Daily Current Affairs February 20, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 20, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

ஏவுகணைகளான ‘ஹெலினா’ மற்றும் ‘துருவாஸ்திரா’ வெற்றிகரமாக சோதனை!!

  • ஹெலினா மற்றும் துருவாஸ்திரா ஏவுகணை அமைப்புகளின் கூட்டு சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே இந்த ஏவுகணை அமைப்புகள் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன என்பது கூடுதல் சிறப்பு.
  • உலகில் உள்ள மிகவும் நவீன பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும். நம் நாட்டின் படைகளில் இணைக்கப்படுவதற்கு இந்த ஏவுகணை அமைப்புகள் தற்போது தயாராக உள்ளன.

தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் 3.0-டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்!!

  • தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ்0-ஐ மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு. அஷ்வினி குமார் சௌபே மற்றும் பிகார் சுகாதார அமைச்சர் திரு. மங்கல் பாண்டே ஆகியோரும் காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
  • கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தின் போது தடுப்பு மருந்துகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மீது இது கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே போல் இவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு சுற்றில் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சௌரியாஞ்சலி” நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!!

  • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகத்தில் நடத்தப்பட்ட ‘சௌரியாஞ்சலி’ நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
  • இந்நிகழ்ச்சியில் வங்காளத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா மரியாதை செலுத்தினார். வங்காள புரட்சியாளர்களின் அவர் தொடங்கி வைத்தார்.

இந்திய கடலோர காவல் படையில் புதிய கப்பல் சேர்ப்பு!!

  • இந்திய கடலோர காவல் படையில் சி-453, என்ற கப்பல், சென்னையில் நேற்று இணைக்கப்பட்டது.
  • கடலோர காவல் படை பயன்பாட்டுக்காக, எல் அண்ட் டி நிறுவனம் உருவாக்கிய 17வது கப்பல் சி-453. இது எதிரிகளை இடைமறிக்கும் படகாக செயல்படும்.
  • இதன் நீளம்80 மீட்டர். எடை 105 டன். இது 45 நாட்ஸ் வேகத்தில் செல்லும் திறன் படைத்தது.
  • கண்காணிப்பு பணி, ரோந்து பணி, தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு இந்த கப்பல் பயன்படுத்தப்படும்.
  • இதில் நவீன நேவிகேஷன் மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் உள்ளன. கடலில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள, மிக குறைவான நேரத்தில் விரைந்து செயல்படும் வகையில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

மின் எரிபொருளுக்கு’ மாறும் பிரச்சாரத்தை மத்திய போக்குவரத்து அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

  • மின்சார வாகனம், பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு, மின் அடுப்புகள் மூலம் சமையல் செய்வது போன்றவற்றின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘மின்சாரத்துக்கு மாறுவோம்’ பிரச்சாரத்தை, மத்திய மின்துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் முன்னிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
  • பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதி செலவு ரூ.8 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கு மாற்று, மின்சார எரிபொருள். வழக்கமான எரிபொருளுடன் ஒப்பிடுகையில் மின்சார எரி பொருள் விலை மலிவானது. காற்று மாசும் குறைகிறது என்று இந்த பிரச்சாரத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பிரச்சாரம் மின்சார வாகனங்கள் துறைக்கு நம்பிக்கையை அதிகரிக்கும்.

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார தொழில்நுட்ப போட்டியின் (I-ACE) நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது!!

  • அடல் புதுமை திட்டம், நிதி ஆயோக், காமன்வெல்த் அறிவியல் தொழில் ஆராய்ச்சி அமைப்பு, ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை ஆகியவை நடத்திய இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார தொழில்நுட்ப போட்டி (I-ACE) நிறைவடைந்தது.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 8 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
  • இந்த தொழில்நுட்ப போட்டி கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைப்பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 72 குழுவினர், 4 பிரிவு போட்டியில் பங்கேற்றனர்.

முக்கிய தினங்கள்

உலக சமூக நீதி தினம் 2021!!

  • சமூக நிதியினை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக “உலக சமூகநீதி தினம்” ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20 ஆம் தேதி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
  • கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “A Call for Social Justice in the Digital Economy” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா மற்றும் எதியோப்பியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன!!

  • இந்தியா மற்றும் எதியோப்பியா நாடுகளுக்கு இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • இந்த இரு ஒப்பந்தங்களும் தோல் பொருட்களை உற்பத்தியினை அதிகரிக்க கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் பங்கேற்றார். அதே போல் எதியோப்பியா நாட்டின் சார்பில் அந்த நாட்டின் பிரதமர் பங்கேற்றார்.
  • இரு நாடுகளுக்கு மத்தியில் கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் தொழிநுட்ப துறைகளில் ஒத்துழைப்பு வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Notification 2021 

நியமனங்கள்

இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல செயல் இயக்குனராக சைலேந்திரா நியமனம்!!

  • சைலேந்திரா அவர்கள் இந்தியன்ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல செயல் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
  • இந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பாக, திரு. சைலேந்திரா, கர்நாடக மாநிலத்தில் LPG குழுவின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றி வந்தார்.
  • ஹைதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்த இயந்திரவியல் பொறியாளரான திரு. சைலேந்திரா, LPG பாட்லிங் பிளான்ட்கள், LPG செயலாக்கங்கள், எஞ்சினியரிங் செயல்திட்டங்கள், ஆட்டோ LPG, வழங்கல் வழிமுறை மேலாண்மை, மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை உள்ளிட்ட பலதரப்பட்ட துறைகளில் கடந்த முப்பது ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செம்மையாகப் பணியாற்றிய பழுத்த அனுபவம் மிக்கவராவார்.

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!