ஏப்ரல் 4 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலம்

தமிழ்நாடு

முழங்கால் மூட்டு எலும்பை சேதப்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை: உலகில் முதல் முறையாக சென்னை அரசு பொதுமருத்துவமனை சாதனை

  • உலகில் முதல் முறையாக முழங்கால் மூட்டு எலும்பை சேதப்படுத்தும் நோயினால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் உட்பட பேருக்கு அவர்களின் கால் எலும்பைக் கொண்டு சென்னை அரசுபொது மருத்துவமனையில் நவீனமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • முழங்கால் மூட்டு எலும்பைச் சேதப்படுத்தும் நோய் (Giant Cell Tumour), புற்றுநோய்க்கு சமமானது.மூட்டு எலும்பின் உள்ளே உருவாகும் கட்டி வேகமாக வளர்வதால், எலும்பு வீக்கம் அடையத் தொடங்கும்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எலும்பை அரித்து, சேதப்படுத்தி, உறுதித்தன்மையை இழக்கச் செய்யும்.நடக்க முடியாமல் படுத்தபடுக்கையாக மாற்றும் இந்நோய், எளிதாக .ஆண்களைவிடபெண்களை அதிகம்பாதிக்கும் இந்நோய், பெரும்பாலும் 20 – 40 வயதுடையவரைதாக்குகிறது.

தமிழக அரசின் முன்னோடி திட்டத்தை பின்பற்ற முடிவு எடுத்துள்ளது காஷ்மீர் மாநிலம்

  • நாட்டிலேயே முதல்முறையாக தமிழகப் பள்ளிகளில் முப்பருவ பாடத்திட்டமுறை செயல்பாட்டிலுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்ட முறை அமலில்இருக்கிறது.தமிழகப் பள்ளிகளில் பின்பற்றப்படும் முப்பருவமுறையை செயல்படுத்த காஷ்மீர் மாநிலமும் முடிவு செய்துள்ளது.

மேற்குவங்காளம்

  • ஊரக வேலைவாய்ப்பில் மேற்குவங்கம் முதலிடத்தில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தாபானர்ஜி பெருமிதம் தெரிவித்துள்ளார்.100 நாள் வேலை திட்டத்தில் 2018 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி மேற்குவங்கம் 30.98 கோடி மனித வேலைநாட்களை உருவாக்கியுள்ளது.இது நம்நாட்டில் மிக அதிகபட்ச அளவாகும்.

தேசியசெய்திகள்

ஆதார்தகவல் தொகுப்பில் நிதி, சுகாதார விவரம் இல்லை என தனித்துவ அடையாள ஆணையம் தகவல்

  • ஆதார் தகவல் தொகுப்பில் தனி நபர்களைப் பற்றி நிதி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறவில்லை என்றும் தனித்துவ  (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.மேலும் யுஐடிஏஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆதார்தகவல் தொகுப்பில் தனி நபர்கள் பற்றிய மிகவும் குறைவான  .வங்கிக்கணக்குகள், பங்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், சொத்து விவரங்கள், சுகாதாரம் பற்றிய விவரம், குடும்பவிவரம், சாதி, மதம், கல்வி உள்ளிட்ட தனி நபர்களின் விவரங்கள் ஆதார்தகவல்தொகுப்பில் இடம் பெறவில்லை என கூறியுள்ளது

2016-ல் எஸ்சி, எஸ்டி.களுக்குஎதிரானகுற்றங்கள்தொடர்பாக 47 ஆயிரம்வழக்குகள்பதிவு

  • நாடு முழுவதும் எஸ்சி, எஸ்.டி.களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பாக 2016-ல் மட்டும் 47,338 வழக்குகள் பதிவாகி இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.தேசியகுற்ற ஆவணக்காப்பகம் (என்சிஆர்பி) கொடுத்துள்ள தகவலின்படி எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் 40,774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் 78.3 சதவீத வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.25.8 சதவீத வழக்குகளில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேசியசெய்திகள்

அமெரிக்காவில் யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு

  • கலிப்போர்னியா மாகாணத்திலுள்ள யூ டியூப் தலைமையகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னை தானே சுட்டுக் கொன்று இறந்ததாகவும் அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ரனில் விக்ரமசிங்கேவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்

  • இலங்கையில் ரணில் விக்கிரம சிங்கேவின் (68) ஐக்கிய தேசிய கட்சி சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் உள்ளது. பிரதமர் விக்கிரமசிங்கேயின் ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதன் மீதான ஓட்டெடுப்பு ஏப்ரல் 4இல் நடைபெறுகிறது.

 வணிகசெய்திகள்

கடல்சார் உணவு பொருள்களுக்கு மிகச் சிறந்த ஏற்றுமதி வாய்ப்பு

  • இந்தியாவில் கடல்சார் உணவுப் பொருள்களுக்கு மிகச் சிறந்த ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. அதற்குரிய வளம் இந்தியாவில் உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு குறிப்பிட்டார்.இந்தியாவில் 7,600 கி.மீ. தூர கடல் பரப்பு உள்ளது. யூனியன் பிரதேசங்கள் உள்பட 13 மாநிலங்களில் கடல் பரப்பு உள்ளது. இதிலிருந்தே நமக்கு கடல் பொருள்களில் உள்ள வளம் புரியும்.இந்த வளத்தை சிறப்பாகப் பயன்படுத்தினால் உலகிற்கே கடல் உணவு வழங்கும் நாடாக இந்தியா உயரும் என தெரிவித்தார்.

 விளையாட்டுசெய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு கோல்டு கோஸ்ட் நகரில் தொடக்கம்

  • ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 6, 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அதிகபட்சமாக போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா சார்பில் 471 பேர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

காமன்வெல்த் போட்டிகள்: ஆடவர் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்

  • உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் தொடங்கியது. ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

 PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!