நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 28, 2020

0
நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 28, 2020
தேசிய செய்திகள்

மனநல ஆலோசனைக்காக KIRAN ஹெல்ப்லைன் சேவையை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

மத்திய சமூக நீதி அமைச்சர் தவார் சந்த் கெஹ்லோட் கட்டணமில்லா மனநல மறுவாழ்வு ஹெல்ப்லைன் எண்ணான ‘கிரண்’ ஐ அறிமுகப்படுத்தினார்.

  • இந்த சேவைக்குரிய ஹெல்ப்லைன் (1800-599-0019) எண்ணை அணுகுவதுடன் மூலம் , முதலுதவி, உளவியல் ஆதரவு, மன நல ஆலோசனைகளை பெறலாம்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் NCC பயிற்சிக்காக DGNCC என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் Directorate General National Cadet Corps (DGNCC) என்ற மொபைல் பயிற்சி செயலியை அறிமுகப்படுத்தினார். தேசிய கேடட் கார்ப்ஸ் (என்.சி.சி), நாடு தழுவிய ஆன்லைன் பயிற்சி நடத்துவதற்கு இந்த மொபைல் பயன்பாடு உதவும்.

  • COVID19 ஊரடங்கு கட்டுப்பட்டால், NCC பயிற்சியை ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பெற இந்த செயலி உதவும்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேசிய ஜி.ஐ.எஸ்- நில வங்கி முறையைத் (GIS(Geographic Information System)-enabled Land Bank system) தொடங்கி வைத்தார்

மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் ஆறு மாநிலங்களுக்கு தேசிய ஜி.ஐ.எஸ் புவியியல் தகவல் அமைப்பு முறையை (https://iis.ncog.gov.in/parks) தொடங்கினார்.

  • இந்த தளம் நாடு முழுவதும் உள்ள தொழில்துறை பகுதிகளின் தரவுத்தளத்தை வழங்கும் மற்றும் அனைத்து தொழில்துறை தகவல்களையும் இலவசமாகவும் எளிதாகவும் அணுகுவதற்கான ஒரு தீர்வாக இந்த வலைத்தளம் செயல்படும்.

AIFC மற்றும் கால்பந்து ஆஸ்திரேலியா பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு (FCA), கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

இந்திய கால்பந்து பயிற்சியாளர்களின் சங்கம், இரு நாடுகளின் கால்பந்து வளர்ச்சியில் உதவுவதற்காக கால்பந்து ஆஸ்திரேலியா பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் AIFC மற்றும் FCA ஆகியவை பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கும் மற்றும் பயிற்சியாளர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் வழி வகுக்கும்.
மாநில செய்திகள்

டெல்லி அரசு “Healthy Body, Healthy Mind” என்ற உடற்தகுதி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது

COVID-19 தொற்றுநோயால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு திறக்கப்படாததால் வீடுகளில் உள்ள மாணவர்களுக்காக டெல்லி அரசு உடற்தகுதி பிரச்சாரத்தை – ‘Healthy Body, Healthy Mind’ தொடங்கியது.

  • இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு வீடியோவைப் பதிவேற்றும் ஒரு YouTube சேனல் தொடங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மாணவர்கள் உடற்தகுதியைப் பராமரிக்கவும், ஆரோகியதோடு வாழவும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் NRI unified போர்ட்டலை அறிமுகப்படுத்தினார்

இதன் மூலம் உத்தரபிரதேசத்தில், உலகின் பல்வேறு நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தரவுத்தளத்தை மாநில அரசு தயாரிக்கும். எந்தவொரு அவசர காலத்திலும் அவர்களுக்கு உதவி வழங்க இது உதவும் மேலும் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோருக்கும் இந்த போர்டல் வாய்ப்புகளை வழங்கும்.

