ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 15 & 16, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 15 & 16, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019 

  • செப்டம்பர் 15 – சர்வதேச ஜனநாயக தினம்
  • செப்டம்பர் 15 – தேசிய பொறியாளர்கள் தினம்
  • செப்டம்பர் 16 – சர்வதேச ஓசோன் தினம்
  • தூர்தர்ஷன் என்பது இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பொது சேவை ஒளிபரப்பாளராகும், தூர்தர்ஷன் செப்டம்பர் 15, 1959 அன்று டெல்லியில் நிறுவப்பட்டது.
  • திரிபுராவில், ருத்ராசாகர் ஏரியில் மூன்று நாள் நடந்த பாரம்பரிய நீர்மஹால் ஜல் உட்சவ் கண்கவர் படகுப் பந்தயம் மற்றும் நீச்சல் போட்டிகளுடன் முடிவடைந்தது.
  • அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு, தீட்சி நீர் மின் திட்டத்தை அந்த மாநில மக்களுக்கு அர்ப்பணித்தார்.
  • 2019 செப்டம்பர் 14 ஆம் தேதி, இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்தின் வில்லெனுவேவில் மகாத்மா காந்தியின் சிலையை கேன்டன் வட் மாவட்டத்தின் மேயர்  மற்றும் பிற பிரமுகர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
  • தேசிய நல்லாட்சிக்கான மையம் (என்.சி.ஜி.ஜி) மற்றும் மாலத்தீவு சிவில் சர்வீஸ் கமிஷன் (சி.எஸ்.சி) ஆகியவற்றுக்கு இடையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில், மாலத்தீவு அரசு ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி திட்டம் , இந்தியா-மாலத்தீவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 2019 செப்டம்பர் 16-28 வரை முசோரி மற்றும் டெல்லியில் நடத்தப்படும
  • ஸ்ரீ அமித் ஷா “இ-சரல் இந்தி வாக்யா கோஷ் மற்றும்இ-மஹா ஷப்தா கோஷ்” என இரண்டு மொபைல் பயன்பாட்டினை அறிமுகப்படுத்தினார்.
  • இந்தியாவும் சுவிட்சர்லாந்தும், இரு நாடுகளின் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு கூட்டணியை உருவாக்குவதற்கும், லொசேன் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியை புதுப்பிக்கவும் மற்றும் காலநிலை மாற்றத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டன.
  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, ரயில்வே வாரியத்தின் தலைவர் ஸ்ரீ வினோத் குமார் யாதவுக்கு சிறந்த பொறியாளர் விருதை வழங்கினார்.
  • கொழும்பில் நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா, பங்களாதேஷை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
  • பங்கஜ் அத்வானி, மியான்மரில் நடந்த ஐ.பி.எஸ்.எஃப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் நான்காவது இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் 22  உலக பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அத்வானி மியான்மரின் நா த்வேவை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .
  • பேட்மிண்டனில், பெல்ஜியம் சர்வதேச பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வளர்ந்து வரும்  இந்திய  வீரர்  “லக்ஷ்ய சென்”, டென்மார்க்கின் விக்டர் ஸ்வென்ட்சனை நேர் செட்களில் தோற்கடித்து பட்டத்தை வென்றார் .
  • பேட்மிண்டனில், ஹோ சி மின் நகரில் நடந்த விறுவிறுப்பான ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் சீனாவின் சன் ஃபை சியாங்கை தோற்கடித்து, இந்தியாவின் சவுரப் வர்மா வியட்நாம் ஓபன் சூப்பர் 100 பட்டத்தை வென்றார்.
  • பேட்மிண்டனில் யாங்கோனில் நடந்த விறுவிறுப்பான ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கவுசல் தர்மர் இந்தோனேசியாவின் கரோனோ கரோனோவை வீழ்த்தி மியான்மர் சர்வதேச தொடரை வென்றார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – செப்டம்பர் –  15 & 16, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!