Daily Current Affairs February 18, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs February 18, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs February 18, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Daily Current Affairs February 18, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

இந்தியா, மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!!

  • இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல் முறையாகும்.
  • வரைமுறைக்கு உட்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், சரக்கு வர்த்தகம், உற்பத்தி செய்யப்படும் இடத்தின் சட்டங்கள், சேவைகள் வர்த்தகம், வணிகத்தின் தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவர ஆரோக்கிய நடவடிக்கைகள், நபர்களின் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், சுங்க நடைமுறைகள் மற்றும் இதர துறைகளில் ஒத்துழைப்பு இடம் பெறுகின்றன.
  • 11 விரிவான சேவைப் பிரிவுகளில் இருந்து 95 துணைப்பிரிவுகளில் சேவைகளை இந்தியா வழங்கவிருக்கிறது.

தொலை தொடர்பு உற்பத்தித்துறையை ஊக்குவிக்க ரூ.12,195 கோடி செலவில் ஊக்குவிப்பு திட்டம் அறிமுகம்!!

  • தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்களுக்காக ரூ.12,195 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியாவில் தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளை  அதிகரிக்க, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் வழிவகுக்கும் மற்றும்  உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நிதி உதவி அளிக்கும்.
  • உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், இந்தியாவில் தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

விலங்குகளின் நல்வாழ்வு, பாதுகாப்பிற்கான விருதுகள் வழங்கிய இந்திய விலங்குகள் நல வாரியம்!!

  • 1960-ஆம் ஆண்டின் விலங்குகளைக் கொடுமைப் படுத்துவதற்கு எதிரான சட்டத்தின் 4-ஆவது பிரிவின் கீழ் விலங்குகளின் பாதுகாப்பு, நல்வாழ்விற்காக அமைக்கப்பட்டது தான் இந்திய விலங்குகள் நல வாரியம்.
  • இந்த அமைப்பு விலங்குகள் நல்வாழ்வுத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான 14 பிராணி மித்ரா விருதுகளையும், ஜீவ்தயா விருதுகளையும் வழங்கியது.
  • வசந்த பஞ்சமி புனித தினத்தன்று மத்திய கால்நடை பராமரிப்பு, மீன் மற்றும் பால்வளத் துறை அமைச்சர்‌ கிரிராஜ் சிங் இந்த விருதுகளை வழங்கி, அனைத்து விலங்கு பிரியர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தியாவின் சொந்த “Sandes” என்ற ஆப் அறிமுகம்!!

  • வாட்ஸ்அப்பிற்கான இந்தியாவின் சொந்த மாற்று ஆப்பை, தேசிய தகவல் மையம் சாண்டெஸ் என்கிற பெயரின் கீழ் அறிமுகப்படுத்தி உள்ளது.
  • இந்த புதிய தளம் அரசாங்க அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் போன்ற தகவல்தொடர்பு பயன்பாட்டை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஏற்கனவே உள்ள Government Instant Messaging System-இன் (GIMS மேம்பாடு ஆகும்.
  • இந்த ஆப்பை அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட பயனர்கள் என இருவருமே பயன்படுத்தலாம்.

மெட்ராஸ் ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இ-பைக்!!

  • மெட்ராஸ் ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இ-பைக் ஒன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனமான பை பீம் (Pi Beam) நிறுவனம் மலிவு விலையிலான இ-பைக் ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது
  • பைமோ எனும் பெயரில் இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 30 ஆயிரம் ஆகும்.
  • இதனை உருவாக்கியிருக்கும் பை பீம் நிறுவனமானது மெட்ராஸ் ஐஐடி-க்கு சொந்தமான நிறுவனமாகும்.

ஐஐடி மெட்ராஸ் பற்றி

நிறுவகிக்கப்பட்டது – 1959

தலைவர் – பவன் குமார்

ஐந்து அகில இந்திய ஆய்வுகளுக்கான கேள்வி பதிலுடன் கூடிய தகவல் கையேட்டை மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் வெளியிட்டுள்ளார்!!

  • மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு. சந்தோஷ் குமார் கங்வார் சண்டிகரில் உள்ள தொழிலாளர் வாரியம் சார்பாக நடைபெறும் ஐந்து அகில இந்திய ஆய்வுகளுக்கான கேள்வி பதிலுடன் கூடிய தகவல் கையேட்டையும், மென்பொருள் செயலிகளையும் வெளியிட்டுள்ளார்.
  • 6 மாதகால கள ஆய்வு உட்பட 7-8  மாதங்களில் இந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படும்.
  • தொழிலாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்,
  • புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய அகில இந்திய ஆய்வு
  • வீட்டு தொழிலாளர்கள் பற்றிய அகில இந்திய ஆய்வு
  • தொழில்முறையாளர்களால் உருவாக்கப்படும் வேலை வாய்ப்புகள் பற்றிய அகில இந்திய ஆய்வு
  • போக்குவரத்துத் துறையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் பற்றிய அகில இந்திய ஆய்வு
  • காலாண்டு நிறுவன அடிப்படையிலான அகில இந்திய வேலைவாய்ப்பு ஆய்வு

Download TNPSC Notification 2021 

சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான புதிய ஒப்பந்தம்!!

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான விண்வெளி கூட்டுறவை விரிவுபடுத்துவதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 2012-ஆம் ஆண்டு முதல் விண்வெளி ஆராய்ச்சி துறையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
  • இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சி (ASA) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) இடையில் புதிய விண்வெளி தொழில்நுட்பம், புதிய முயற்சிகள், கல்வி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் விரிவான கவனத்தை செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா பற்றி

தலைநகரம் – கான்பெரா

பிரதமர் – ஸ்காட் மாரிசன்

சிக்கிம் மாநிலத்தில் உள்ள மாணவிகளுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டத்தினை முதல்வர் துவக்கி வைத்தார்!!

  • சிக்கிம் மாநிலத்தின் முதல்வரான தமாங் அந்த மாநிலத்தில் உள்ள மாணவிகளுக்கு இலவசமாக பால் வழங்கும் புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார்.
  • இந்த திட்டம் மூலமாக ஒரு நாளிற்கு 1500 மாணவிகள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவிக்கு 200 மில்லி பால் அரசு சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாணவ – மாணவிகள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிக்கிம் பற்றி

முதல்வர் – பிரேம் சிங் தமாங்

தலைநகரம் – கேங்டாக்

ஆளுநர் – கங்கா பிரசாத்

மரணங்கள்

ஆல் இந்தியா ரேடியோவின் பதிப்பாசிரியர் பிரகாஷ் சந்த் மரணம்!!

  • ஆல் இந்தியா ரேடியோவின் முன்னாள் பதிப்பாசிரியராக பணியாற்றிய பிரகாஷ் சந்த் ஜெயின் தனது 83 வயதில் மரணம் அடைந்துள்ளார்.
  • இவர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிகிறது.

முக்கிய நாட்கள்

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினம் இன்று!!

  • ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர்.
  • இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி 1836 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!