Daily Current Affairs February 9, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs February 9, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs February 9, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs February 9, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

IISc பெங்களூருடன் DRDO ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

  • DRDO (Defence Research Development Organisation) பெங்களூரின் IISc (Indian Institute of Science) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • மேம்படுத்தப்பட்ட மையத்தினை நிறுவ இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அந்த மையத்திற்கு JTAP-Centre for Excellence என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • IISc மற்றும் DRDO ஆகிய இரண்டின் தொழில்நுட்ப திறனை வளர்ப்பதற்காக இந்த மையம் உருவாக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO பற்றி

தலைமையகம் – புது டெல்லி

தலைவர் – டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி

நிறுவப்பட்டது – 1958

IISc பற்றி

நிறுவப்பட்டது – 1909

தலைவர் – கோவிந்தன்

தமிழகத்தில் 246 ஐடி பூங்காக்கள் அமைக்கப்படும்!!

  • தமிழகத்தில் கூடிய விரைவில் 246 ஐடி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
  • இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும் ஐடி முதலீடுகள் 11 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்தார்.
  • இதன் மூலமாக ஐடி படித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘India Pharma & India Medical Device 2021’ நிகழ்வு மார்ச் மாதம் நடைபெற இருக்கின்றது!!!

  • இந்திய மருத்துவத்துறை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், FICCI & Invest India இவை அனைத்தும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளனர்.
  • தொடர்ச்சியாக 6 வது முறையாக இந்த நிகழ்வு இந்த ஆண்டு நடைபெற இருக்கின்றது. இந்த நிகழ்வு வரும் பிப்ரவரி 25, 26 மற்றும் மார்ச் 1, 2 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
  • 2030 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ தொழில் துறையின் மொத்த சந்தை அளவு 130 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

இந்தியா மற்றும் நேபாளை இணைக்கும் இந்தோ – நேபால் நெடுஞ்சாலை திறப்பு!!

  • இந்தியா மற்றும் நேபால் ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் 108 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தோ – நேபால் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
  • இந்த நெடுஞ்சாலையினை இந்திய தூதரகத்தின் அதிகாரி நிதிஷ் குமார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துரையின் தலைமை அதிகாரி பிரின்குஜ் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
  • இந்திய மற்றும் நேபால் அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 44.48 மில்லியன் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது.

நேபால் பற்றி

தலைநகரம் – காத்மாண்டு

பிரதமர் – சர்மா ஒலி

மென்பொருள் வானொலியை கொள்முதல் செய்வதற்கான MoD மற்றும் BEL இரண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது!!

  • 1000 கோடிக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலமாக மென்பொருள் வானொலிகள் {Software Defined Radio Tactical (SDR-Tac) } கொள்முதல் செய்யபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வானொலிகளை பாதுகாப்பு மின்னணுவியல் பயன்பாடுகள் ஆய்வகம் (Defence Electronics Applications Laboratory (DEAL) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Defence Research & Development Organisation) இணைத்து வடிவமைத்துள்ளது.
  • தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் ஆயுதப்படைகளுக்கு பாதுகாப்பான மென்பொருள் வானொலிகளை வழங்க இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெல் பற்றி

தலைமையகம்- பெங்களூர்

நிறுவப்பட்டது- 1954

ஸ்வாமித்வா” என்ற திட்டங்களுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது!!

  • கிராமப்புறங்களில் வீடுகளை வைத்திருக்கும் கிராம வீட்டு உரிமையாளர்களுக்கு “record of rights” வழங்குவதற்காக SVAMITVA (Survey of Villages And Mapping with Improvised Technology In Village Areas) என்ற புதிய திட்டத்திற்கு ரூ .200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ட்ரோன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராமப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்திற்கான டிரோன்களை தயாரிக்கும் பணிகளை இந்தியாவில் ட்ரோன் உற்பத்தித் துறை ஏற்றுள்ளது.

World Sustainable Development 2021 மாநாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!!

