ஏப்ரல் 5 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலம்

தமிழ்நாடு

பாதுகாப்புத் துறையின் ‘டெபெக்ஸ்போ’ 2018 கண்காட்சி: மோடி தொடங்கி வைக்கிறார்

  • சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் நடைபெற உள்ள பாதுகாப்பு துறையின் பிரம்மாண்டமான டெபெக்ஸ்போ – 2018 கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்:சர்வதேச அளவில் மிகப் பெரிய பாதுகாப்புத் துறை கண்காட்சியான டெபெக்ஸ்போ – 2018 வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் நடைபெறுகிறது. இதில், 671 பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், இந்திய நிறுவனங்கள் 517-ம், 154 வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

செஞ்சி: ஆங்கிலேயர் பயன்படுத்திய பழங்கால பீரங்கி கண்டெடுப்பு

  • செஞ்சியில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்கி தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.

 பதவியேற்புகள்:

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் : எம்.கே. சூரப்பா

  • அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்க பட்டுள்ளார்

தேசியசெய்திகள்

மத்திய வேளாண் துறை: பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு உட்பட சிறுதானியங்களை சேர்க்க முடிவு

  • பொது விநியோகத் திட்டத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு உட்பட சிறுதானியங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஆதார விலையில் சிறுதானியங்களை கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தில் வழங்க பிரதமர் மோடி அரசு முடிவு செய்தது. அதற்காக சிறுதானிய உற்பத்தியில் வேளாண் துறை அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி புதிய திட்டங்களை தொடங்கி உள்ளது.
  • சிறுதானிய உற்பத்தியில் நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலம் முன்னிலையில் உள்ளது. தவிர ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் பயிரிடப்படுகின்றன.சிறுதானியங்களை குறைந்த விலையில் ஏழைகளுக்கு, மதிய உணவு திட்டத்தில் வழங்குவதன் மூலம், மக்களின் உடல்நலம் மேம்படும். அத்துடன் சிறு விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கும்.

விண்வெளியை ஆயுதக் கிடங்காக மாற்றக் கூடாது: ஐ.நாவிற்கு  இந்தியா வலியுறுத்தல்

  • விண்வெளியில் ஆயுதங்களை நிலை நிறுத்துவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விண்வெளிக் களம் மோதலுக்கான இடமாக இருக்கக்கூடாது என இந்தியா ஐ.நா விடம் வலியுறுத்தி உள்ளது.

சர்வதேசியசெய்திகள்

இலங்கையில் ரனில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • இலங்கையில் ரணில் விக்கிரம சிங்கேவின் (68) ஐக்கிய தேசிய கட்சி சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் உள்ளது. பிரதமர் விக்கிரமசிங்கேயின் ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.2 ஆக பதிவு

  • பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மின்டனாவோ தீவுப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்2 ஆக பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸின் கிழக்குப் பகுதியில் 128 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாவோ தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு அடியில் 61 கி.மீ. வரை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

18ஆம் தேதி முதல் சவுதியில் திரையரங்குகள் திறப்பு

  • சவுதி அரேபியாவில் மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி, கடந்த 1980ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, சவுதியின் இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், பெண்கள் வாகனம் ஓட்டுவது, விளையாட்டு மைதானங்களில் பெண்கள் கண்டுகளிக்க அனுமதி அளித்துள்ளார் .இந்நிலையில், சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சவுதியில் சினிமாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 18ஆம் தேதி முதல் திரையரங்குகள் செயல்படத் தொடங்கும் என கூறப்படுகிறது.இதற்கு அடுத்த கட்டமாக ஐந்து ஆண்டுகளில், சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 திரையரங்குகள் வரை திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வணிகசெய்திகள்

இ-வே பில் : 3 நாட்களில் 17 லட்சம்

  • ஏப்ரல் 1-ம் தேதி முதல் சரக்கு மின் வழி ரசீது (இ-வே பில்) முறை அமல்படுத்தப்பட்டது. கடந்த மூன்று நாட்களில் 17 லட்சம் இ-வே பில்கள் உருவாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் 1-ம் தேதி 2.59 லட்சம் ரசீதுகளும், 2-ம் தேதி 6.5 லட்சமும், மூன்றாம் தேதி 8.15 லட்சம் ரசீதுகளும் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கி:ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

  • ரெப்போ ரேட் விவரத்தை மாற்றவில்லை என ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது.ரெப்போ ரேட் 6% மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.75% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.

விளையாட்டுசெய்திகள்

21-வது காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரைச் சேர்ந்த 23 வயதான சானு 48 கிலோ எடை பிரிவில்,  தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தந்ததுடன் காமன்வெல்த் போட்டியில் தனது புதிய சாதனையும் படைத்திருக்கிறார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!