Daily Current Affairs February 13, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
தினசரி நடப்பு நிகழ்வுகள் - 13 பிப்ரவரி 2021
தினசரி நடப்பு நிகழ்வுகள் - 13 பிப்ரவரி 2021

Daily Current Affairs February 13, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் 13 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

ADTOI கண்காட்சியின் 10 வது ஆண்டு விழாவினை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்!!

  • இந்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை மத்திய இராஜாங்க அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல் இந்திய உள்நாட்டு சுற்றுலா நடத்துநர்கள் சங்கத்தின் 10வது ஆண்டு விழாவினை திறந்து வைத்தார்.
  • இந்த கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த கண்காட்சிக்கான கருப்பொருள் “Domestic Tourism – Hope for the revival- Dekho Apna Desh” என்பதே ஆகும்.

சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் பற்றி

சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் – ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல்

செயலாளர் – ஸ்ரீ அரவிந்த் சிங்

நிறுவப்பட்டது – 1967

ஐந்து மாநிலங்களுக்கு 3,113.05 கோடி ரூபாய் வழங்க HLC ஒப்புதல் அளித்துள்ளது!!

  • மத்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு (HLC – High Level Committee) மத்திய பிரதேசங்கள் உட்பட 5 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியாக 3,113.05 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த நிதி (NDRF -Central Assistance under the National Disaster Response Fund) கீழ் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 2020 ஆம் ஆண்டு மழை, வெள்ளம், புயல் போன்ற காரணங்களால பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட உள்ளது.

நிதியினை பெற இருக்கும் ஐந்து மாநிலங்கள்

ஆந்திரா

பீகார்

தமிழ்நாடு

புதுச்சேரி

மத்தியப் பிரதேசம்

மாநில நிகழ்வுகள்

தமிழக அரசு முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!!

  • தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து குறை தீர்க்கும் அமைப்புகளையும் ஒருங்கிணைப்பதற்கும், குறைகளை விரைவாக தீர்ப்பதற்கும் ஒரு கண்காணிப்பு மையம் திறந்து வைக்கப்பட்டது.
  • இத்துடன் முதல்வரின் ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் மேலாண்மை திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தமிழக மின்-ஆளுமை நிறுவனம் உருவாக்கிய “ஒருங்கிணைந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொது குறை தீர்க்கும் சி.எம். ஹெல்ப்லைன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (Integrated and Inclusive Public Grievance CM Helpline Management System) அமைப்பினை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழகம் பற்றி

தலைநகரம் – சென்னை

முதல்வர்: எடப்பாடி கே.பழனிசாமி

ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

நியமனங்கள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் லிஸ்டோசெல்லா நியமனம்!!

  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் லிஸ்டோசெல்லா நியமனம் செய்ய உள்ளது.
  • இவரது பதவிக்காலம் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது செயல்பட்டு வரும் புட்செக் என்பவருக்கு பதில் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் பற்றி

நிறுவனர் – ரத்தன் டாடா

நிறுவகிக்கப்பட்டது – 1945

தலைமை நிர்வாக அதிகாரி புட்செக்

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக மல்லிகார்ஜுனா கார்கே பரிந்துரை!!

  • மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக தற்போது காங்கிரஸ் முத்த தலைவர் குலாம் நபி ஆஸாதின் அவர்களின் பதவி காலம் வரும் 15 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
  • இதனால் இந்த பதவிக்கு மல்லிகார்ஜுனா கார்கே பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கர்நாடகாவை சேர்ந்த கார்கே தலித் தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை செயலாற்றியுள்ளார்.

மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக புஷ்பா வீரேந்திர கணேடிவாலா நியமனம்!!

  • இந்தியாவின் குடியரசு தலைவர் புஷ்பா வீரேந்திர கணேடிவாலா என்பவரை மும்பையின் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பணியாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • இவர் இந்த பதவியில் அடுத்த 1 ஆண்டு செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் ஆரம்பித்துள்ளது.
  • நீதிபதி புஷ்பா மாவட்ட நீதிபதியாக 2007 ஆம் ஆண்டு சேர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு நீதிமன்ற கிளைகளில் நீதிபதியாக செயலாற்றியுள்ளார்.

விருதுகள்

Award of Appreciation என்ற விருதினை மத்திய பழங்குடி விவகார அமைச்சகம் பெற்றுள்ளது!!

  • மத்திய அரசின் சிறந்த அமைச்சகமாக மத்திய பழங்குடி விவகாரத்துறை அமைச்சகம் தேர்வாகியுள்ளது. கூடுதலாக, Award of Appreciation என்ற விருதினையும் பெற்றுள்ளது.
  • இந்த விருது மத்திய பழங்குடி விவகாரத்துறை அமைச்சகத்தின் “Performance Dashboard Empowering Tribals Transforming India through various ICT initiatives” செயல்படுத்திய திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதினை உத்தரப்பிரதேச முதல்வர் ஸ்ரீ யோகி ஆதித்யநாதிடம் இருந்து பழங்குடி விவகார அமைச்சின் இணைச் செயலாளர் டாக்டர் நவல்ஜித் கபூர் பெற்றார்.

பழங்குடி விவகார அமைச்சகம் பற்றி

மத்திய அமைச்சர்- ஸ்ரீ அர்ஜுன் முண்டா

மாநில அமைச்சர் – ரேணுகா சிங் சாருதா

துவக்கப்பட்டது – 1999

93 வது ஆஸ்கார் விருதுகளுக்கான முதல் 10 படங்களில் ‘பிட்டு’ தேர்வு செய்யப்பட்டுள்ளது !!

  • 93 வது ஆஸ்கார் விருதுகளுக்கான லைவ் ஆக்சன் குறும்பட பிரிவின் கீழ் முதல் 10 படங்களில் குறும்படம் ‘பிட்டு’ பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்த குறுப்படம் பரிந்துரை பட்டியலில் மொத்தமாக 170 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் “பிட்டு” திரைப்படமும் ஒன்று.
  • இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களான ஸ்ரேயா மற்றும் கரிஷ்மா தேவ் துபே ஆகியோர் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமானவர்கள்.
  • அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் சமீபத்தில் 93 வது அகாடமி விருதுகளுக்கான ஒன்பது பிரிவுகளில் குறுகிய பட்டியல்களை அறிவித்தது.

Download TNPSC Notification 2021 

முக்கிய நாட்கள்

உலக வானொலி தினம் 2021!!

  • உலக வானொலி தினம் உலகளவில் பல நாடுகளில் ஆண்டுதோறும் பிப்ரவரி 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • கடந்த 2011 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் வழிமொழியப்பட்டு இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • யுனெஸ்கோவின் கூற்றுப்படி, வானொலி மனிதகுலத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகம் என்றும் ஜனநாயக சொற்பொழிவுக்கான தளமாகவும் கருதப்படுகிறது.
  • உலக வானொலி தினத்தின் கருப்பொருள் “New World, New Radio”

Download CA Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!