Daily Current Affairs February 10,11 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 10,11 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

உர நிறுவனத்துக்கு ரூ.100 கோடி மானிய உதவி வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்!!

  • யூரியா உற்பத்திப் பிரிவுகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அசாம் நம்ருப் பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா உரம் கார்பரேஷன் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி மானிய உதவி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பொதுத்துறை நிறுவனமாக பிரம்மபுத்ரா உர கார்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமாக நம்ருப்-2, நம்ருப்-3 என்ற இரண்டு பழமையான ஆலைகள் உள்ளன.
  • இந்த ஆலைகளில் உள்ள இயந்திரங்களை சரி பார்க்கவும், ஆலைக்கு தேவையான சாதனங்களை கொள்முதல் செய்யவும் 100 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.

இந்திய கடற்படை மற்றும் IIT டெல்லி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது!!

  • கடற்படை மின்னணு அமைப்புகள் குறித்து நீருக்கடியில் ஆராய்ச்சி செய்வதற்காகவும், இந்திய கடற்படை மற்றும் IIT டெல்லி இடையே ஒரு புரிதலை ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
  • IIT டெல்லியில் மேற்கொள்ளபட்ட பல ஆராய்ச்சிகள் இந்திய கடற்படைக்கு பெரிதும் உதவியாகவும் அதே சமயம் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் பெரிய பங்கும் வகித்துள்ளது.

அதிக மகசூல் தரக்கூடிய பயிர் வகைகளை வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாகியுள்ளது!!

  • கடந்த மூன்று ஆண்டுகளில், அதிக மகசூல் தரக்கூடிய 838 பயிர் வகைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளது. இவற்றில் 578 வகைககள் பருவநிலை மாற்றங்களை தாங்கக் கூடியவை.
  • 41 வகை பயிர்கள் குறுகிய காலத்தில் மகசூல் தரக் கூடியவை.
  • கடந்த 3 ஆண்டுகளில் 61 பயிர்களின் 1330 வகைகளைச் சேர்ந்த விதைகள்53 லட்சம் குவிண்டால் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகத்தின் 34வது நிறுவன தின கொண்டாட்டம்!!

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் தொழில்நுட்பம், தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகத்தின் 34-வது நிறுவன தினம் நாட்டின் தலைநகரில் கொண்டாடப்பட்டது.
  • “தற்சார்பு இந்தியாவிற்கு தொழில்நுட்பம், புதுமை மற்றும் பொருளாதாரம்” என்பது இதன் கருப்பொருளாகும்.
  • இந்திய மூங்கில் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதப்படுத்துதல் தொடர்பாக தகவல், முன்னறிவிப்பு, மதிப்பீட்டுக்கழகம் தயாரித்த இரண்டு அறிக்கைகளும் வெளியிடப்பட்டன.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவின் 25 வது ஆண்டு விழா துவக்கம்!!

  • திருவனந்தபுரத்தில் உள்ள நிஷகந்தி ஆடிட்டோரியத்தில் திரைப்பட விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்துள்ளார்.
  • 30 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 80 திரைப்படங்கள் இந்த ஆண்டு திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • போஸ்னிய திரைப்படமான ‘குவோ வாடிஸ், ஐடா?’ விழாவின் தொடக்கப் படமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
  • கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த விழா 3 கட்டங்களாக வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.
  • இந்த விழா பிப்ரவரி 17 முதல் 21 வரை எர்ணாகுளத்திலும், பிப்ரவரி 23 முதல் -27 வரை தலசேரியிலும், மார்ச் 1 முதல் 5 வரை பாலக்காட்டில் நடைபெறும்.

ட்ரோபெக்ஸ்-21’ போர் பயிற்சியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது!!

  • இந்திய கடற்படை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மிகப் பெரிய போர் பயிற்சியான ‘ட்ரோபெக்ஸ் 21’(Theatre Level Operational Readiness Exercise (TROPEX 21) ஈடுபட்டுள்ளது.
  • கடற்படையின் தயார் நிலையை மதிப்பீடு செய்வதற்காக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
  • கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கிய இந்த பயிற்சி, பிப்ரவரி 3வது வாரத்தில் முடிகிறது.இந்தப் பயிற்சியை கடற்படையின் 3 கட்டுப்பாட்டு மண்டலங்கள், போர்ட் பிளேரில் உள்ள முப்படை கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுடன் இணைந்து கடற்படை தலைமையகம் மேற்பார்வையிடுகிறது.

இந்தியா பொம்மை கண்காட்சிக்கான புதிய வலைத்தளம் துவக்கம்!!

  • ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆகியோர் இணைந்து இந்த வலைத்தளத்தை புது டெல்லியில் துவங்கினர்.
  • இந்தியாவின் முதல் தேசிய பொம்மை கண்காட்சி 2021 பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய துறைமுக அதிகாரங்கள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!!

  • துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இம்மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
  • மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
  • துறைமுக உள்கட்டமைப்பின் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதையும், வணிகம் மற்றும் வர்த்தக வசதிகளை அளிப்பதையும் இந்த மசோதா தனது நோக்கமாக கொண்டுள்ளது.

Download TNPSC Notification 2021 

 மரணங்கள்

பிரபல தமிழ் எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம் மரணம்!!

  • பிரபல பெண் எழுத்தாளரான லட்சுமி ராஜரத்தினம் தனது 78 வது வயதில் மரணம் அடைந்துள்ளார். இவர் தமிழில் 1500க்கும் மேற்பட்ட கதைகளையும் 300 நாவல்கள், 100 வானொலி நாடகங்களை எழுதியுள்ளார்.
  • இவர் எழுத்தாளர் மட்டும் அல்லாமல் சிறந்த ஆன்மிக பேச்சாளரும் ஆவார். இவர் தனது பேச்சின் இடையே பக்தி பாடல்களையும் பாடுவார்.

விருதுகள்

மதுரை காமராஜர் பல்கலை க்கழகத்தின் பேராசியருக்கு “தமிழ்செல்வன்” விருது!!

  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் தலைவரும் பேராசிரியருமான சத்தியமூர்த்திக்கு “தமிழ்செல்வன்” விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருது தமிழக அரசு சார்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் பேராசிரியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

தமிழக செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 7 துணை மின் நிலையங்கள் துவக்கம்!!

  • தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் புதிதாக மின் நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனை தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
  • இந்த துணை மின்நிலையங்கள் நாகப்பட்டினம், வேதாரண்யம், திருப்போரூர், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் அமைய உள்ளன.

Download CA Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!