Daily Current Affairs February 25 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs February 25 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs February 25 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 25 பிப்ரவரி 2021

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தேசிய நிகழ்வுகள்

இந்திய கடல்சார் மாநாட்டின் இரண்டாவது பதிப்பை மார்ச் 2 ஆம் தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்!!

  • துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் மார்ச் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை இணையதளத்தில் இந்திய கடல்சார் உச்சி மாநாடு 2021 என்ற பெயரில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் நடத்துகிறது.
  • மார்ச் 2  அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இதை தொடங்கி வைக்கிறார்.
  • சர்வதேச கடல்சார் துறையில் இந்தியாவை முன்னணியில் நிறுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ரூபாய் 20,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.
  • தொடக்க தினமான 2 மார்ச் அன்று ‘மகாராஷ்டிராவில் முதலீட்டு வாய்ப்புகள்’ குறித்த அமர்வு நடைபெறும். 20 நாடுகளில் இருந்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் பற்றி

மத்திய அமைச்சர் – மன்சூக் மண்டாவியா

நிறுவகிக்கப்பட்டது – 1942

தலைமையகம் – புது டெல்லி

பிரதமரின் கிசான் திட்டம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது!!

  • விவசாயிகளின் கௌரவமான, வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டம் இன்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • வேளாண் துறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய அரசு ஏராளமான முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேம்பட்ட பாசனம் முதல் அதிக தொழில்நுட்பம், அதிக கடன், சந்தைகள் முதல் முறையான பயிர் காப்பீடு, மண் வளத்தில் கவனம் செலுத்துவது முதல் இடைத்தரகர்களின் நீக்கம்  வரை அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கியுள்ளன.
  • விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த ஓர் பார்வையை நமோ செயலி மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி ஹார்டுவேர்க்கு உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

  • ஐடி ஹார்டுவேரில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஐடி ஹார்டுவேரில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் மிகப் பெரிய முதலீடுகள் ஈர்ப்பதை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பை  இத்திட்டம் தெரிவிக்கிறது.
  • லேப்டாப்புகள் , டேப்லெட்டுகள், அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் இத்திட்டத்தின்  இலக்கு பிரிவின் கீழ்  இடம் பெற்றுள்ளன.
  • இத்திட்டம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இலக்கு பிரிவின் கீழ் வரும் பொருட்களின் நிகர விற்பனையில் (அடிப்படை ஆண்டு 2019-20)  4 சதவீதம் முதல் 2 சதவீதம் /1 சதவீதம் ஊக்குவிப்பு தொகையை தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு 4 ஆண்டு காலத்துக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டம், நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் சூழல் மேம்பாட்டை அதிகரிக்கும். எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில், இந்தியா உலகளாவிய மையமாக மாறும். இதன் மூலம் ஐடி ஹார்டுவேர் ஏற்றுமதி மையமாக இந்தியா உருமாறும்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

பிரிக்ஸ் நாடுகளின் நிதி மற்றும் மத்திய வங்கி துணைத்தலைவர்களின் முதல் கூட்டத்தை இந்தியா நடத்தியது!!

  • பிரிக்ஸ் நாடுகளின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் துணைத் தலைவர்களின் முதல் கூட்டத்தை காணொலி மூலம் இந்தியா நடத்தியது. நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் செயலாளர் தருண் பஜாஜ், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மைக்கேல் பத்ரா ஆகியோர் இதற்கு தலைமை தாங்கினர்.
  • பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பிரிக்ஸ் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் துணை தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
  • 2021-ம் ஆண்டில் இந்தியாவின் தலைமையில் நடைபெறும் முதல் பிரிக்ஸ் ஒத்துழைப்பு கூட்டம் இதுவாகும். நிதி ஒத்துழைப்பு லட்சியம், சர்வதேச பொருளாதார கண்ணோட்டம், கொவிட்-19-க்கான எதிர்வினை, உள்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி வழங்குதல் உள்ளிட்டவைகளை குறித்து இந்தியா இக்கூட்டத்தின் போது பகிர்ந்து கொண்டது.

மாநில நிகழ்வுகள்

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!!