வங்கி செய்திகள்

டிஜிட்டல் முறை பரிவர்த்தனைகளை மேம்படுத்த HDFC வங்கி மற்றும் அடோப் நிறுவனம் இணைந்துள்ளது

எச்.டி.எஃப்.சி வங்கி தனது வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் அனுபவங்களை மேம்படுத்த அடோப் உடன் ஒரு கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த கூட்டாண்மை அடோப் எக்ஸ்பீரியன்ஸ் கிளவுட் சொல்யூஷன்ஸால் (Adobe Experience Cloud Solutions) இயக்கப்படுகிறது. மற்றும் எச்டிஎப்சி வங்கிக்கு எந்த நேரத்திலும் மேம்பட்ட டிஜிட்டல் அனுபவங்களை ஏற்கனவே அந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவும்.

ஒப்பந்தங்கள்

உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமான குவாண்டம் கணினியை உருவாக்க ஐ.ஐ.டி முன்னாள் மாணவர் கவுன்சில் ரஷ்யா நிறுவனங்களுடன் கூட்டணி மேற்கொண்டுள்ளது

ஆத்மா நிர்பர் பாரத்தின் ஒரு பகுதியாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) முன்னாள் மாணவர் பேரவை ரஷ்ய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களான லோமோனோசோவ் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகம் மற்றும் ருசாஃப்ட் ஆகியவற்றுடன் உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமான குவாண்டம் கணினியை உருவாக்க ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

விருதுகள்

சர்வதேச புக்கர் பரிசை வென்ற இளம் எழுத்தாளர் என்ற பெருமையை மாரிகே லூகாஸ் ரிஜ்னெவெல்ட் பெற்றார்

  • 29 வயதான டச்சு எழுத்தாளர் சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார்.
  • மரியெக் லூகாஸ் ரிஜ்னெவெல்ட் எழுதிய “The Discomfort of Evening” புத்தகத்திற்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. மேலும் உலகெங்கிலும் இருந்து தரமான புனைகதைகளை அதிகம் வெளியிடுவதையும் வாசிப்பதையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்

பிரையன் சகோதரர்கள் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள்

டென்னிஸ் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஆண்கள் இரட்டையர் அணியான பாப் மற்றும் மைக் பிரையன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள்

  • இந்த இருவர் கூட்டணி 119 பட்டங்களை ஒன்றாக கைப்பற்றி உள்ளது, இதில் 16 கிராண்ட் ஸ்லாம்ஸ், 39 ஏடிபி மாஸ்டர்ஸ் மற்றும் 4 ஏடிபி பைனல்ஸ் ஆகும்.
  • இவர்கள் லண்டன் 2012 இல் ஒலிம்பிக் தங்கத்தையும் வென்றனர் மற்றும் 2007 இல் யு.எஸ். டேவிஸ் கோப்பை வென்றனர்.
புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்

இராணுவத் தலைவர் எம்.எம்.நாரவனே தேசிய பாதுகாப்பு குறித்த புத்தகத்தை வெளியிட்டார்

இராணுவத் தலைவர் ஜெனரல் எம்.எம்.நாரவனே பல்கலைக்கழக மாணவர்கள் எழுதிய & தேசிய பாதுகாப்பு சவால்கள்: இளம் அறிஞர்களின் பார்வ & என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

  • இந்த புத்தகம் CLAWS நிறுவனத்தால் வெளியிட்டப்பட்டது.
  • 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் ஃபீல்ட் மார்ஷல் மானேக்ஷாவுக்கு பங்களிப்பு பற்றி இந்த புத்தகம் விவரிக்கிறது.
பிற செய்திகள்

எழுத்தாளர்-பத்திரிகையாளர் கெயில் ஷீஹி காலமானார்

எழுத்தாளர்-பத்திரிகையாளர், வர்ணனையாளர் மற்றும் சமூகவியலாளர் கெயில் ஷீஹி காலமானார். அவரது சிறந்த விற்பனையான புத்தகம் “Passages: Predictable Crises of Adult Life” 1976 இல் வெளியிடப்பட்டது.

  • தேசிய பத்திரிகை விருது, அனிஸ்ஃபீல்ட் புத்தக விருதுபோன்ற விருதுகளை இவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!