  • பிரதமர் நரேந்திர மோடி World Sustainable Development 2021 மாநாட்டினை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைக்க உள்ளார்.
  • வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 20 வது ஆண்டுவிழாவினை கொண்டாடும் இந்த மாநாட்டு நிகழ்வின் கருப்பொருள் “Redefining Our Common Future: Safe and Secure Environment for All – எங்கள் பொதுவான எதிர்காலத்தை மறுவரையறை செய்தல்: அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான சூழல்” என்பதே ஆகும்.

Download TNPSC Notification 2021 

சென்னை மாநகராட்சியில் இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள் என புதிய வகை சைக்கிள்கள் அறிமுகம்!!

  • தமிழகத்தில் உருவாக்கப்பட்ட 1000 இ-பைக்குகள் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்களை சென்னை மாவட்ட ஆணையாளர் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  • இந்த பைக்குகளை போன்ற சென்னையை சுற்றி 1500 பைக்குகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பைக் வைக்கப்படும் இடங்களில் இருந்து எடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி 2019-20 ஒம்பூட்ஸ்மேன் திட்டத்திற்கான ஆண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது!!

  • ரிசர்வ் வங்கி 2019-20 ஆம் ஆண்டிற்கான ஒம்புட்ஸ்மேன் திட்டங்களின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • கடந்த ஆண்டுகளை விட 65 சதவீதம் புகார்கள் அதிகளவில் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கியில் மூன்று ஒம்புட்ஸ்மன்கள் உள்ளன அவை, வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC) மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளன.
  • மூன்று ஒம்புட்ஸ்மேன் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே திட்டமாக இனி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
  • இந்த புதிய திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணங்கள்

இந்திய டென்னிஸ் ஜாம்பவான் அக்தர் அலி காலமானார்!!

  • இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான அக்தர் அலி தனது 81 வது வயதில் மரணம் அடைந்துள்ளார்.
  • அவர் 1958 முதல் 1964 வரை 08 “டேவிஸ் கோப்பை” போட்டியில் இந்திய டென்னிஸ் அணியினை பிரதிநிதிப்படுத்தி விளையாடினார்.
  • இவர் இந்தியா அணியில் இருக்கும் போது 8 டேவிஸ் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார்.

FT குளோபல் எம்பிஏ தரவரிசை 2021 வெளியிடப்பட்டது!!

  • பைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் தற்போது FT குளோபல் எம்பிஏ தரவரிசை 2021 என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கை உலகின் சிறந்த 100 வணிக பள்ளிகளை கொண்ட பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் 5 இந்திய வணிக பள்ளிகள் இடம் பிடித்துள்ளன.
  • இந்த தரவரிசை பட்டியல் வணிக பள்ளிகளில் படித்த மாணவர்களிடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெறப்பட்ட சம்பளம், ஆராய்ச்சியின் தரம் மற்றும் பலவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.

தமிழக செய்திகள்

ராமநாதபுர மாவட்டத்தில் விரைவில் கடல் பூங்கா மற்றும் விமான நிலையம்!!

  • தமிழகத்தில் உள்ள ராமநாதபுர மாவட்டத்தில் கூடிய விரைவில் கடல் பூங்கா மற்றும் விமான நிலையம் அமையப்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்துடன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் விரிவாக்கம் செய்யபடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள்

ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக இந்தியாவின் ரிஷப் பாண்ட் தேர்ந்தெடுப்பு!!

  • சர்வதேச கிரிக்கெட் அமைப்பு ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் ரிஷப் பாண்டினை தேர்ந்தெடுத்துள்ளது.
  • இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் 97 ரன்கள் எடுத்து போட்டியினை “டிரா” செய்ய உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்எல்வி 51 ராக்கெட்டில் பிரேசில் நாட்டு செயற்கோளுடன் ஏவ இஸ்ரோ முடிவு!!

  • வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி இஸ்ரோவின் பிஎஸ்எல்வி 51 ராக்கெட்டில் பிரேசில் நாட்டிற்கு சொந்தமான செயற்கைகோள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த செயற்கைகோள் அமேசான் காடு அழிக்கப்படுவதை கண்காணிக்க ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பூமியில் இருந்து 752 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவிவட்ட பாதையில் இந்த ராக்கெட் நிலைநிறுத்தபட உள்ளது.

Download CA Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!