ஏப்ரல் 10 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில்  மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி

  • மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி. ஏப்ரல் 14-ந் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் கண்ணி வெடிகளை அகற்றும் பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் நவீன ரக பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் மதரஸாவில் சமஸ்கிருதம் கற்றுத்தரப்படுகிறது

  • உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூரில் உள்ள மதரஸா பள்ளிக்கூடத்தில் மற்ற பாடங்களுடன் சமஸ்கிருத மொழி பாடமும் கற்றுத்தரப்படுகிறது. இதில் மாணவர்கள் இந்தி, ஆங்கிலம், உருது மொழிகளோடு சேர்ந்து சமஸ்கிருதத்தையும் பயின்று வருகின்றனர். இது, நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது

பீகார்

பீகாரில் புதிய ரெயில் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

  • பீகார் மாநிலத்தின் கத்திஹார்-பழைய டெல்லி இடையே சம்ப்ரான் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையையும், மாதேபுரா பகுதியில் ரெயில் பெட்டிகளை தயாரிக்கும் புதிய தொழிற்சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். முசாபர்பூர்-சகவுலி பகுதிகளுக்கு இடையில் இரட்டை வழித்தடப்பாதைக்கும் சகவுலி-வால்மிகி இடையில்7 கிலோமீட்டர் தூரம் வரையிலான இரட்டை வழித்தடப்பாதைக்கும் அடிக்கல் நாட்டினார்.

தேசியசெய்திகள்

பஷூ சிக்கிட்சக் மஹாசங்க் வலைதளத்தைக் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைச் செயலர் தொடங்கிவைத்தார்

  • கால்நடைப் பராமரிப்புத்  துறைக்காகப்  பிரத்யேகமானpashuchikitsakmahasangh.in  என்ற வலைதளத்தைக் கால்நடை பராமரிப்பு, பால்வளம்  மற்றும்  மீன்வளத்துறைச்  செயலர் திரு தருண் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.
  • தகவல் தளத்தை மேம்படுத்தி, அவற்றைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், திறன்மிக்க தளமாக  இதனை மேம்படுத்துமாறு  பஷூ  சிக்கிட்சக்  மஹாசங்-ஐ  திரு. தருண் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டார்.  விவசாயிகளின்  வருமானத்தை இருமடங்காக்குவதில் கால்நடை பராமரிப்பின் பங்கு என்பது குறித்து பஷூ சிக்கிட்சக் மஹாசங் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் இதனை மேலும் தெரிவித்தார்.

பான்கார்டு பெறுவதில் திருநங்கைகளுக்குபாலினத்தை குறிக்க தனிப்பிரிவு அமல்

  • வருமானவரி விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ள மத்திய அரசு, திருநங்கைகள் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, அவர்கள் தங்கள் பாலினத்தை குறிக்க தனிப்பிரிவு வழங்கப்பட்டுள்ளது. முதல்முறையாக திருநங்கைகள் தங்களுக்கான பாலினத்தை அதாவது மூன்றாம் பாலினத்தை குறிக்க தனிக்கட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதில் திருநங்கைகள் தங்களை மூன்றாம் பாலினமாக குறிப்பிட்டு பான்கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

சர்வதேசசெய்திகள்

சுவாசிலாந்தின் உயரிய விருது பெற்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

  • சுவாசிலாந்தில் வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி லயன் விருது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்டது.

குறிப்பிற்கு:

சுவாசிலாந்து:

தலைநகரம்    – லொபாம்பா

மன்னன்        – முசுவாத்தி III

நாணயம்       – லிலாஞ்செனி

உலகின் அதிக வயதானவராக கின்னஸ் அங்கீகாரம் பெற்ற ஜப்பானியர்

  • உலகில் வாழ்ந்து வருபவர்களில் அதிக வயதான ஆண்மகனாக ஜப்பான் நாட்டை சேர்ந்த மசாஸோ நோனாக்கா(112) என்பவரை கின்னஸ் நிறுவனம் இன்று அங்கீகரீத்துள்ளது.

குறிப்பிற்கு: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீயென்னி லூயிஸ் கால்மென்ட் என்ற பெண்மணி மிக அதிககாலம் வாழ்ந்த நபராக அறியப்படுகிறார். 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

சிலி கடலோரப் பகுதியில் நிலநடுக்கம்

  • தென் அமெரிக்கா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டின் மத்திய பகுதியில் இன்று 6.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய வம்சாவளி பெண் சாதனை:மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார்

  • உலகில் முதன்முறையாக வீணாகும் எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கி இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்
  • பயன்படாத ‘ஸ்மார்ட்போன்’, ‘லேப்டாப்’ (மடிகணினி) போன்றவற்றின் எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் ‘மைக்ரோ’ தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார்.
  • இது உலகில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள ‘மைக்ரோ’ தொழிற்சாலையாகும்.

விஞ்ஞான செய்திகள்

செவ்வாய் கிரக ஆராய்ச்சி: ரோபோ தேனீக்களை அனுப்புகிறது நாசா

  • அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த ‘ரோபோ’க்கள் இன்னும் 2 வருடங்களில் அனுப்பப்பட உள்ளது.

வணிகசெய்திகள்

நாஸ்காம் புதிய தலைவர் ரிஷாத் பிரேம்ஜி

  • நடப்பு நிதி ஆண்டின் நாஸ்காம் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஃபெடெக்ஸ் நிறுவனம் வயர்கார்டுடன் ஒப்பந்தம்

  • பன்னாட்டு கொரியர் நிறுவனமான ஃபெடெக்ஸ் எக்ஸ்பிரஸ் தனது உள்ளூர் அணுகல் மையங்களை அதிகரிக்க நிதிச்சேவை நிறுவனமான வயர்கார்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் 1,000 வயர்கார்டு சில்லறைப் பயன்பாட்டு மையங்கள் ஃபெடெக்ஸ் சேவைகளை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுசெய்திகள்

காமன்வெல்த் போட்டிகள்: ஹீனா சித்து தங்கப் பதக்கம்

  • காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் ஏற்கனவே வெள்ளி வென்றிருந்த இந்தியாவின் ஹீனா சித்து 25 மீ பிஸ்டல் பிரிவில் இன்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!