ஏப்ரல் 3 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலம்

தமிழ்நாடு

கடலோர கூட்டுப் பயிற்சிக்கு சென்னை வந்தது தென்கொரிய கப்பல்

  • கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இந்தியா – தென்கொரியா நாடுகள் இடையே கடந்த 2004-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி,இருநாட்டு கடலோரக் காவல் படைகளும் இணைந்து கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன .இந்தியா – தென்கொரியா கடலோரக் காவல்படையின் 6-வது கூட்டுப்பயிற்சி,ஏப்ரல் 5-ம் தேதி சென்னை கடல் எல்லைப் பகுதியில் நடக்கிறது.இதில்பங்கேற்பதற்காக, தென்கொரியா நாட்டு கடலோரக் காவல்படையின் ‘பதாரோ’ என்ற கப்பல சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

  • மத்தியஅரசுடன் இணைந்து முதல் கட்டமாக 500 பள்ளிகளில் விஞ்ஞான அறிவியல்ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது.இந்த ஆய்வகத்தில் பயிற்சி அளிக்கவுள்ள 500 ஆசிரியர்களுக்கு, அமெரிக்க பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கவுள்ளனர்.நலிந்த பிரிவினருக்கு தொடக்கநிலை வகுப்புகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசியசெய்திகள்

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உத்தரவு: இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

  • எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.எனினும் 10 நாட்களுக்குப் பிறகு இது பற்றி விரிவான விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

இடஒதுக்கீடு தொடரும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

  • ஏற்கெனவே அமலில் உள்ள, தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்தமாற்றமும் செய்யும் எண்ணம் மத்தியஅரசுக்கு இல்லை என்றும் மத்திய அரசு இடஒதுக்கீட்டுக் கொள்கையையே முடிவுக்குக் கொண்டு வர உள்ளதாக வதந்திகள் கிளப்பிவிடப்படுகிறது. இப்படி யூகங்களால் உருவாகியுள்ள வதந்திகள் முற்றிலும் தவறானது” என்றார்.

பொய் செய்தி உத்தரவை ரத்து செய்து பிரதமர் உத்தரவு அளித்தார்.

  • பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உத்தரவை ரத்து செய்து பிரதமர்மோடி உத்தரவிட்டுள்ளார்.பொய் செய்திகளை பரப்பும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதிஇரானி அறிவித்தார்.சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகளை பரவச் செய்வதாலும், சிலபத்திரிகைகள், பத்திரிகையாளர்களும், தங்களுக்கு வேண்டாதவர்கள் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிவிடுவதாலும் இத்தகைய நடவடிக்கை அவசியம் என அவர் தெரிவித்திருந்தார்.

நதிகள் இணைப்பை துரிதப்படுத்த வேண்டும் :மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது

  • நதிகள் இணைப்பை துரிதப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற எம்பிக்கள் நிலைக்குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
  • இந்தியாவில் வெள்ளம் காரணமாக 456.40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.வெள்ளப்பெருக்கை சமாளிக்க தயாராக இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறித்தும் இக்குழு ஆய்வு செய்துள்ளது.இதன்படி, வெறும் 8 மாநிலங்கள் மட்டுமே 192 அணைகளின் வெள்ளப்பெருக்கை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேசியசெய்திகள்

பொலிவியாவில் நிலநடுக்கம்: ரிக்டர்அளவு 6.8

  • தென்அமெரிக்க நாடான பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது.
  • தென்அமெரிக்க நாடான பொலிவியாவில் பராகுவே எல்லை ஓரத்தில் 562 கிலோமீட்டர் ஆழத்திற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது.இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் பல இடங்களில்உணரப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தமிழ்மொழி திருவிழா தொடக்கம்

  • சிங்கப்பூரில் தமிழ்மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது.இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது.சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று.அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் ‘தமிழ்மொழிகவுன்சில்’ தொடங்கப்பட்டது.அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல்ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ்மொழி திருவிழா நடத்தப்படுகிறது.

வணிகசெய்திகள்

பெட்ரோல், டீசல்விலை: 4 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் உயர்வு

  • பெட்ரோல் விலை, 13 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 76.72 ரூபாயாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள்அதிகரித்து, லிட்டருக்கு 68.38 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின. அதன்பின் நாள்தோறும் சிலகாசுகள் அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், அது மாதம் முழுவதும் மொத்தமாக பார்க்கும் போது, விலை உயர்வு அதிகமாக இருந்து வருகிறது.

பதவியேற்புகள்

நாஸ்காம் தலைவர்:தேப்ஜானிகோஷ் தேர்வு

  • இந்திய தகவல்தொழில் நுட்பத்துறை கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக தேப்ஜானிகோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் இன்டெல் நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் நிர்வாக இயக்குநர் பதவியை sவகித்தவராவார்.

விளையாட்டுசெய்திகள்

ரபேல்நடால் மீண்டும் முதலிடம்

  • டென்னிஸ் தரவரிசை பட்டியலில் நடால் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ரபேல் நடால் சமீபத்தில் நம்பர் ஒன் இடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர்பெடரரிடம் இழந்திருந்தார்.

‘ஸ்விங்கிங்’ பிலாண்டர் பிரமாதம்: தென்ஆப்பிரிக்கா வரலாற்று தொடர் வெற்றி

  • ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்ஸில் 492 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய தோல்வி கண்டது.தென்ஆப்பிரிக்கா அணி 1970-க்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி 3-1 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!