Daily Current Affairs February 7 & 8, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 7 & 8, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி  நடப்பு நிகழ்வுகள் – 07 & 08 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

இந்தியாவின் முதல் புவிவெப்ப மின் திட்டம் லடாக்கில் துவக்கி வைப்பு!!

  • இந்தியாவின் முதல் புவிவெப்ப மின் திட்டம் கிழக்கு லடாக்கின் புகா என்ற கிராமத்தில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புகா கிராமம் தான் இந்தியாவில் உள்ள மிகவும் வெப்பமான பகுதியாக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் ஒரு மெகாவாட் (மெகாவாட்) மின் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டம் வரும் 2022 ஆம் ஆண்டில் முடிவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லே பற்றி

தலைநகரம் – லடாக்

கவர்னர்- ராதா கிருஷ்ணா மாத்தூர்

2021 – 2022 நிதியாண்டில் பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனாவுக்காக 16,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!!

  • விவசாயிகளின் பயிர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக 2021-22 ஆம் ஆண்டுக்கான பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனாவுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
  • விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டின் அதிகபட்ச பயனை இது உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த நிதியாண்டினை விட இது 305 கோடி ரூபாய் அதிகமான நிதிஒதுக்கீடு என்றும் கூறப்பட்டுள்ளது.
  • இந்த திட்டம் பயிர்களை விதைப்பதில் தொடங்கி அறுவடை காலம் முடியும் வரை விவசாயிகளுக்கான பாதுகாப்பினை வழங்கிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் மின் அமைச்சரவை (e cabinet) ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது!!

  • நாட்டில் முதல் முறையாக மின் அமைச்சரவை ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெய் ராம் தாகூர் தலைமையில் நடைபெற்றது.
  • இந்த மின் அமைச்சரவை அனைத்தும் ஆவணங்கள் எதுவும் பயன்படுத்தாமல் நடைபெற்றுள்ளது.
  • அந்த மாநிலத்தின் தகவல் தொடர்பு துறை இதனை வடிவமைத்துள்ளது. இந்த அமைச்சரவையில் 32 விதமான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

ஹிமாச்சல் பிரதேஷ் பற்றி

தலைநகரம் – ஷிம்லா மற்றும் தர்மசாலா

முதல்வர் – ஜெய் ராம் தாகூர்

ஆளுநர் – போர்ட் தத்தாத்ரேயா

சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சி “யுத் அபியாஸ் 20″ நடைபெற்றது!!

  • ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகாஜன் கள துப்பாக்கிச் சூடு மைதானத்தில் இந்தியா-அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சி “யுத் அபியாஸ் 20” தொடங்கியது.
  • இந்த பயிற்சி வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு இந்த பயிற்சி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெறும் இந்த பயிற்சி 16 வது பதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பயிற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்காவினை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.

அமெரிக்கா பற்றி

தலைநகரம் -வாஷிங்டன், டி.சி.

ஜனாதிபதி – ஜோ பிடன்

நாணயம் – அமெரிக்க டாலர்

இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 1.1 பில்லியன் கோவிட் தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது!!

  • இந்திய நிறுவனமான சீரம் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை வாங்க ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது.
  • இதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. மொத்தமாக, 1.1 பில்லியன் கோவிட் தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த தடுப்பூசிகள் 100 நாடுகளில் உள்ளவர்களுக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பற்றி

தலைமையகம்- புனே

தலைமை நிர்வாக அதிகாரி- ஆதர் பூனவல்லா

நிறுவகிப்பட்டது – 1966

நாசாவின் “SPHEREx” என்ற விண்வெளி பணிக்கான ஒப்பந்தத்தை SpaceX நிறுவனம் பெற்றுள்ளது!!

  • விண்ணில் உள்ள அகச்சிவப்பு ஒளியினை (infrared light) ஆய்வு செய்வதற்கான பணி தான், SPHEREx என்பது.
  • இந்த பணிக்கான ஒப்பந்தத்தினை தான் SpaceX நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது. இந்த மிஷன் ஜூன் 2024 ஆம் ஆண்டிற்குள் நடைபெற வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கலிஃபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து இதற்காக Falcon என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பணிக்கான மொத்த மதிப்பு 98.8 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் பற்றி

தலைமையகம் – கலிபோர்னியா, அமெரிக்கா

நிறுவப்பட்டது- 2002

தலைமை நிர்வாக அதிகாரி- எலோன் மஸ்க்

நாசா பற்றி

தலைமையகம்: வாஷிங்டன், டி.சி, அமெரிக்கா

செயல் நிர்வாகி: ஸ்டீவ் ஜுர்சிக்

வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த முதல் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உயர் மட்டகூட்டம் நடைபெற்றது!!

