Daily Current Affairs February 6, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 6, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை 16 Mk-III என்ற ஹெலிஹாப்டரை வாங்க முடிவு செய்துள்ளது!!

  • இந்திய கடற்படை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கடலோர பாதுகாப்புக்காகமூன்று “மேட் இன் இந்தியா” மேம்படுத்தப்பட்ட புதிய ரக ஹெலிஹாப்டர்களை வாங்கியுள்ளது.
  • 16 Mk-III ரக ஹெலிஹாப்டர்களில் HAL (Hindustan Aeronautics Limited) நிறுவனம் மூன்று ஹெலிஹாப்டர்களை இந்திய கடற்படைக்கு வழங்கியுள்ளது.
  • நேற்று நடந்த “ஏரோ இந்தியா 2021” நிகழ்வில் மொத்தமாக 201 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளன.

லக்வார் மின்சார திட்டத்திற்கு (lakhwar electricity project) மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது!!

  • மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ள லக்வார் மின்சார திட்டத்திற்கு (lakhwar electricity project) மத்திய சுற்றுசூழல் மற்றும் காலநிலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் என்ற மாவட்டத்தின் யமுனை நதி கரையில் அமைக்கப்பெற்ற உள்ளது.
  • இந்த திட்டத்திற்கான மொத்த மதிப்பு 5747.17 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IAF மற்றும் HAL ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!!

  • IAF (Indian Air Force) மற்றும் HAL (Hindustan Aeronautics Limited) இவை இரண்டும் கூட்டாக இணைந்து ஒரு இணையதளத்தை உருவாகியுள்ளது.
  • “ஏரோ இந்தியா 2021” நிகழ்வின் போது இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த இரு அமைப்புகளின் மத்தியிலும் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பான முறையில் பகிர இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது பணி மற்றும் பட்ஜெட் மேற்கோள் செயல்முறைகளை எடுக்கும் காலாவகாசத்தினையும் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

HAL பற்றி

தலைவர் மற்றும் எம்.டி – ஆர் மாதவன்

தலைமையகம் – பெங்களூர்

நிறுவப்பட்டது – 1940

இந்தியாவிற்கும் பஹ்ரைன் நாட்டிற்கும் இடையேயான 1 வது கூட்டு செயற்குழு கூட்டம் நடைபெற்றது!!

  • இந்தியா மற்றும் பஹ்ரைன் நாட்டிற்கும் இடையே முதன் முதலாக கூட்டு செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
  • இந்த கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹ்ரைன் எரிசக்தி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அப்துல் உசேன் தலைமை தாங்கினார்.
  • இந்தியா சார்பில் எரிசக்தி அமைச்சகத்தின் இணை செயலாளர் தினேஷ் தயானந்த் ஜக்தேல் பங்கேற்று இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

ஆசியான்-இந்தியா சுற்றுலா அமைச்சர்களின் 8 வது கூட்டம் நடைபெற்றது!!

  • இந்தியா சார்பில் ஆசியான்-இந்தியா சுற்றுலா அமைச்சர்களின் 8 வது கூட்டத்தில் லாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் பங்கேற்றார்.
  • இந்த கூட்டம் ஆன்லைன் வாயிலாக தான் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் அனைவரும் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
  • சுற்றுலாத்துறையில் எந்த மாதிரியான மேம்பாடுகளை கொண்டு வரலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்தனர்.

மூன்றாவது பங்களாதேஷ் திரைப்பட விழா 2021!!

  • மூன்றாவது பங்களாதேஷ் திரைப்பட விழா 2021 மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் துவக்கப்பட்டது.
  • பங்களாதேஷ் தகவல்துறை அமைச்சர் டாக்டர் ஹசன் மஹ்மூத் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார்.
  • இந்த விழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்களாதேஷ் நாட்டின் 32 திரைப்படங்கள் திரையிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்த விழாவின் முதன்மை திரைப்படமாக பங்களாதேஷ் பிரதமரின் வாழ்க்கை திரைப்படமான “Hasina-A Daughter’s Tale” என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

மாநில நிகழ்வுகள்

அசாம் மாநில அரசு 3 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மக்களுக்கு வழங்க உள்ளது!!

