Daily Current Affairs February 19, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs February 19, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs February 19, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Daily Current Affairs February 19, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 19 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

இந்தியன் இன்ஸ்டிடியூட் கொரோனா நோயாளிகளுக்கான “அனம்நெட்” என்ற கருவியினை தயாரித்துள்ளது!!

  • பெங்களூரின் இந்தியன் இன்ஸ்டிடியூட் கொரோனா நோயாளிகளின் நுரைஈரலில் உள்ள நோய் தாக்கத்தினை கண்டறிய ஒரு புதிய வகை கருவியினை கண்டுபிடித்துள்ளது. அதற்கு “அனம்நெட்” என்று பெயரிட்டுள்ளது.
  • இந்த கருவி நோயாளியின் நுரைஈரலில் ஏற்பட்டுள்ள அசாதாரணங்கள் குறித்து எளிமையாக கண்டுபிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- சிங்கப்பூர் சிஇஓ மன்றத்தில் மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் உரை!!

  • மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு. பியூஷ் கோயல், இந்தியா- சிங்கப்பூர் சிஇஓ மன்றத்தில் உரை நிகழ்த்தினார்.
  • இந்தியா, சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு தரப்பிலும் வர்த்தகங்களை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்த அவர்,  நமது வலுவான கூட்டணி மேலும் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
  • தற்சார்பு அடைவதற்கு உதவும் வகையிலும், சர்வதேச அளவில் தடம் பதிப்பதற்கு ஏதுவான வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த கூட்டணி உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு மென்பொருள் சார்ந்த வானொலி தொலைத்தொடர்பு கருவி உருவாக்கம்!!

  • அனைத்து இராணுவ செயல்பாடுகளுக்கும் தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம்.  அந்த வகையில் போரின் போது இந்திய ராணுவ வீரர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள சி என் ஆர் என்று அழைக்கப்படும் கம்பாட் நெட் ரேடியோ என்ற வானொலி சாதனத்தை பயன்படுத்துவர்.
  • பாரம்பரிய சி என் ஆர் கருவியின் வாயிலாக குரல் வழியான தகவல்களை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும்.
  • மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதுபோன்ற மிக உயரிய அதிர்வெண் கொண்ட மென்பொருள் வானொலியின் பயன்பாடு இந்திய ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்திய ராணுவம் பற்றி

தலைவர் – ராம் நாத் கோவிந்த்

நிறுவகிக்கப்பட்டது – 1895

தலைமையகம் – புது டெல்லி

முதலீடு செய்வதில் சிறந்து விளங்கும் பொதுத்துறை நிறுவனத்துக்கான விருதை டிரைஃபெட் வென்றது!!

  • உலக தலைமைத்துவ அமைப்பு மற்றும் விருதுகளின் 19-வது சர்வதேச பதிப்பு மற்றும் நான்காவது இந்திய பதிப்பில் நிர்வாக இயக்குநர் பிரவிர் கிருஷ்ணா தலைமையிலான இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பு (டிரைஃபெட்) நான்கு விருதுகளை வென்றது.
  • மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வருடத்திற்கான வர்த்தக தலைமைக்கான (பிஸினஸ் லீடர்) விருதை தி எக்கனாமிக் டைம்ஸ் வழங்கியது.
  • சிறந்த தலைமை செயல் அதிகாரி, இவ்வருடத்தின் சிறந்த வியாபார நிர்மாணிப்பாளர் (பிராண்ட் பில்டர்) மற்றும் சிறந்த தொழில்முனைவோர் ஆகிய மூன்று விருதுகளை பிரவிர் கிருஷ்ணா வென்றார்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

பழங்குடியினர் அமைச்சகம் பற்றி

நிறுவகிக்கப்பட்டது – 1999

தலைவர் – அர்ஜுன் முண்டா

தலைமையகம் – புது டெல்லி

மாநில நிகழ்வுகள்

கேரளாவில் “உற்சவம் 2021″ திருவிழா நடைபெற்றது!!

  • கேரளா மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் “உற்சவம் 2021” திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த திருவிழா தொடர்ந்து 7 நாட்கள் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்தின் கலாச்சாரம், பண்பு மற்றும் வகைவகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  • இந்த விழா மூலமாக பழங்கால பழக்கவழக்கங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் பின்பற்றப்பட்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா பற்றி

தலைநகரம் – திருவனந்தபுரம்

முதல்வர் – பினராயி விஜயன்

ஆளுநர் – ஆரிப் முஹமத் கான்

சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா இந்தோனேஷியாவின் “PASSEX” என்ற கடற்படை பயிற்சி நடைபெற்றது!!

  • இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் கடற்படை “PASSEX” என்ற பெயரில் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி அரபி கடலில் நடைபெற்றது. இந்த பயிற்சி மூலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான ஒற்றுமை பலம் பெரும் என்று நம்பப்படுகிறது.
  • இந்தியாவின் கப்பலான “INS Talwar” மற்றும் இந்தோனேஷியாவின் “KRI Bung Tomo” இந்த பயிற்சியில் ஈடுபட்டது.

இந்தோனேஷியா பற்றி

தலைநகரம் – ஜகார்த்தா

நாணயம் – ரூபாய்

அதிபர் – ஜோகோ விடடோ

Download TNPSC Notification 2021 

மரணங்கள்

தேசிய விருது பெற்ற மலையாள இசை அமைப்பாளர் ஐசக் தாமஸ் மரணம்!!

  • பழம்பெரும் மலையாள இசை அமைப்பாளராக ஐசக் தாமஸ் தனது 72 வது வயதில் மரணம் அடைந்துள்ளார். மலையாள திரைப்படங்கள் பலவற்றிற்கும் இவர் இசை அமைத்துள்ளார். இவர் சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.
  • மாரடைப்பு காரணமாக இவர் மரணம் அடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள்

இலங்கை வீரர் தமிகா பிரசாத் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!!

  • இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தமிகா பிரசாத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • இவர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் 25 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் விளையாடி உள்ளார்.

பிலிப் ஐலண்ட் ட்ரோபியை அங்கிதா ஜோடி வென்றுள்ளது!!

  • டென்னிஸ் போட்டியான பிலிப் ஐலண்ட் ட்ரோபியை இந்தியாவின் அங்கிதா மற்றும் ரஷ்யாவின் காமிலா வென்றுள்ளனர். இவர்கள் இருவரும் பெண்கள் இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றுள்ளனர்.
  • அங்கிதா முதன் முறையாக இந்த போட்டியில் வென்றுள்ளார்.
  • இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
  • இந்தியாவில் இருந்து சானியா மிர்ஷாவிற்கு பிறகு மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் 100 இடங்களுக்குள் முன்னேறும் இரண்டாவது வீராங்கனையாக அங்கிதா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

மனித உரிமைகள் பேரவைவின் ஆலோசனைக் குழுவின் தலைவராக அஜய் மல்ஹோத்ரா நியமனம்!!

  • இதன் மூலமாக மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை அஜய் மல்ஹோத்ரா பெற்றுள்ளார்.
  • மல்ஹோத்ரா முன்னர் ரஷ்யா, குவைத், தூதர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ருமேனியாவின் துணை நிரந்தர பிரதிநிதியாக கடந்த 003 முதல் 2005 வரை பணியாற்றியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவை பற்றி

நிறுவகிக்கப்பட்டது – 2006

தலைவர் – நசாத் ஷாமின்

தலைமையகம் – ஸ்விசர்லாந்து

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!