ஏப்ரல் 14 மற்றும் 15 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

அந்த்யோதயா சிறப்பு ரயில்

  • தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் அந்த்யோதயா சிறப்பு ரயில் நேற்று இயக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டது.இந்த ரயிலின் பெட்டிகள், சென்னை, ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில், முழுவதும் ‘ஸ்டெயின் லெஸ்-ஸ்டீலால்’ தயாரிக்கப்பட்டவை.

சர்வதேச கல்வி கண்காட்சி

  • உலகம் முழுவதும் உள்ள பிரபல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் சர்வதேச கல்விக் கண்காட்சி (IEF-2018) ஏப்ரல் 15 அன்று நடந்தது.

கர்நாடகம்

885ஆவது பசவ ஜெயந்தி

பசவேஸ்வராவின் 12 ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி அவர்களின்   885ஆவது பசவ ஜெயந்தி கலபுராகியில் கொண்டாடப்படுகிறது.

தேசியசெய்திகள்

கிராமங்களில் எல்இடி பல்புகள் வழங்கும் மின்னொளி வாகனத்தைத் தொடங்கிவைத்தார் அமைச்சர் ஆர்.கே. சிங்

  • பாரத் ரத்னா டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 127வது பிறந்தநாளையொட்டி, பிகார் மாநிலம் ஆரா என்ற இடத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • மின்னொளி வழங்கு வாகனம் பீகார் மாநிலம் முழுவதும் பயணம் செய்து எல்.இ.டி. பல்புகளை விநியோகம் செய்யும். அத்துடன், மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, மின்சாரச் சேமிப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தையும் இந்த வாகனம் மேற்கொள்ளும். இதைப் போல் உஜ்வாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 16 ஆயிரம் கிராமங்களில் ஏழை எளியவர்களுக்காக, உன்னத ஜோதி,என்ற திட்டத்தின்கீழ் ரூ. 50 என்று மலிவான விலையில் இந்த பல்புகள் வழங்கப்படும்.

டாக்டர் அம்பேத்கர்: மாமனிதரின் சபதம் நூல் வெளியீடு

  • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி, டாக்டர் அம்பேத்கரைப் பற்றிய “டாக்டர் அம்பேத்கர்: மாமனிதரின் சபதம்” (Dr Babasaheb Ambedkar: Vyakti Nahin Sankalp) நூல் தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளியிடப்பட்டது.

சர்வதேசசெய்திகள்

சீனாவிடம் இந்தியா உதவி: ரெயில்வே திட்டத்தை விரைந்து முடிப்பதற்கு

  • தென்னிந்தியாவின் முன்னணி நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் அதிவேக ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க தற்போது சீனாவிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளது.இந்தியாவின் இந்த பரிந்துரை குறித்து பரிசீலித்து முடிவு அறிவிப்பதாக சீனா கூறியுள்ளது.

பாபர் ஏவுகணைபாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை

  • இந்திய நகரங்களை குறிவைக்கும் வகையில் சுமார் 700 கிமீ இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே வடிவமைத்து, மேம்படுத்தப்பட்டது..

வணிகசெய்திகள்

வங்கி வாரியக் குழு தலைவராக பானு பிரதாப் சர்மா நியமனம்

  • வங்கி வாரியக் குழுவின் தலைவராக பானு பிரதாப் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பானு பிரதாப் இதற்கு முன்னர் மனித வளம் மற்றும் பயிற்சி துறை செயலராக இருந்தவர்.

பனாயா நிறுவனத்தை விற்க இன்ஃபோசிஸ் முடிவு

  • இன்ஃபோசிஸ் தனது துணை நிறுவனமான பனாயாவை விற்க முடிவு செய்துள்ளது. பிற துணை நிறுவனங்களான காலிடஸ் மற்றும் ஸ்கவா போன்றவற்றையும் விற்க இன்ஃபோசிஸ் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரீக் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 2019-க்குள் பனாயா நிறுவனம் விற்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

விளையாட்டுசெய்திகள்

காமன்வெல்த் போட்டி – குத்துச்சண்டை – இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்

  • மகளிருக்கான 45-48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கிறிஸ்டினா ஒஹாராவை 5-0 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி – குத்துச்சண்டை – இந்திய வீரர் அமிட் வெள்ளிப் பதக்கம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமிட் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி-துப்பாக்கிச்சுடுதல்-இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- குத்துச்சண்டை – இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி தங்கப்பதக்கம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி தங்கப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- குத்துச்சண்டை – இந்திய வீரர் மணிஷ் கவுஷிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் மணிஷ் கவுஷிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- மல்யுத்தம்இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்காக 125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- ஈட்டி எறிதல்- நீரஜ் சோப்ரா தங்கம்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்காக ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- மல்யுத்தம்- இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- மல்யுத்தம்- இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- மல்யுத்தம்- சோம்வீர் வெண்கலம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சோம்வீர் வெண்கலப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- பேட்மிண்டன் – மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்

  • மகளிர் இரட்டையர் பிரிவின் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா – சிக்கி ரெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் செட்யானா மபாசா – குரோன்யா சோமர்வில்லே ஜோடியை எதிர்கொண்டு 21-19, 21-19 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி வெண்கலப்பதக்கத்தை வென்றது.

காமன்வெல்த் போட்டி- டேபிள் டென்னிஸ்- மணிகா பத்ரா தங்கம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் மணிகா பத்ரா இந்தியாவுக்கு 24வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார்.

காமன்வெல்த் போட்டி- குத்துச்சண்டை- இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் தங்கம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் குத்துச்சண்டை போட்டியில் விகாஸ் கிரிஷன் இந்தியாவுக்கு 25வது தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தார்.

காமன்வெல்த் போட்டி- இந்தியாவுக்கு மேலும் இரு வெள்ளிப்பதக்கங்கள்

  • ஆண்களுக்கான 91 கிலோவுக்கு அதிகமானோர் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சதிஷ் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • ஆடவர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சத்தியன் ஞானசேகரன் – ஷரத் அச்சந்தா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

காமன்வெல்த் போட்டி- சாய்னா நேவால் தங்கம் வென்றார் ,பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் 

  • மகளிர்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் பி.வி. பி.வி.சிந்துவை 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். தோல்வியடைந்த பி.வி.சிந்துவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

காமன்வெல்த் போட்டி- டேபிள் டென்னிசில் இந்தியாவுக்கு மேலும் 2 வெண்கலம்

  • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ஷரத் அசந்தா, 11-7, 11-9, 9-11, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
  • கலப்பு இரட்டையர் பிரிவின் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ஷரத் அசந்தா – மவுமா தாஸ் ஜோடி வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றது.

காமன்வெல்த் போட்டி- பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டி- ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

காமன்வெல்த் போட்டி- பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்திய ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம்

  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சத்விக், சிராக் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.

காமன்வெல்த்தில் 66 பதக்கங்களை குவித்தது இந்தியா

  • கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலத்துடன் 66 பதக்கங்களை குவித்து 3-வது இடம்பிடித்துள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!