Daily Current Affairs February 12, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 12, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 12 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

அம்ருத் திட்டத்தின் கீழ், ரூ.78,910 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாடு!!

  • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவாகரத்துறை இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி மக்களவையில் 78,910 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து கூறினார்.
  • பசுமை வளாகம் மற்றும் பூங்கா துறையில், மாநிலங்கள் 2,538 திட்டங்களை ரூ.1,577.83 கோடி மதிப்பில் மேற்கொண்டன. இவற்றில் ரூ.1000.96 கோடி மதிப்பிலான 1776 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
  • இதன் மூலம் அம்ருத் திட்டத்தின் கீழ், 3,500 கோடி ஏக்கரில் பசுமை வளாகம் மற்றும் பூங்காங்கள் உருவாகின.
  • இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ரூ.81,226 கோடி மதிப்பிலான அம்ருத் திட்டங்களை மேற்கொண்டன. மத்திய உதவிக்கு மேல் மேற்பட்ட செலவை மாநிலங்கள் ஏற்கின்றன.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் பற்றி

மத்திய அமைச்சர் – ஹாதீப் சிங் பூரி

நிறுவப்பட்டது – 1952

செயலாளர் – துர்கா ஷங்கர் மிஸ்ரா

பல்முனை செயல்பாடுகள் குறித்து இந்திய ராணுவத்தின் தேசிய கருத்தரங்கம்!!

  • “திவ்ய-திருஷ்டி 2021” என்னும் தலைப்பில், பல்முனை செயல்பாடுகள் மற்றும் எதிர்கால சிக்கல்கள் குறித்த இந்திய ராணுவ இணைய கருத்தரங்கை தரைவழி போர்முறை கல்விக்கான மையம் (Centre for Land Warfare Studies (CLAWS) நடத்தியது.
  • ராணுவ தலைமை தளபதி ஜெனரல் நரவாணே, துணைத் தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் சி பி மொகந்தி மற்றும் இதர உயரதிகாரிகள் இணைய கருத்தரங்கில் பங்கேற்றனர்.
  • துவக்க உரை ஆற்றிய தலைமை தளபதி, எதிர்காலத்தில் தேச பாதுகாப்புக்கு எதிராக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் குறித்து பேசினார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பற்றி

தலைமையகம் – புது டெல்லி

நிறுவப்பட்டது – 1947

மத்திய அமைச்சர் – ராஜ் நாத் சிங்

அழுத்தமூட்டப்பட்ட எரிவாயுவில் (CNG) இயங்கும் நாட்டின் முதல் டிராக்டர் அறிமுகம்!!

  • அழுத்தமூட்டப்பட்ட எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட நாட்டின் முதல் டீசல் டிராக்டரை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார்.
  • ராவ்மத் டெக்னோ சொல்யூஷன்ஸ் மற்றும் டொமசெட்டோ அக்கில் இந்தியா ஆகியவற்றால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த டிராக்டர் செலவுகளை குறைப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த உதவுவதோடு, ஊரக இந்தியாவில் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலமாக வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பற்றி

மத்திய அமைச்சர் – ஸ்ரீ நிதின் ஜெய்ராம் கட்கரி

மாநில அமைச்சர்- வி.கே. சிங்

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா-ஆஸ்திரேலியோ மறுசுழற்சி பொருளாதார போட்டி தொடக்கம்!!

  • புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம், நாட்டின் பொது பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் ‘இந்தியா-ஆஸ்திரேலியா மறுசுழற்சி பொருளாதாரம்(ஐ-ஏசிஇ)’ போட்டி துவங்கியுள்ளது.
  • இதனை அடல் புதுமை கண்டுபிடிப்பு இயக்கம் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை ஆகியவை தொடங்கின.
  • கழிவுகளை அகற்றுவதையும், ஒரு பொருளை சுழற்சி முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதையும் தனது நோக்கமாக இது கொண்டுள்ளது.
  • இந்தப் போட்டியில் இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள், மறுசுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் புதுமையான வழிகளை கண்டறிவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனானி மருத்துவம் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது!!

  • இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் யுனானி மருத்துவத்திற்கான மத்திய குழு, யுனானி மருத்துவம் குறித்த தேசிய மாநாட்டை நடத்தியது.
  • “கோவிட் 19 காலத்தில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டினை ஹோமியோபதி இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ துவக்கி வைத்தார்.
  • ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்ய ராஜேஷ் கொட்டேச்சா, கூடுதல் செயலாளர் திரு பிரமோத் குமார் பாதக், யுனானி மருத்துவத்திற்கான மத்திய குழுவின் தலைமை இயக்குநர் பேராசிரியர் ஆசிம் அலி கான் ஆகியோர் பங்கேற்றனர்.

2-வது கடல்சார் இந்திய மாநாட்டில் 24 நாடுகள் பங்கேற்கின்றன!!

