Daily Current Affairs February 3, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 3, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் 03 பிப்ரவரி 2021

முக்கிய நாட்கள்

தமிழகத்தின் முக்கிய தலைவர் அண்ணாதுரை நினைவு தினம்!!

  • தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழக அரசியலில் முக்கியமாக கருதப்படும் அரசியல்வாதியுமான அண்ணாதுரை மறைந்த தினம் இன்று.
  • தமிழகத்தின் முதல் முதலமைச்சர் இவரே ஆவார். தமிழ் மொழியின் மீது தீராத பற்று கொண்டவர் அண்ணாதுரை.
  • இவரது மறைவு தினமான இன்று தமிழக மக்கள் மற்றும் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

தேசிய நிகழ்வுகள்

ஆசியாவின் மிக பெரிய விமான நிகழ்ச்சியான “ஏரோ இந்தியா -2021” துவங்கியது!!

  • ஆசியாவின் மிக பெரிய விமான நிகழ்ச்சியாக “ஏரோ இந்தியா -2021” கருதப்படுகிறது.
  • இந்த நிகழ்வு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரில் துவங்கியது.
  • இதனை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் துவக்கி வைத்தார்.
  • கொரோனா பெரும் தொற்றிற்கு பிறகு நடக்கும் மிக பெரிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.
  • 13 வது ஆண்டு விழாவினை இந்த நிகழ்வு கொண்டாடுகிறது. இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முதல் முறையாக 27 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

ஐஐடி கான்பூர் குறைந்த எடை கொண்ட ஹெலிகாப்டரை உருவாகியுள்ளது!!

  • ஐஐடி கான்பூர் கல்வி நிர்வாகத்தில் உள்ளவர்கள் மிகவும் குறைவான எடை கொண்ட ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த ஹெலிஹாப்டர் “ஏரோ இந்தியா -2021” நிகழ்வின் போது பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஹெலிஹாப்டர் ஐஐடி கான்பூரின் ஸ்டார்ட் அப் நிறுவனமான எண்டூர் ஏர் பிரைவேட் லிமிடெட் உற்பத்தி செய்துள்ளது.
  • இந்த ஹெலிஹாப்டரில் பல சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை, செங்குத்தாக புறப்படுதல் (vertical takeoff ), நீண்ட தூரம் பயணம் செய்யும் வல்லமை (Long Range Endurance), தடைகளை தவிர்க்கும் வல்லமை (Obstacle Avoidance) போன்ற அம்சங்கள் உள்ளன.
  • இந்த ஹெலிஹாப்டர் மீட்பு துறைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில நிகழ்வுகள்

மகாராஷ்டிரா மாநிலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது!!

  • சொத்துரிமை மற்றும் தர சோதனை சான்றிதழை பதிவு செய்வதற்கு தொடக்க நிதி உதவி வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த நிதி உதவி திட்டத்தை தொடங்கினார்.
  • இந்த திட்டத்தின் கீழ் அரசாங்கம் 80% காப்புரிமை பதிவு, தயாரிப்பு சோதனை மற்றும் சான்றிதழ் செலவை செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா பற்றி

முதல்வர் – உத்தவ் தாக்ரே

ஆளுநர் – பகத் சிங் கோஷ்யாரி

தலைநகரம் – மும்பை

ஜம்மு & காஷ்மீரில் மலர் வளர்ப்பு மையத்தின் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது!!

  • ஜம்மு-காஷ்மீரின் கவர்னர் பசீர் அகமது கானின் ஆலோசகர் இன்று ஜம்முவில் உள்ள பாக்-இ-பூரில் மாதிரி மலர் வளர்ப்பு மையத்தின் (Model Floriculture Centre) அடிக்கல் நாட்டினார்.
  • இந்த மையம் அந்த பகுதியினை சேர்ந்த மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மையம் அந்த பகுதியினை சேர்ந்த விவசாயிகளுக்கு மலர் வளர்ப்பு குறித்த பயிற்சியினை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு & காஷ்மீர் பற்றி

கவர்னர் – மனோஜ் சின்ஹா

தலைநகரம் (கோடை) – ஸ்ரீநகர்

தலைநகரம் (குளிர்காலம்) – ஜம்மு

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

NBCFDC அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

  • தேசிய பின்தங்கிய வகுப்புகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NBCFDC – National Backward Classes Finance and Development Corporation) அப்பல்லோ மெட்ஸ்கில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • செவிலியர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இந்த பயிற்சி செவிலியர் பயிற்சி பெரும் மாணவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பீகார், டெல்லி, தமிழ் நாடு, தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள 1000 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் 25 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது!!

  • பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் 25 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • 23 ஒப்பந்தங்கள் வெவேறு நாடுகளுடைய மருத்துவ பல்கலைக்கழகங்களுடன் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • 13 ஒப்பந்தங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் கையெழுத்திட்டுள்ளன.
  • மத்திய ஆயுஷ் அமைச்சகம் 494.91 கோடி ரூபாயை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் பற்றி

நிர்வாக அதிகாரி  – ஸ்ரீபாத் நாயக்

நிறுவப்பட்டது – 9 நவம்பர் 2014

தலைமையகம் – புது டெல்லி

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

பாதுகாப்பு செய்திகள்

73 Tejas Mk-1A மற்றும் 10 LCA Tejas Mk-1 விமானங்களை வாங்க 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து!!

  • மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டாவது லைட் காம்பாட் விமானத்தினை துவக்கி வைத்தார்.
  • பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Security -CCS) 48 ஆயிரம் கோடி மதிப்பிலான 73 Tejas Mk-1A மற்றும் 10 LCA Tejas Mk-1 விமானங்களை வாங்க உறுதி அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேஜஸ் பற்றி

தேஜஸ் அதிக சுறுசுறுப்பான மல்டி-ரோல் சூப்பர்சோனிக் ஃபைட்டர் ஆகும். இது எலக்ட்ரானிக் வார்ஃபேர் சூட் மற்றும் ஏர்-டு-ஏர் எரிபொருள் நிரப்புதல் அமைப்பினை கொண்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் பற்றி

மத்திய அமைச்சர்- ஸ்ரீ ராஜ் நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சகத்தின் மாநில அமைச்சர் – ஸ்ரீபாத் யெசோ நாயக்

“ஏரோ இந்தியா 2021” நிகழ்வில் பெல் நிறுவனம் 30 தயாரிப்புகளை பார்வைக்கு வைக்க உள்ளது!!

  • ஆத்மனிர்பர் பாரத் முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட 30 தயாரிப்புகளை பெல் நிறுவனம் “ஏரோ இந்தியா 2021” நிகழ்வின் போது பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெல் நிறுவனம் சிறிய ரக விமானங்கள், ரேடேர்ஸ், சிறப்பு அம்சங்கள் கொண்ட வாகனங்களையும் பார்வைக்கு வைக்க உள்ளது.
  • இதில் கூடுதலாக Coastal Surveillance System, GBMES, Single Combat Vehicle (QRSAM), Weapon Control System ஆகியவையும் இடம் பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

பெல் பற்றி

தலைமையகம்- பெங்களூரு

தலைவர் – டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி

நிறுவப்பட்டது – 1954

மரணங்கள்

பிரபல அமெரிக்க நடிகை சிசிலி டைசன் மரணம்!!

  • அமெரிக்க கருப்பு நடிகை சிசிலி டைசன் தனது 88 வயதில் மரணம் அடைந்துள்ளார்.
  • “சவுண்டர்” என்ற திரைப்படத்தில் பங்குதாரரின் மனைவியாக நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
  • 2013 ஆம் ஆண்டு டோனி விருதை பெற்றுள்ளார்.

நியமனங்கள்

நாசாவின் புதிய செயல் தலைவராக பவ்யா லால் நியமனம்!!

  • அமெரிக்க-விண்வெளி ஏஜென்சியின் செயல் தலைவராக இந்திய அமெரிக்கரான பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • லால் பொறியியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இவரை நாசா குழுமம் இந்த பதவிக்கு தேர்வு செய்துள்ளது.
  • இவர் 2005 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு பகுப்பாய்வு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை நிறுவனத்தில் (Defence Analyses Science and Technology Policy Institute) அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

நாசா பற்றி

தலைமையகம்- வாஷிங்டன், அமெரிக்கா

நிறுவகிக்கப்பட்டது – 1958

நிறுவனர் – டுவைட் டி. ஐசனோவர்

அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸி நியமனம்!!

  • ஜெஃப் பெசோஸுக்குப் பிறகு ஆண்டி ஜாஸி அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் பெசோஸ் ஆண்டி ஜாஸி நிறுவனத்தின் தலைவராக அடுத்து மூன்றாம் காலாண்டில் இருந்து, அதாவது வரும் ஜூலை மாதம் முதல் பதவி வகிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
  • அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் பெசோஸ் இந்த நிறுவனத்தை கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகம் விற்பனை செய்யும் வலைத்தளமான அறிமுகப்படுத்தினார்.

அமேசான் பற்றி

தலைமை நிர்வாக அதிகாரி- ஆண்டி ஜாஸ்ஸி

நிர்வாகத் தலைவர்- ஜெஃப் பெசோஸ்

தலைமையகம்- வாஷிங்டன், அமெரிக்கா

தமிழக செய்திகள்

தமிழகத்தில் மேலும் 5 விமான போக்குவரத்து சேவைகள் அறிமுகம்!!

  • தமிழகத்தில் விமான போக்குவரத்து சேவைகள் விரிவாக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது இன்னும் ஐந்து விமான போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை தகவல் அளித்துள்ளது.
  • ஏற்கனவே இருக்கும் ஏழு விமான நிலையங்களுடன் கூடுதலாக தொடர்ந்து தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர், ராமநாதபுரம், சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் விமான போக்குவரத்து சேவைகள் துவங்க உள்ளது.
  • இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் வழங்க திட்டம்!!

  • தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் புதிதாக வீடு கட்டவோ அல்லது வாங்கவோ அரசு சார்பில் வழங்கப்படும் முன்பணம் தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.
  • முன்பணம் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் இது போலவே வழங்கப்பட்டு வருகின்றது.

Download Tamil Current Affairs 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!