  • பாகிச்சா தன் புராஸ்கர் திட்டத்தின் கீழ் தேயிலைத் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த 7.5 லட்சம் மக்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்க அசாம் அரசு வழங்க முடிவு செய்துள்ளது.
  • இந்த திட்டம் கடந்த 2017 – 2018 ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிதி உதவி திட்டம் மூலமாக தேயிலை தோட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு அவர்களின் வங்கி கணக்கிற்கே பணம் செலுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையை வாக்காளர்களுக்கு தபால் மூலம் வாக்காளர் அட்டை வழங்க திட்டம்!!

  • தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் அஞ்சல் துறை மக்களுக்கு தபால் மூலமாக வாக்காளர் அட்டையினை வழங்க ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தினை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரபு மற்றும் சென்னை அஞ்சல் துறை தலைமை அதிகாரி சாருகேசி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
  • இந்த ஒப்பந்தம் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் 348 கி.மீ தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய்வழியை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்!!

  • மேற்கு வங்காளத்தில் உள்ள பிரதான் மந்திரி உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 348 கி.மீ தோபி – துர்காபூர் இயற்கை எரிவாயு குழாய்வழியை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
  • இந்திய எண்ணெய் கழகத்தின் ஹால்டியா சுத்திகரிப்பு நிலையத்தின் இரண்டாவது Catalytic-Iso-de-waxing யூனிட்டையும் பிரதமர் திறந்து வைத்தார்.

தமிழக அரசு ரூ .12,110 கோடி ரூபாய் மதிப்பிலான பண்ணை கடனை தள்ளுபடி செய்துள்ளது!!

  • கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 12,110 கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
  • இந்த தள்ளுபடி மூலமாக 16.43 லட்ச தமிழக விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • கொரோனா பொது முடக்கம், வடகிழக்கு பருவமழை மற்றும் தமிழகத்தை தாக்கிய சூறாவளிகள் காரணமாக விவசாயிகள் அதிகமாக பதிப்படைந்தனர். இதற்காக தான் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் 600 கோடி ரூபாய் மதிப்பிலான “நருவி” மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்!!

  • தமிழக முதல்வர் 600 கோடி ரூபாய் மதிப்பிலான “நருவி” என்ற பெயரில் புதிய மருத்துவமனையினை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.
  • இந்த மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் உள்ளதாக தெறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மருத்துவமனை Henry Ford Health System என்ற அமெரிக்கா நிறுவனத்துடன் இணைத்து கட்டமைக்கபட்டுள்ளது.
  • இந்த மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

நிதித்துறை விவகாரங்கள்

2021-22 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணிப்பு!!

  • 2021-22 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தற்போது கணித்துள்ளது.
  • இந்தியாவில் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதற்காக நாணயக் கொள்கையினை மறுஆய்வு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • ரெப்போ விகிதம் 4 சதவீதத்திலும், ரெவெர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதத்திலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் சிபிஐ பணவீக்கம் 5.2 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.

நியமனங்கள்

இந்தியாவுக்கான கூகிள் கிளவுட் குழுமத்தின் இயக்குனராக பிக்ரம் சிங் பேடி நியமனம்!!

  • கூகிள் கிளவுட் இந்தியாவுக்கான புதிய நிர்வாக இயக்குநராக பிக்ரம் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கூகிளின் ஆசியா பசிபிக் கிளவுட் பிரிவின் தலைவராக பதவி உயர்த்தப்பட்ட கரண் பஜ்வாவிடமிருந்து பிக்ரம் சிங் பேடி இந்த பதவியை பெற உள்ளார்.

கூகிள் கிளவுட் பற்றி

தலைமை நிர்வாக அதிகாரி- தாமஸ் குரியன்

தலைமையகம்- கலிபோர்னியா, அமெரிக்கா

Download Tamil Current Affairs 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!