  • மார்ச் 2 முதல் 4 வரை காணொலி மூலம் நடைபெற இருக்கும் கடல்சார் இந்திய மாநாடு-2021யின் இரண்டாவது பதிப்பில் சுமார் 20,000 பிரமுகர்கள், 24 பங்குதார நாடுகள் பங்கேற்கும் நிலையில், 400-க்கும் அதிகமான திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.
  • கடல்சார் இந்திய மாநாடு-2021 பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வரும் மார்ச் 2 ஆம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
  • துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
  • மாநாடு குறித்த கையேடு ஒன்றையும், இணையதளத்தையும் (www.maritimeindiasummit.in) அமைச்சரும், மூத்த அதிகாரிகளும் வெளியிட்டனர்.

இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் பற்றி

தலைமையகம் – புது டெல்லி

மத்திய அமைச்சர் – மன்சுக் எல். மாண்டவியா

மாநில நிகழ்வுகள்

உத்தரபிரதேசத்தில் “மாக் மேளா” விழா அனுசரிக்கப்பட்டது!!

  • இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு “மாக் மேளா” விழா அனுசரிக்கப்பட்டது.
  • மாக் மேளா (மாக மேளா) என்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இந்த விழாவில் ஆற்றங்கரைகள் மற்றும் புனித தொட்டிகளுக்கு அருகில் கண்காட்சிகள் நடைபெறும்.
  • இந்த விழாவின் போது கங்கை, யமுனா மற்றும் புராண சரஸ்வதி -சங்கம் ஆகியவற்றின் சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

உத்தர பிரதேசம் பற்றி

தலைநகரம் – லக்னோ

ஆளுநர் – அனந்திபென் படேல்

முதல்வர் – யோகி ஆதித்யநாத்

மத்திய பிரதேச மாநிலத்தில் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் கட்டமைப்புகளை மத்திய பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார்!!

  • புது டெல்லியில் இருந்து ‘ஜலபிஷேகம்’ என்ற பிரச்சாரத்தின் கீழ் மத்தியப்பிரதேசத்தில் கட்டப்பட்ட 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் கட்டமைப்புகளை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
  • இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரான நரேந்திர சிங் தோமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் நடைபெற்றது.
  • இந்த நீர் கட்டமைப்புகள் கோவிட் காலத்தில் MNREGA திட்டத்துடன் வேலையை இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேஷம் பற்றி

தலைநகரம் – போபால்

முதல்வர் – சிவராஜ் சிங் சவுகான்

ஆளுநர் – அனந்திபென் படேல்

நியமனங்கள்

ஆர்செலார் மிட்டல் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்!!

  • உலகளவில் பிரபலமான உருக்கு நிறுவனமான ஆர்செலார் மிட்டல் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆதித்யா மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தற்போதய தலைமை செயலதிகாரியாகவும், தலைவராகவும் இருக்கும் லட்சுமி மிட்டல் நிர்வாக தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.
  • ஆதித்யா மிட்டல் தற்போது தலைமை நிதிஅதிகாரியாக பதவி வகித்து வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.

கல்யாண்-டோம்பிவலி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷனின் தலைவராக சஞ்சீவ் ஜெய்ஸ்வால் நியமனம்!!

  • கல்யாண்-டோம்பிவலி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷனின் தலைவராக மகாராஷ்டிரா அரசு கூடுதல் நகராட்சி ஆணையாளரை நியமித்துள்ளது.
  • தற்போது கூடுதல் நகராட்சி ஆணையாளராக சஞ்சீவ் ஜெய்ஸ்வால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • யுபிஎஸ் மதன் என்பவருக்கு பதிலாக சஞ்சீவ் இனி இந்த பதவியில் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Notification 2021 

புத்தகங்கள்

இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியின் புதிய புத்தகம் வெளியீடு!!

  • பிரபல இயக்குனரான அஸ்வினி ஐயர் திவாரி “Mapping Love” என்ற பெயரில் ஒரு புதிய புத்தகத்தினை எழுதியுள்ளார்.
  • இந்த புத்தகம் வரும் மே மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த புத்தகத்தினை ரூபா பதிப்பகம் வெளியிட உள்ளது. அஸ்வினி Bareilly Ki Barfi, Panga போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.

விளையாட்டு நிகழ்வுகள்

உலக பாரா தடகள போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் வென்றுள்ளனர்!!

  • உலக  பாரா தடகள போட்டியில் இந்திய வீரர்களான நிமிஷா, தேவேந்திர குமார் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
  • இந்த போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகின்றது. இந்திய வீராங்கனையான நிமிஷா பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் 5.25 மீ., தாண்டி தங்கம் வென்றுள்ளார்.
  • ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திர குமார் 50.16 மீ.,எரிந்து தங்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் 41.77 மீ., எறிந்த இந்தியாவின் பிரதீப் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
  • இதனுடன் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் 6 பதக்கங்களை வென்றுள்ளனர்.

முக்கிய நாட்கள்

உலக டார்வின் தினம்!!

  • உலகளவில் டார்வின் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 12 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
  • father of natural selection என்று அழைக்கப்படும் டார்வின் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி 1809 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • இவர் தான் முதன் முதலாக மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்ற புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டார்.

Download CA Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here