Daily Current Affairs July 09 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

1
Daily Current Affairs July 09 2021 in Tamil
Daily Current Affairs July 09 2021 in Tamil

நடப்பு நிகழ்வுகள் ஜூலை- 09

Top Current Affairs June 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

இலங்கை  நிதி அமைச்சராக பசில் ராஜபக்க்ஷே பொறுப்பேற்றுள்ளார்

  • இலங்கையில் ராஜபக்க்ஷே சகோதரர்கள் நான்குபேரில் இளையவரான பசில் ராஜபக்க்ஷே நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் .
  • இலங்கை

அதிபர் ; கோத்தபய ராஜபக்க்ஷே

பிரதமர் : மஹிந்த ராஜபக்க்ஷே

நீர்பாசனத்துறை அமைச்சர் : சமல் ராஜபக்க்ஷே

நிதி அமைச்சர் :பசில் ராஜபக்க்ஷே

தேசிய நிகழ்வுகள்

கரோனவை எதிர்கொள்ள ரூ . 23,123 கோடி மதிப்பிலான சிறப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

  • காணொளி வாயிலாக மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான இ -சஞ்சீவினி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது
  • மேலும் வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
  • மருத்துவ தர ஆக்ஸிஜனை சேமிப்பதற்காக 1050 கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன
  • இந்திய தொழில்போட்டி ஆணையம் -ஜப்பான் நியாய வர்த்தக ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

உத்தரகண்ட் மாநிலத்தில், வீட்டு உபயோகத்துக்கு மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று மாநில மின்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத் அறிவித்துள்ளார்.

  • மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • .அதுபோல, பால் தொழில், விவசாயம் போன்றவற்றுக்கான மின்சார பயன்பாடுகள் இதுவரை வணிகப் பிரிவில் இருந்தது. இனி இதுவும் வீட்டு உபயோகப் பிரிவின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • முதலமைச்ச :திரிவேந்திர சிங் ராவத்

ஆளுநர் :  பகத்சிங் கோஷ்யரி

குளிர்கால தலைநகர்: டெஹ்ராடூன்,

 கோடைகால தலைநகர் :கெய்சைன்

இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனம் (ICoAl) மற்றும் ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து) பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கம் (ACCA) ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவு மற்றும் ஆராய்ச்சி  பரிமாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கு வழிவகுக்கும்,மேலும் இருநாடுகளுக்கிடையே   நல்லாட்சி நடைமுறையை பலப்படுத்தும்.
  • இரு தரப்பினரும் தொழில்நுட்ப துறைகளில் கூட்டு ஆராய்ச்சியை உள்ளடக்கிய செலவு கணக்கியல் தொழிலுடன் தொடர்புடைய கூட்டு ஆராய்ச்சியைத் தொடங்குவார்கள்.
  • இங்கிலாந்து
  • தலைநகரம் : லண்டன்
  • நாணயம்: பவுண்ட் ஸ்டெர்லிங்
  • ICoAl – Institute of Cost Accountants of India
  • ACCA – Association of Chartered Certified Accountants

தேங்காய் வாரிய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

  • தேங்காய் வாரியத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர சட்டத்திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • தேங்காய் வாரியத்தின் தலைவராக விவசாய சமூகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்றும் மேலும், குஜராத், ஆந்திரம் மாநிலங்களுக்கு வாரியத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்தியா – விவசாயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு

  • மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமருக்கும் ஐரோப்பிய வேளாண்மை ஆணையத்தின் உறுப்பினர் திரு ஜானுஸ் வோஜ்சிசோவ்ஸ்கிக்கும் இடையே ஒரு மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது.
  • இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பு மற்றும் அந்தந்த பிராந்தியங்களில் விவசாய சீர்திருத்தங்கள் குறித்த பயனுள்ள தகவல்களை வழங்கிய இரு பிரமுகர்களும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்காக பணியாற்றுவதாகவும் உறுதியளித்தனர்.

இந்திய மொழிகளில் தொழிற்நுட்ப கல்வி வழங்குதல்

  • மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் இந்தியா தொழிற்நுட்ப மையம் இந்தியா அறிவியல் மையம் உள்ளிட்ட உயர் கல்வி மையங்களின்  இயக்குனருடன் பிரதமர் மோடி வீடியோ கான் பெரென்ஸ் மூலம் கலந்துரையாடினார்
  • மேலும், தொழிற்நுட்பங்களை இந்திய மொழிகளில் கற்பதற்கான சூழலை உருவாக்கவேண்டும் மற்றும் சர்வதேச இதழ்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்
  • தற்சார்ப்பு இந்தியா  திட்டத்தால் நம் நாட்டில் கனவுகளும் ஆசைகளும் அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது இந்தியாவின் 100வது சுதந்திர தந்திற்குள் நிறைவேறும் என்றும் அவர் கூறியுள்ளார்

“புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலைத்தன்மையில் உள்ள பெண்கள் குறித்த வெபினார்

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE), சர்வதேச சூரிய கூட்டணியுடன் (ISA) இணைந்து, “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலைத்தன்மையில் உள்ள பெண்கள்” என்ற தலைப்பில் ஒரு வலைநார் ஒன்றை ஏற்பாடு செய்தது
  • வெபினார் இரண்டு குழு விவாதங்களைக் கொண்டிருந்தது. முதல் குழுவின் கருப்பொருள் “புதுப்பிக்கத்தக்கவற்றில் பெண்கள் தலைமைத்துவம்: ஒரு புதிய உலகத்தை கற்பனை செய்தல்” என்பதோடு,
  • இரண்டாவது குழுவின் கருப்பொருள் “RE இல் பெண்கள் தொழில்முனைவோர்: புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான நுழைவாயில்”
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிக பெண்களை முன்னணியில் கொண்டு வருவது குறித்து திட்டமிட்டுள்ளனர்

