Daily Current Affairs February 5, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 5, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 5 பிப்ரவரி 2021

முக்கிய நாட்கள்

கண்டுபிடிப்பாளர் ஜான் பாய்ட் டன்லப் பிறந்த தினம் இன்று!!

  • முக்கியமான பல கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்தவர் தான்,  ஜான் பாய்ட் டன்லப்.
  • இவர் சைக்கிளை எளிதாக ஓட்ட வான்வழி சக்கரத்தை கண்டுபிடித்தவர் ஆவார்.
  • டன்லப் எனப்படும் டயர் நிறுவனத்தின் நிறுவனரும் இவர் தான்.

தேசிய நிகழ்வுகள்

இந்தியாவில் 12 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது!!

  • இந்தியாவில் தற்போது 22 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகளில் இருந்து மொத்தமாக 6,780 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
  • இவைகளுடன் மேலும் புதிதாக 12 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • இதனை மத்திய அணுசக்திதுறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவை கூட்டதில் உறுதி செய்துள்ளார்.

மத்திய அணுசக்திதுறை பற்றி

நிறுவப்பட்டது: 1954

தலைவர்: கே.என். வியாஸ்

நிறுவனர்: ஹோமி பாபா

2020 – 2021 ஆம் நிதியாண்டில் காவல்துறையினர் மீதான மனித உரிமை மீறல் பட்டியல் வெளியீடு!!

  • 2020 -2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் உள்ள காவல்துறையினர் மீதான மனித உரிமை மீறல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த பட்டியலில் உத்தர பிரதேஷ மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
  • இந்த நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் 11,130 வழக்குகள் மனித உரிமை மீறல் வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்தி வார்த்தையாக “ஆத்மநிர்பார்த்தா” தேர்தெடுப்பு!!

  • 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த இந்தி வார்த்தையினை ஆக்ஸ்போர்டு மொழிகள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
  • “ஆத்மநிர்பார்த்தா” (aatm nirbhar bharat) என்பதே அந்த வார்த்தை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வார்த்தைக்கான அர்த்தம் self reliance என்பதே ஆகும். அதாவது “சுயசார்பு”

பாதுகாப்பு நிகழ்வுகள்

156 பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய DRDO ஒப்புதல் அளித்துள்ளது!!

  • இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு 156 பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்ய DRDO (Defence Research and Development Organisation) தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • பாதுகாப்பு உபகரணங்களின் பட்டியலையும் தற்போது DRDO வெளியிட்டுள்ளது.
  • இந்த பட்டியலில் 9 வானூர்தி உபகரணங்கள், 16 அணு-உயிரியல்-இரசாயன உபகரணங்கள், 41 ஆயுதங்கள் மற்றும் போர் உபகரணங்கள், 28 கடற்படை சம்பந்தமான உபகரணங்கள், 27 மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள், 10 உயிர் பாதுகாப்பு பொருட்கள், 4 ஏவுகணை அமைப்புகள், 4 மைக்ரோ எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் 7 பாதுகாப்பு சம்பந்தமாக பிற சாதனங்கள் இடம் பெற்றுள்ளன.

DRDO பற்றி

தலைவர் – டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி

தலைமையகம்- புது டெல்லி

நிறுவப்பட்டது – 1958

ஒப்பந்தங்கள்

HAL நிறுவனம் MIDHANI நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

  • HAL (Hindustan Aeronautics Limited) நிறுவனம் MIDHANI (Mishra Dhatu Nigam Limited) என்ற நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் கலப்பு மூலப்பொருட்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியினை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
  • கலப்பு மூலப்பொருட்களுக்காக கையெழுத்திடப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவே ஆகும்.

HAL பற்றி

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் – ஸ்ரீ ஆர் மாதவன்

தலைமையகம்- பெங்களூரு

மிதானி பற்றி

தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் சஞ்சய் குமார் ஜா

தலைமையகம்- ஹைதராபாத்

உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமாடோவுடன் MoHUA ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டியுள்ளது!!

