ஏப்ரல் 12 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

தமிழகம் உத்தரப் பிரதேசத்தில் ராணுவ தொழில் வழித்தடம்      அமைக்க நிதி அமைச்சகம் அனுமதி – நிர்மலா சீதாராமன்

  • தமிழகம், உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தொழில்வழித் தடத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது மற்றும் நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார

தேசியசெய்திகள்

முதல் முறையாக சர்வதேச திட்ட உடன்பாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் கையெழுத்து

  • மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வணிகம், வர்த்தகம், சுகாதாரம், கல்வி, சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் வாகனப் போக்குவரத்து தங்கு தடையின்றி இயங்குவதற்காக மியான்மர் நாட்டில் உள்ள யாக்யி – கலேவா நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்கான உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இத்திட்டத்தில் 3 பெரிய பாலங்களும் 2 சிறிய பாலங்களும் புதிதாக அமைக்கப்படும்.

மத்தியப் பிரதேச கிராமங்களுக்கு மொத்தம் ரூ. 913.72 கோடி கடன்: ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி முடிவு

  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழ்வாதாரம், கல்வி, போக்குவரத்து ஆகியவற்றின் மேம்பாடுகளுக்காக ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி(Asian Infrastructure Investment Bank – AIIB) மொத்தம் ரூ. 913.72 கோடி அளவுக்கு கடனுதவி அளிக்க இருக்கிறது. இந்தக் கடனுதவியின் மூலம் மொத்தம் 15 லட்சம் கிராம மக்கள் நேரடியாகப் பயன் பெறுவர்.
  • சாலை வசதி இணைப்பு மேம்படுத்தப்படுவதால், அதன் மூலம் கிராமத்தினரின் விவசாயப் பண்டங்களைச் சாலை வழியாக எடுத்துச் சென்று சந்தைப்படுத்த இயலும். இதன் மூலம் கிராம மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெறும். அத்துடன், போக்குவரத்து வசதியால் உ.யர்கல்வியில் கூடுதலான மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும். பள்ளிகளில் மாணவர்களின் வருகையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலைப் பராமரிப்புப் பணித் திட்டத்தினால், ஏராளமான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இது பாலியல் சமத்துவத்துக்கும் பெண்களின் வருமான உயர்வுக்கும் வழிவகுக்கும்.

மேக் இன் இந்தியாதிட்டத்தின் கீழ் எல் அண்ட் டி நிறுவனம் கட்டிய கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

  • முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐசிஜிஎஸ் விக்ரம் என்ற கப்பலை எல் அண்ட் டி நிறுவனம் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரோந்து கப்பல்களை தயாரிப்பதற்காக 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எல் அண்ட் டி நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்திருந்தது.இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கப்பலை எல் அண்ட் டி நிறுவனம் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.

பதவியேற்புகள்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய அறங்காவலர்

  • திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேசசெய்திகள்

சிரியா விவகாரத்தில் ரஷ்யாவின் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தோல்வி

  • சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெடித்துள்ள விவகாரத்தில் ரஷியா இயற்றிய தீர்மானம் போதிய ஆதரவு கிடைக்காததால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தோல்வி அடைந்தது.
  • ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால்தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்னும் நிலையில் ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷியா இயற்றிய இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. சில வேளைகளில் 9 வாக்குகளுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ‘வீட்டோ’ என்னும் மறுப்புரிமை அதிகாரம் பெற்றுள்ள ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த தீர்மானம் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞான செய்திகள்

ஐஆர்என்எஸ்எஸ் – II எனும் கண்காணிப்புச் செயற்கைக் கோளினை பிஎஸ்எல்வி – சி41 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

  • இஸ்ரோவின் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனம் பிஎஸ்எல்வி – சி41 தனது 43-வது பாய்ச்சலில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (12.04.2018) 1425 கிலோ கிராம் எடையுள்ள ஐஆர்என்எஸ்எஸ் – II கண்காணிப்புச் செயற்கைக் கோளினை வெற்றிகரமாகச் செலுத்தியது
  • இந்தியப் பல்வகைக் கண்காணிப்பு” (நேவிக்) முறையின் புதிய செயற்கைக்கோளாக ஐஆர்என்எஸ்எஸ் – II உள்ளது. இந்தியப் பிராந்தியக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் முறை என்றும் அறியப்படும் நேவிக், இந்திய மண்டலத்திலும், இந்தியாவைச் சுற்றியுள்ள 1500 கிலோமீட்டர் பகுதியிலும் உள்ள நிலைமை குறித்த தகவல்களை வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள சுயேட்சையான மண்டலக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் முறையாகும்.

குறிப்பிற்கு :தற்போது வரை பிஎஸ்எல்வி 52 இந்தியச் செயற்கைக் கோள்களையும், வெளிநாடுகளிலிருந்து 237 செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

வணிகசெய்திகள்

ஆசிய வளர்ச்சி வங்கி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும்

  • நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3%ஆக உயரும் மற்றும் அடுத்த நிதியாண்டில் 7.6% ஆக உயரும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.

 விளையாட்டுசெய்திகள்

காமன்வெல்த் – இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தேஜாஸ்வினி வெள்ளி பதக்கம் வென்றார்

  • பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் துப்பாக்கி சுடுதலில்
    தேஜாஸ்வினி சவந்த் 6 சுற்றுகள் முடிவில்9 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்..

காமன்வெல்த் போட்டி – மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 3 பதக்கங்கள்

  • காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி      மற்றும்  வெண்கலப்       பதக்கம்   கிடைத்தது.57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் ராகுல் அவாரே தங்கப்பதக்கம் வென்றார்,53 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை பபிதாபோகட் வெள்ளிப் பதக்கம், மகளிர் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை கிரண் வெண்கலம் வென்றார்.

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் சுஷில் குமார் தங்கம் வென்று சாதனை

  • சுஷில் குமார் 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தென்ஆப்ரிக்க வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இது காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது பதக்கமாகும்.

பேட்மிண்டன் தரவரிசையில் ஸ்ரீகாந்த் கிதாம்பி  நம்பர் 1

  • பேட்மிண்டன் போட்டிக்கான உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் கிதாம்பி பெற்றுள்ளார்.

காமன்வெல்த் வட்டு எறிதலில் சீமா புனியா வெள்ளிப்பதக்கம் – நவ்ஜீத் டில்லியனுக்கு வெண்கலம்

  • பெண்களுக்கான வட்டு எறிதலின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா41 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான நவ்ஜீத் டில்லியன் 57.43 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கம் வென்றார். இந்தியா 14 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!