ஏப்ரல் 19 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

வான் மாசுபாட்டை ஆய்வு செய்ய தமிழ்நாட்டின் 17 வயது பெண் செயற்கைகோளை உருவாக்கினார்

  • தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் உட்பட, பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமடைதலின் விளைவுகளை அறிய ஒரு செயற்கைக்கோளை திருச்சியில் உள்ள 17 வயதான  மருத்துவ மாணவி உருவாக்கியுள்ளார். கூம்பு வடிவிலான காப்ஸ்யூலில் உள்ள 500g அனிதா -சாட் , மெக்ஸிக்கோ நகரத்திலிருந்து ஒரு ஹீலியம் பலூனில் மே 6 ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்..

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலத்திற்குச்சிறந்த திரைப்படத்திற்கு இணக்கமான மாநில விருது‘.

  • நன்கு கட்டமைக்கப்பட்ட இணையதளம், திரைப்படத்திற்கு ஏதுவான கட்டமைப்பு, சலுகைகள் வழங்குதல், தரவுகளைப் பராமரித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பர முயற்சிகளை மேற்கோள்ளுதல் போன்றவை மூலம் திரைப்படத்திற்கானப படப்பிடிப்புகளை எளிதாக்கி உள்ளதால் இந்த விருது மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த விருதுக்கான போட்டியில் 16 மாநிலங்கள் பங்கேற்றது.

தேசியசெய்திகள்

முதல் முறையாக சிறு, நடுத்தர தொழில்களுக்கான சர்வதேச மாநாடு புது தில்லியில்.

  • முதல் முறையாக சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சர்வதேச மாநாடுபுதுதில்லியில். ஏப்ரல் 22ம் தேதி தொடங்கி, 24ம் தேதி வரையில் நடைபெறுகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான அமைச்சகம் இந்த மாநாட்டை நடத்துகிறது. மாநாடு தொடர்பாக 35 சர்வதேச தொழில் மேம்பாட்டு அமைப்புகளுடன் தொடர்பு  கொண்டுள்ளது.அந்த அமைப்புகள் மூலம் சர்வதேச அளவிலான தொழில்முனைவோர் இந்த மாநாட்டில் பங்கு கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருடன் உலக நாட்டுத் தொழில்முனைவோர் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேசசெய்திகள்

கியூபா நாட்டு புதிய அதிபர் : மிக்வெல் டயாஸ்

  • கியூபா நாட்டு அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தனது பதவியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதை அடுத்து புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் கனல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஞ்ஞான செய்திகள்

நாசா: வானத்தை முழுவதுமாக ‘ஸ்கேன்’ செய்துவிட ‘டெஸ்’ செயற்கைக்கோள்

  • சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கிரகங்களை கண்டறிய, ‘டெஸ்’ என்றழைக்கப்படும் செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் செலுத்தி உள்ளது. 337 மில்லியன் டாலர் செலவில் ‘டிரான்சிட்டிங் எக்ஸோபிளானெட் சர்வே சாட்டிலைட்’ அல்லது ‘டெஸ்’ எனப்படும் செயற்கைக்கோளை இந்திய நேரப்படி ஏப்ரல் 19 அன்று அதிகாலை 4.21 மணியளவில் நாசா விண்ணில் செலுத்தியது.
  • அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து டெஸ் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.இது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள பாதையில் 2 ஆண்டுகள் சுற்றிவந்து புதிய கிரகங்களை ‘ஸ்கேன்’ செய்யும்.

வணிகசெய்திகள்

தவறான தகவல்களை அளித்தால் தண்டனை:  வருமான வரித்துறை

  • மாதச் சம்பளம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்யும் போது, வரித்தொகையை குறைத்து காட்டுவதற்காக சில தவறான தகவல்களை அளிப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. வரியை குறைப்பதற்காக தவறான தகவல்களை வருமான வரித்துறைக்கு அளித்தால் அது மோசடியாக கருதப்படும்,நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விளையாட்டுசெய்திகள்

இங்கிலாந்து: 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது

  • இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகம் படுத்த திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆணடில் இருந்து 8 அணிகள் பங்கேற்கும் 100 பந்து போட்டி தொடரை தொடங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. 15 ஓவர்கள் 6 பந்து வீதம் வீசப்படும். கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!