ஒருவரி நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் – 23, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் – 23, 2019

  • மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீ கஜேந்திர சிங் சேகாவத், இந்தியாவுக்கான சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான சர்வதேச ஒர்க்ஷாப்பை டெல்லியில் திறந்து வைத்தார்.
  • கிராண்ட் கார்ட் பாதையில் மிகவும் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டம் நிறுவப்பட்டுள்ளது. கிராண்ட் கார்ட் என்பது ஹவுரா-கயா-டெல்லி மற்றும் ஹவுரா-அலகாபாத்-மும்பை பாதையின் ஒரு பகுதியாகும்.
  • மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் மற்றும் மத்திய இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் ஸ்ரீ டி.வி.சதானந்த கவுடா இணைந்து புதுடெல்லியில் இரு ஆண்டு உர பயன்பாட்டு விழிப்புணர்வு திட்டத்தை திறந்து வைத்தனர் .
  • வேலூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமிர்தி விலங்கியல் பூங்காவிற்கு அண்மையில் கடமான் மற்றும் ஒரு சில பெலிகன்கள் புதிதாக வருகை தந்துள்ளன.
  • ரயில் போக்குவரத்து துறையில் ஒன்றாக இணைந்து பணியாற்ற இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் முடிவு செய்துள்ளன..
  • பொதுத் தேர்தலில் 24 இடங்களை வென்ற புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய அரசியல்வாதி ஜக்மீத் சிங், ஒரு “கிங்மேக்கர்” ஆக திகழ்கிறார்.
  • பேரரசர் நருஹிடோ நாட்டின் 126 வது பேரரசராக தன்னை முறையாக அறிவித்தார். 59 வயதான பேரரசர் அவரது தந்தையான அகிஹிட்டோவிற்கு பின்னர் மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாக தனது ஆட்சியைத் தொடங்கினார்.
  • புவனேஸ்வரில் பிராந்திய தொழிலாளர் மாநாடு நடைபெற்றது.
  • பஞ்சாயத்துராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய பஞ்சாயத்து விருதுகள்  2019 ஐ   புதுடில்லியில் நடந்த விழாவில்  வழங்கினார்.
  • அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ட்ராக் தீவில் இந்திய விமானப்படையால் இரண்டு பிரம்மோஸ் ஏவுகணைகள் வீசப்பட்டன. வழக்கமான செயல்பாட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த இரட்டை ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
  • ஹவுரா உட்புற மைதானத்தில் நடைபெற்ற தேசிய தரவரிசை (கிழக்கு மண்டலம்) டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஜூனியர் சிறுவர்களின் பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வ தீனதயலன் கைப்பற்றினார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் –  23, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!