தப் படும் மிகவும் கவுரவமிக்க இந்த போட் டியில், கடந்த, 20 ஆண்டுகளாக, இந் திய வம்சாவளியை சேர்ந்த மாணவர் கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
  • இதில் 11 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். . இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பை டன் மனை வி ஜில் பைடன்கலந்து கொண்டார்.
  • இந்த இறுதி போட்டியில் லூசியானாட மாகாணத்தை சேர்ந்த ஆப்பிரிக்க வம்சாவளியான ஷைலா அவந்த் கார்மே என்ற 14 வயது சிறுமி வெற்றி பெற்றுள்ளார்  ஸ்பெல்லிங் பி போட்டியின் 93ஆண்டு கால வரலாற்றில் ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒருவார் சாம்பியன் பட்டத்தை வென்றது இதுவே முதல் முறையாகும்.
  • இதனிடையே ஸ்பெல்லிங் போட்டியில் 20 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய வம்சாவளியினர் நடப்பு ஆண்டு போட்டியில் 2-ம் மற்றும் 3-ம் இடத்தை பிடித்தனர்.
  • இந்திய வம்சாவளியினர் ,சான்பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி சைதா அடிமால 2-ம் இடத்தையும் , நியூயார்க்  நகரை சேர்ந்த 18 வயது சிறுமி பாலனா மதினி 3-ம் இடத்தையும்  பிடித்துள்ளனர்

இந்தியா நட்சத்திரங்கள் ஒலிம்பிக்கில் சாதிக்க இசை அமைப்பாளர் A.R ரகுமான் மற்றும் பாடகி அனன்யா  இணைந்து வாழ்த்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்

  • இந்திய நட்சத்திரங்கள் சிறப்பாக செயல்பட தூண்டுகோலாக இருக்கும் படி ” ஒற்றுமை  நம்பிக்கையை”
  • வலியுறுத்தும் வகையில் இசை அமைப்பாளர்R ரகுமான் மற்றும் பாடகி அனன்யா இணைந்து வாழ்த்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்
  • “இது இந்தியா வழி ..” என துவங்கும்  இந்த  பாடலை அனன்யா பிர்லா ஆங்கிலம் , இந்தி மொழியில் பாடியுள்ளனர்

2021 மகளிர்  செஸ் சாம்பியன்ஷி

  • சீனாவின் ஹூயிஃபான் 2021 மகளிர் வேக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அவர் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லியை தோற்கடித்தார்.
  • FIDE – International Chess Federation.

FIDE (சர்வதேச செஸ் கூட்டமைப்பு)

  • தலைமையகம்: லொசேன், சுவிட்சர்லாந்து
  • தலைமை நிர்வாக அதிகாரி: ஜெஃப்ரி டி போர்க்
  • தலைவர்: கிர்சன் இலியும்ஜினோவ்
  • ஆரம்பிக்கப்பட்ட வருடம் : 1924
நியமனங்கள்

மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சுப்பையா பதவியேற்பு

  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பையாமாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத் தலைவராக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது
புத்தகம்

ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜியின் ராமாயணம்‘  என்ற புத்தகம் பால்ஜித் கவுர் துளசி ஜி  என்பவரால் எழுதபட்டது

  • இந்த புத்தகத்தை ஐ.ஜி.என்.சி.ஏ (IGNCA) வெளியிட்டுள்ளது.
  • இதன் முதல் நகல் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
பொருளாதாரம்

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் அதன் காப்பீட்டு தயாரிப்புகளை விநியோகிக்க இந்திய வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் கையெழுத்திட்டுள்ளது

  • பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் அதன் காப்பீட்டு தயாரிப்புகளை விநியோகிக்க இந்திய வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் கையெழுத்திட்டுள்ளது
  • பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனம்
  • தலைமையகம்: புனே, மகாராஷ்டிரா
  • D மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி: தபன் சிங்கெல

பாங்க் ஆப் இந்தியா (BOI)

  • தலைமையகம்: மும்பை, இந்தியா
  • முன்னாள் தலைவர்: பத்மநாபன்
  • MD & CEO: அதான்குமார் தாஸ்
விருதுகள்

இந்திய பொருளாதார நிபுணர் கெளசிக் பாசுவுக்கு மதிப்புமிக்க ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டுள்ளது

  • இந்திய பொருளாதார நிபுணர் கெளசிக் பாசுவுக்குபொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது.
  • உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றியுள்ளார்
  • 2009 முதல் 2012 வரை இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்
  • அவருக்கு இந்தியாவில் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருது பத்ம பூஷண் வழங்கப்பட்டுள்ளது
அறிவியல் தொழிற்நுட்பம்

விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியப் பெண்சிரிஷா பாண்ட்லா

  • விர்ஜின் விண்வெளி கப்பல் ஒற்றுமையில் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக் குழுவினரின் ஒரு பகுதியாக விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையை சிரிஷா பாண்ட்லா பெற்றார். 34 வயதான சிறிஷா பாண்ட்லா ஆந்திராவைச் சேர்ந்தவர்.
  • 1997 ஆம் ஆண்டில் சென்ற கல்பனா சாவ்லாவுக்குப் பின்னால் விண்வெளியில் பறக்கும் இரண்டாவது இந்தியப் பெண் இவர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!