 MNRE–The Ministry Of New And Renewable Energy

ISA- International Solar Agency

மாநில நிகழ்வுகள்

நாட்டிலேயே சுகாதார உள்கட்டமைப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது

  • நாட்டிலேயே சுகாதார உள்கட்டமைப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி டி .ஒய் .சந்திரசூட் பாராட்டியுள்ளார்

கீழடி அகழ்வாய்வு

  • கீழடி அருகே கொந்தகையில் மனித எலும்புக்கூடு கிடைத்துள்ளது
  • பண்டைய தமிழர்களின் கலாச்சாரம்,உணவு பழக்கவழக்கம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் மதுரை ரயில் நிலையத்தில் அமைந்துள்ள செல்பி தளம்

  • இந்தியா வீரர்களை உற்சாகம் படுத்தும் வகையில் , மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் முக்கிய அம்சமாக மொபைல் மூலம் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் செல்பி தளங்களை  முக்கிய இடங்களில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
  • ரயில் நிலையங்களில் வைக்கப்படும் செல்பி தளங்களில் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் #Cheer4India குறியீட்டுடன் வெளியிட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
விளையாட்டு

யூரோ கால்பந்து -2021

  • யூரோ கால்பந்து தொடரின் அரை இறுதியில் டென்மார்க்கை வீழ்த்தி முதல் முறையாக இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது
  • இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியானது முன்னாள் சாம்பியன் இத்தாலியை சந்திக்க உள்ளது
விம்பிள்டன் டென்னிஸ் 2021

பெண்கள் ஒற்றையர் பிரிவு

  • .ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி, ஜெர்மனியின் கெர்பருடன் அரையிறுதியில் மோதினார் .
  • இதில் வெற்றிபெற்று ஆஷ்லே பார்ட்டி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்
  • மற்றொரு அரையிறுதியில் பெலாரசின் சபலென்கா, கரோலினா பிளிஸ்கோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்
  • இறுதிப்போட்டியில் ஆஷ்லே பார்ட்டி மற்றும் பெலாரசின் சபலென்கா மோத உள்ளனர்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரோஜர் பெடரரரை தோற்கடித்து ஹுபர்ட் ஹர்காஸ் அரை இறுதிக்கு முன்னேறினார்
  • 8 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ரோஜர் பெடரர் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்துள்ளார்

நிகால் சரின் சாம்பியன்

  • செர்பியாவில் சர்வதேச செஸ் தொடர் 2021 நடைபெற்றது
  • இதில் இந்தியாவை சேர்ந்த நிகால் சரின்(16) இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளார்
  • சர்வதேச செஸ் நட்சத்திரங்களுக்கான தரவரிசையில் டாப் -100 பட்டியலில் நுழைந்தார் நிகால் சரின்

31 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

  • வியட்நாமில் இந்த ஆண்டு நவம்பர் 21 முதல்  டிசம்பர் வரை  நடைபெறஇருந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள்  கொரோன பரவல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக தென்கிழக்கு ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகள்

  • டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் முதல் முறையாக அதிகபட்சமாக 120 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்
  • தமிழகத்தில் இருந்து 13 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்
அறிவியல் தொழிற்நுட்பம்

ஆத்மனிர்பார் பாரத் அபியனின் கீழ் GIFT நகரத்தை தளமாகக் கொண்ட Vman Aviation & Airbus Helicopters இடையே  முதல் விமான கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது .

  • புது தில்லி. Vman இன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ விஷோக்மான்சிங் மற்றும் ஏர்பஸ் இந்தியாவின் தலைவரும், தெற்காசியா பிராந்திய நிர்வாக இயக்குநருமான திரு. ரெமி மெயிலார்ட் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • கையெழுத்திடும் ஒப்பந்தத்தின் போது AAI இன் தலைவர் ஸ்ரீ சஞ்சீவ் குமார் மற்றும் MoCA இணை செயலாளர் ஸ்ரீ அம்பர் துபே ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • GIFT: Gujarat International Finance Tec-City
நியமனம்

தமிழக பாஜக தலைவராக  கே.அண்ணாமலை நியமனம்

  • தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதால் தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலையை  நியமிக்கப்பட்டுள்ளார்
  • கே.அண்ணாமலை தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் பிறந்தவர் .
  • இவர் கர்நாடக மாநிலத்தில் ஐ .பி எஸ் அதிகாரியாக பதவி வகித்தவர்
  • பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே .பி . நட்டா ,தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலையை  நியமித்துள்ளார்
இறப்பு

ரமேஷ் போர்டேகாலமானார்.

  • மகாராஷ்டிராவின் முன்னாள் மற்றும் மேற்கு மண்டல ஆல்ரவுண்டர் ரமேஷ் போர்டே மாரடைப்பால் வியாழக்கிழமை( ஜூலை 08) காலமானார்.
  • இந்தியாவின் முன்னாள் கேப்டன் சந்திரகாந்தின் (அல்லது சந்து) தம்பி ரமேஷ் போர்டே ஆவார்
முக்கிய தினங்கள்

தேசிய மோட்டார் சைக்கிள் தினம் – ஜூலை 9

  • ஒவ் வொரு ஆண்டும் ஜூலை மதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை தேசிய மோட்டார் சைக்கிள் தினமாக கொண்டாடப்படுகிறது .
  • இந்த ஆண்டு ஜூலை 9, தேசிய மோட்டார் சைக்கிள்  தினமாக கொண்டாடப்படுகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!