Daily Current Affairs February 14 & 15, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 14 & 15, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 14 & 15 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மகோத்சவத்தின் 11-வது பதிப்பு கூச் பெகாரில் நடைபெற்றது!!

  • ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மகோத்சவத்தின் 11-வது பதிப்பை மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெகார் அரண்மனையில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் முன்னிலையில் நடைபெற்றது.
  • பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 28 வரை ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மகோத்சவத்தின் 11-வது பதிப்பு நடைபெறும்.
  • ஒரு மாநிலத்தின் நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகள், இசை, உணவுகள் மற்றும் கலாச்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துரைப்பதில் ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மகோத்சவ் முக்கிய பங்கு வகிக்கிறது.

பஞ்சாப் மாநிலத்திற்கு கூடுதலாக ரூ.1,516 கோடி கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல்!!

  • மத்திய நிதியமைச்சகத்தின், செலவினத்துறை அறிமுகப்படுத்திய “ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு” சீர்திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட 13-வது மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது.
  • இதனால், வெளிச்சந்தையில் ரூ.1,516 கோடி கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட பஞ்சாப் தகுதி பெற்றுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, தமிழ்நாடு, திரிபுரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 12 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை நிறைவு செய்துள்ளன.

இந்திய பழங்குடி மக்கள் கொண்டாடும் ‘ஆதி மகோத்சவம்’ வெற்றிகரமாக நிறைவு!!

  • புதுதில்லியில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த பழங்குடியின கைவினை கலைஞர்கள் பங்கேற்ற ‘ஆதி மகோத்சவம்’ விழா நேற்று நிறைவடைந்தது.
  • புது டெல்லி மார்க்கெட் சந்தையில், ‘ஆதி மகோத்சவம்’ விழா கடந்த 1 ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. நிறைவு விழாவுக்கு இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு அமைப்பின்(TRIFED) தலைவர் ரமேஷ் சந்த் மீனா தலைமை வகித்தார்.
  • ஆதி மகோத்சவத்தில் சிறப்பாக செயல்பட்ட 3 பழங்குடியின கைவினைக் கலைஞர்கள், நிறைவு விழாவில் பாராட்டப்பட்டனர்.
  • இந்த விழாவில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டு அரிய வகை கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், இயற்கை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

மௌ – ஆனந்த் விகார் இடையே இரு வாரங்களுக்கு ஒரு முறை இயங்கும் சிறப்பு ரயில் சேவை துவக்கி வைப்பு!!

  • மௌ – ஆனந்த் விகார் இடையே இரு வாரங்களுக்கு ஒரு முறை இயங்கும் சிறப்பு ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
  • தேசிய தலைநகருடன் மௌ பகுதியை இணைப்பதுடன், பூர்வாஞ்சலில் சமூக பொருளாதார வளர்ச்சியையும் இந்தத் திட்டம் ஏற்படுத்தும். மேம்படுத்தப்பட்ட இணைப்பின் வாயிலாக இந்தப் பகுதியில் உள்ள தொழில் துறைகள் ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் ஆய்வு மாதிரித் திட்டம் 10 நகரங்களில் துவக்கம்!!

  • நகர்ப்புற ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் ஆய்வு (பே ஜல் சர்வேக்ஷன்) மாதிரித் திட்டத்தை, மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு துர்கா ஷங்கர் மிஸ்ரா தொடங்கி வைத்தார்.
  • முதற்கட்டமாக மதுரை, ஆக்ரா, பத்லாபூர், புவனேஷ்வர், சுரு, கொச்சி, பாட்டியாலா, ரோட்டக், சூரத், தும்கூர் ஆகிய 10 நகரங்களில் குடிநீர் ஆய்வு  மாதிரித் திட்டத்தை மேற்கொள்ள அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பயனாளிகளின் பதில்கள், திட்டத்தின் வளர்ச்சி மற்றும் பயன் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்நுட்பத்தின் வாயிலாக இந்த இயக்கம் கண்காணிக்கப்படும்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

வான் இலக்கை தாக்கும் தொலை தூர ஏவுகணைகள் கடற்படைக்கு அனுப்பி வைப்பு!!

  • ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) கூட்டு முயற்சியில் உருவாக்கிய வான் இலக்கை தாக்கும் தொலை தூர ஏவுகணைகள் (Long Range Surface to Air Missiles (LRSAM)), ஐதராபாத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்திலிருந்து,  நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
  • கடற்படை பயன்பாட்டுக்காக மேற் பரப்பிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகளை டிஆர்டிஓ, இஸ்ரேல் நாட்டின் ஐஏஐ நிறுவனம் உட்பட பல நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்தது.
  • இந்திய கடற்படையின் சமீபத்திய போர்க்கப்பல்களில் இருந்து, எதிரி நாட்டு போர் விமானம் உட்பட வான் இலக்குகளை தாக்கும் விதத்தில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சணல் விதைகள் விநியோக நிகழ்ச்சியை மத்திய ஜவுளி அமைச்சர் தொடங்கி வைத்தார்!!

  • சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விநியோக நிகழ்ச்சி மற்றும் சணல் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பட்டறையை மத்திய ஜவுளி அமைச்சர் ஸ்மிரிதி ராணி தொடங்கி வைத்தார். இதனை காணொளி காட்சி வாயிலாக மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்.
  • 10,000 குவின்டால் சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள் விநியோகிக்கப்படுவதன் மூலம், சுமார் 5 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம்!!

  • பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றத்தின் நீதிபதியான திரு. புலிகோரு வெங்கட சஞ்சய் குமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.
  • இதுகுறித்த அறிவிப்பை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை நேற்று வெளியிட்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2010-ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
  • சில தினங்களுக்கு முன்பு, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக திருமதி. புஷ்பா விரேந்திர கணேடிவாலாவை இந்திய குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

Download TNPSC Notification 2021 

விருதுகள்

அறிவியல் துறையில் சர்வதேச மகளிர் மற்றும் இளம் பெண்கள் தினம் 2021-க்கான சிறந்த பெண்கள் விருதுகள் அறிவிப்பு!!

  • அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக தேசிய அறிவியல் கல்வி நிலையங்களில் உதவித்தொகை பெற்றுள்ள 4 பெண்களுக்கு, அறிவியல் துறையில் சர்வதேச மகளிர் மற்றும் இளம் பெண்கள் தினம் 2021-க்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதுகள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 40 வயதிற்குட்பட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

விருதுகளை பெற்றவர்கள்

டாக்டர் ஷோபனா கபூர்

டாக்டர் அந்தரா பானர்ஜி

டாக்டர் சோனு காந்தி

டாக்டர் ரித்து குப்தா

மின்னணு-ஆளுகை விருதை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் வென்றுள்ளது!!

  • பல்வேறு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் மூலம் பழங்குடியினருக்கு ஆதரவு அளித்ததற்காக இந்திய கணினி சங்கத்தின் மின்னணு-ஆளுகை விருதை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் வென்றுள்ளது.
  • 18-வது இந்திய கணினி சங்க சிறப்பு ஆர்வக் குழு மின்னணு-ஆளுகை விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட இந்த விருதை, உத்தரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத்திடம் இருந்து பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சக இணை செயலாளர் டாக்டர் நவல்ஜித் கபூர் பெற்றுக்கொண்டார்.
  • இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட அயல்நாட்டு தூதரகங்களில் இருந்து 120-க்கும் அதிகமான அதிகாரிகளும், வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

உலக வர்த்தக அமைப்பிற்கு முதல் பெண் தலைவர் நியமனம்!!

  • உலக வர்த்தக அமைப்பிற்கு முதல் பெண் தலைவராக நிகோஷி ஒகோஜோ இவேளா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த நியமனம் மூலமாக ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் பெண் தலைவராக நிகோஷி மாறியுள்ளார். இவரது நியமன ஒப்புதலை அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் உறுதி செய்துள்ளார்.

Download CA Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!