  • இந்தியாவின் முதல் உயர் மட்ட உரையாடல் (First High Level Dialogue) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஐரோப்பிய ஒன்றிய நிர்வாக துணைத் தலைவர் மற்றும் வர்த்தக ஆணையர் திரு. வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
  • அடுத்த மூன்று மாதங்களுக்குள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு பிரச்சினைகள் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று அனைத்து அமைச்சர்களும் ஒத்துக்கொண்டு உள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் (European Union) பற்றி

தலைமையகம்- பெல்ஜியம்

மொத்த உறுப்பினர் நாடுகள்- 28

நிறுவப்பட்டது- 1993

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்- உர்சுலா வான் டெர் லேயன்

14 வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா பங்களாதேஷில் நிறைவு!!

  • பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற 14 வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா நிறைவடைந்துள்ளது.
  • 37 நாடுகளைச் சேர்ந்த 179 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. தொடர்ந்து 7 நாட்கள் இந்த விழா பங்களாதேஷ் தலைநகரில் நடைபெற்றது.
  • நிறைவு விழாவில் 12 விருதுகள் வழங்கப்பட்டன.
  • சிறந்த சர்வதேச திரைப்பட விருது – டச்சு திரைப்பட ஜாக்கி மற்றும் ஓப்ஜென்
  • சிறந்த இயக்குனர் விருது- ஸ்டோர்க்ஸ் நெஸ்ட் படத்திற்காக அனி ஓகனேசியன் (ஆர்மீனியா)
  • தி யங் டேலண்ட் விருது- பங்களாதேஷ் திரைப்படம் மாத்தி

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

மாநில நிகழ்வுகள்

நாட்டின் முதல் இடி மின்னலை ஆராய்ச்சி செய்ய இருக்கும் புது மையம் ஒடிசாவில் அமைய உள்ளது!!

  • நாட்டில் முதல் முறையாக இடி மற்றும் மின்னலை ஆராய்ச்சி செய்ய இருக்கும் மையம் ஒடிஷா மாநிலத்தின் பால்சோர் என்ற மாவட்டத்தில் அமைய பெற உள்ளது.
  • மத்திய புவி அறிவியல் துறை, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் DRDO இணைந்து அமைக்க திட்டமிட்டுள்ளது.
  • இந்த செய்தியினை இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மொஹபத்ரா உறுதி செய்துள்ளார்.

ஒடிஷா பற்றி

தலைநகரம் – புவனேஸ்வர்

முதல்வர் – நவீன் பட்நாயக்

ஆளுநர் – கணேஷி லால்

கோவாவை மீன்வள மையமாக்க 400 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது!!

  • கோவாவை மீன்வள மையமாக்க 400 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மீன்வள துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
  • நாட்டில் மீன்வள மையமாக உருவாகும் திறன் கோவா மாநிலத்திற்கு உண்டு. இதற்காக 400 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
  • இதற்காக மாநிலத்தில் 72 சதுர அடி பரப்பளவில் மீன் வளர்ப்பு குட்டைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ராமேஸ்வரம் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 100 சிறிய செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது!!

  • பள்ளி மாணவர்கள் மத்தியில் விண்வெளி துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு அப்துல் காலம் சர்வதேச அறக்கட்டளை ஒரு பயிற்றுவித்தல் பயிற்சியை ஆரம்பித்தது.
  • இந்த அறக்கட்டளையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் 100 சிறிய ரக செயற்கைகோள்களை தயாரித்து அதனை விண்ணில் செலுத்தியுள்ளனர்.
  • இந்த செயற்கைகோள் 40 கிராம் முதல் 50 கிராம் வரை எடை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவுசார் பூங்கா திறக்கப்பட உள்ளது!!

  • முன்னாள் முதல்வர்கள் செல்வி ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரது நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவு சார் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
  • இவை இரண்டும் ஜெயலலிதா பிறந்த தினமான வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
  • இதனை தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு மானியமாக 18.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!!

  • தமிழகத்தில் அரசு பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக 18.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு இத்துடன் விளையாட்டு உபகரணங்களை கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட உள்ளது.
  • இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது.

Download Tamil Current Affairs 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!