  • MoHUA (Ministry of Housing and Urban Affairs) உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனமான சோமாடோவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தியாவில் உணவுகளை விற்கும் தெருவோர விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்திருக்காகவும், அவர்களது பொருளாதார நலத்திற்காகவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இத்துடன் இந்த அமைச்சகம் கூடுதலாக ஒரு மொபைல் ஆப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மத்திய அரசு அறிவித்து வரும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இந்த செயலியின் கடமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில நிகழ்வுகள்

5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியுள்ள முதல் மாநிலமாக உத்தர பிரதேச மாநிலம் உருவாகியுள்ளது!!

  • இந்தியாவில் முதல் முறையாக உத்தர பிரதேச மாநிலம் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் வழங்கியுள்ளது.
  • இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றது.

உத்தரபிரதேசம் பற்றி

முதல்வர் – யோகி ஆதித்யநாத்

ஆளுநர்- ஆனந்திபென் படேல்

தலைநகரம் – லக்னோ

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

தமிழக நிகழ்வுகள்

தமிழகத்தில் நேற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடை செய்ய மசோதா தாக்கல்!!

  • இணையவழியில் விளையாடும் ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடை செய்வதற்கான சட்ட மசோதா நேற்று தமிழக சட்ட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
  • இனி இந்த மசோதா மூலமாக ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இந்த விளையாட்டினை விளையாடுபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதமும் 6 மாத கால சிறைத்தண்டனையும் வழங்கப்படும், அதே போல் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு 10000 ரூபாய் அபராதமும், 2 சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.

தமிழகத்தின் சென்னை காவல் துறை “தோழி” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது!!

  • பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க சென்னை காவல் துறை “தோழி” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த “தோழி” காவல்துறையில் தனி பிரிவாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள் & சாதனைகள்

ICC அமைப்பின் புதிய துணைத்தலைவராக இம்ரான் குவாஜா நியமனம்!!

  • சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ICC தனது புதிய துணைத்தலைவராக இம்ரான் குவாஜா என்பவரை நியமித்துள்ளது.
  • கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் ICC அமைப்பின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்.
  • கடந்த ஆண்டு இவர் ICC அமைப்பின் தற்காலிக தலைவராக சஷாங்க் மனோகர் என்பவருக்கு பதிலாக செயலாற்றினார்.

ICC அமைப்பு பற்றி

தலைவர் – கிரெக் பார்க்லே

துணைத்தலைவர் – இம்ரான் குவாஜா

நிறுவப்பட்டது – 1909

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக செல்வம் நியமனம்!!

  • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் அழகப்பா பல்கலைக்கழத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார். இவர் நியமனத்திற்கான உத்தரவினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளார்.
  • ஆசிரியர் துறையில் இவருக்கு 35 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. பல ஆய்வு கட்டுரைகளை இவர் சமர்ப்பித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராக எஸ்.என். சுப்பிரமணியம் நியமனம்!!

  • தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (National Safety Council) புதிய தலைவராக எஸ்.என். சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இந்த கவுன்சிலின் நிர்வாக தலைவர் மற்றும் இயக்குனராக அடுத்த 3 ஆண்டுகள் இருப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் சிறந்த கட்டுமான நிறுவனமான L&T என்ற நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இவருக்கு உள்ளது.

நாட்டின் மிக இளம் வயது விமானியாக 25 வயதான ஆயிஷா என்பவர் சாதனை புரிந்துள்ளார்!!

  • ஜம்மு & காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தினை சேர்ந்த ஆயிஷா ஆசிஸ் என்ற 25 வயதான பெண் நாட்டின் இளம் வயது பெண் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
  • இவர் தனது 15 வயதிலேயே மிக் – 29 என்ற விமானத்தினை இயக்க பயிற்சி பெற்றுள்ளார்.
  • மும்பையில் உள்ள பிளையிங் கிளப் என்ற அமைப்பிடம் இருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு விமானத்தினை இயக்குவதற்கான அங்கீகாரத்தினை பெற்றுள்ளார்.

Download Tamil Current Affairs 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!