  • புதுச்சேரியில் தற்போது முதல்வராக பணியாற்றி வந்த நாராயணசாமி விலகியதால் அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • புதுச்சேரியில் 5 காங்கிரஸ் மற்றும் ஒரு திமுக கட்சியினை சேர்ந்த எம்எல்ஏகள் ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையினை இழந்தது. இதன் காரணமாக அவர் தனது பதவியில் இருந்து விலகிக்கொண்டார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கூடிய விரைவில் தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக நிகழ்வுகள்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தபால் நிலையம்

  • பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தபால் நிலையம்” என்ற பெயரில் புதிய தபால் நிலையம் துவங்கப்பட உள்ளது.
  • பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதன் வாயிலாகப் பயனடைவார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக தமிழ் மாநாடு துவங்கியது!!

  • தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்றாவது உலக தமிழ் மாநாடு நாளை துவங்கி தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற உள்ளது.
  • தமிழக அரசின் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நிறுவனம், தமிழ்தாய் அறக்கட்டளை நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்யவுள்ளனர்.
  • தமிழ் வளர்ச்சி, கலை மற்றும் பண்பாடு குறித்து அறிஞர்கள் உரை நிகழ்த்த உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Notification 2021 

நியமனங்கள்

பட்டியலின பிரிவின் தேசிய ஆணைய தலைவராக விஜய் சம்ப்லா நியமனம்!!

  • பட்டியலின பிரிவு தேசிய ஆணையத்தின் தலைவராக விஜய் சம்ப்லா புது டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • விஜய் சம்ப்லா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் 2014ம் ஆண்டு முதல் 19ம் ஆண்டு வரை மத்திய இணை அமைச்சராக இருந்தார். பட்டியல் இனத்தவரின் சமூக பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளின் திட்டமிடலில் தேவையான ஆலோசனையை ஆணையம் வழங்கபடும் என்று தெரிவித்துள்ளார், விஜய் சம்ப்லா.
  • இந்நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார், மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ், பட்டியலின தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தூதரக லிண்டா தாமஸ் தேர்வு!!

  • ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய அமெரிக்க தூதரக லிண்டா தாமஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற சபை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இவரது நியமத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் 78 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
  • 68 வயதாகும் லிண்டா வெளியுறவு துறை பணிகளில் 35 ஆண்டு கால அனுபவம் மிக்கவர். ஆப்பிரிக்கா உட்பட 4 கண்டங்களில் இவர் சேவை புரிந்துள்ளார்.

ஒப்பந்தங்கள்

ஜாதிக்காய் மிட்டாய் தயாரிப்பதற்கான செயல்முறை தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது!!

  • ஜாதிக்காய் மிட்டாய் தயாரிப்பதற்கான செயல்முறை தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கான ஒப்பந்தம் கோவாவில் உள்ள மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி மையம் (ICAR-Central Coastal Agricultural Research Institute (ICAR-CCARI) மற்றும் கோவா மாநில பல்லுயிர் வாரியம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தில் மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி மையம் இயக்குநர் டாக்டர் இ.பி.சாகுர்கர், மற்றும் கோவா மாநில பல்லுயிர் வாரிய உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர் தேசாய் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஜாதிக்காயில் விதை மட்டும் எடுக்கப்பட்டு விதையுறை தோல் பகுதி வீணாக்கப்பட்டு வயல்களில் வீசப்படுகிறது. ஆனால் இதனை பயன்படுத்தி மிட்டாய் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

பிரதமரின் கிசான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விருதுகள்!!

  • பிரதமரின் கிசான் திட்டத்தை மிகச் சிறப்பாகச் அமல்படுத்திய மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விருதுகளை வழங்கினார்.
  • பிரதமரின் கிசான் திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இந்த விருதுகளை வழங்கினார்.
  • தரவுகளை சரிபார்த்தல், விவசாயிகளின் குறைகளை தீர்த்தல், உரிய காலத்தில் நேரடியாக சென்று விவரங்களை சரிபார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பிரிவுகளில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
  • வேளாண்துறையில் ஓர் மைல்கல் முன்முயற்சியாக எதிர்கால தலைமுறையினர் இந்தத் திட்டத்தை நினைவு கூர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜிற்கு ஊழல் தடுப்பு விருது!!

  • அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியில் தற்போது புதிதாக “ஊழல் தடுப்பு சாம்பியன்” என்ற விருதினை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவினை சேர்ந்த சமூக ஆர்வலரான அஞ்சலி பரத்வாஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது இவர் உட்பட 12 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • அஞ்சலி பரத்வாஜ் மனித உரிமை இயக்கத்தில் தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் சேவையாற்றி வருகிறார். இவர் டெல்லியில் “சாங்தான்” என்ற அமைப்பினை நிறுவி மக்களுக்கு தங்களது உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!