நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 18, 2020

0
நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 18, 2020
நடப்பு நிகழ்வுகள் - ஆகஸ்ட் 18, 2020
நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 18, 2020
குவாலியர்-சம்பல் நெடுஞ்சாலை அடல் பிஹாரி வாஜ்பாய் என பெயரிடப்பட உள்ளது

குவாலியர் சம்பல் அதிவேக நெடுஞ்சாலைக்கு ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் சம்பல் பாதை என்று பெயரிடப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைநகர் போபாலில் அறிவித்து உள்ளார்.

  • இந்தியப் பிரதமரான முதல் பாஜக உறுப்பினர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆவார். அவர் 1996 முதல் 1998 முதல் 1999 வரை மற்றும் 1999 முதல் 2004 வரை பிரதமராக பணியாற்றினார்.
பிரிட்டன் அரசு இந்திய விஞ்ஞானிகளுக்காக 3 மில்லியன் பவுண்டு அளவிலான நிதியை அளித்துள்ளது

கோவிட் -19 போன்ற மிகக் கடுமையான உலகளாவிய சவால்களையும் சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தலையும் சமாளிக்க கல்வி மற்றும் தொழில்துறையில் உள்ள விஞ்ஞானிகளுக்கு ஆதரவாக இங்கிலாந்து அரசு 3 மில்லியன் பவுண்டுகள் நிதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இந்த நிதியின் உதவியோடு கர்நாடகாவில் உள்ள AI- Data Clusterமற்றும் மகாராஷ்டிராவில் உள்ள mobility cluster ஆகியவற்றுடன் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை உருவாகுவாக்குவார்கள்.

சர்வதேச செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஒப்பந்தத்திற்குப் பிறகு நேரடி தொலைபேசி சேவையை நிறுவியுள்ளது

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி தொலைபேசி சேவைகளை தொடங்கியுள்ளது.

  • அமேரிக்க. ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட, இஸ்ரேல்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்பந்தம் அரபு நாட்டோடு இஸ்ரேல் மேற்கொண்ட மூன்றாவது ஒப்பந்தமாகும்.

மாநில செய்திகள்

நாகாலாந்து அரசு இ-காமர்ஸ் தளமான “YellowChain” ஐ தொடங்கியுள்ளது

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாகாலாந்தின் முதலமைச்சர் , மாநிலத்தில் உள்ளூர் வணிகம் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக “YellowChain” இ-காமர்ஸ் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • YellowChain மாநில மக்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த தளமாக செயல்படும், அங்கு எந்தவொரு விற்பனையாளர் / சேவை வழங்குநர் / தனிநபர் / குழு தங்களை பதிவு செய்து தங்கள் தயாரிப்புகள், வர்த்தகங்கள், திறன்கள், சேவைகள் போன்றவற்றை பதிவேற்றலாம்.
சத்தீஸ்கர் முதல்வர் பள்ளி மாணவர்களுக்கான “பதாய் துஹார் பரா”திட்டத்தை அறிவித்தார்

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் “பதாய் துஹார் பரா” என்ற சிறப்புத் திட்டத்தைத் அறிவித்துள்ளார், இது பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

  • கொரோனா வைரஸ் காரணமாக வகுப்புகள் இடைநிறுத்தப்படுவதால் பள்ளி மாணவர்கள் அவர்கள் இருக்கும் இடங்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள இந்த திட்டம் உதவுகிறது.

நியமனங்கள்

ராகேஷ் அஸ்தானா எல்லை பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரலா நியமிக்கப்பட்டார்

ராகேஷ் அஸ்தானா எல்லை பாதுகாப்பு படையின் (BSF) இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். திரு அஸ்தானா தற்போது சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகத்தின் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார்

  • அமைச்சரவையின் நியமனக் குழு உத்தரவில், ஐ.பி.எஸ் அதிகாரி – ஜாவேத் அக்தர் டி.ஜி தீயணைப்பு சேவைகள், சிவில் பாதுகாப்பு இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோழிக்கோடு விமான விபத்தை ஆராய AAIB ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை உருவாக்கி உள்ளது

கடந்த வாரம் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமான விபத்து குறித்து விசாரிக்க விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

  • முன்னாள் டி.ஜி.சி.ஏ கேப்டன் எஸ் எஸ் சாஹர், விபத்தின் சூழ்நிலைகளை விசாரிக்க புலனாய்வாளராக இருப்பார்.
  • நிபுணர் வேத் பிரகாஷ், மூத்த விமான பராமரிப்பு பொறியாளர்- முகுல் பரத்வாஜ், விமான மருத்துவ நிபுணர் ஒய் எஸ் தஹியா மற்றும் ஏஏஐபி துணை இயக்குனர் ஜஸ்பீர் சிங் லர்கா ஆகிய நான்கு புலனாய்வாளர்கள் அக்குழுவில் உள்ளனர்.
GoAir ன் தலைமை நிர்வாக அதிகாரியாக கவுசிக் கோனா நியமிக்கப்பட்டார்

GoAir விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கவுசிக் கோனா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வினய் துபே விற்கு அடுத்ததாக அப்பதவிக்கு வரவுள்ளார்.

  • GoAir என்பது மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த ஒரு இந்திய விமான நிறுவனமாகும். இது இந்திய வணிக நிறுவனமான வாடியா குழுமத்திற்கு சொந்தமானது.

வணிக செய்திகள்

வெள்ள அபாய முன்னறிவிப்பிற்காக இந்தியாவின் CWC நிறுவனம் , Google உடன் இணைந்துள்ளது

கூகிள் இந்தியா, மத்திய நீர் ஆணையத்துடன் (CWC) இணைந்து கடந்த பல மாதங்களாக இந்தியா முழுவதும் வெள்ள முன்கணிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  • இதன் மூலம் google, CWC உடன் இணைந்து இந்தியா முழுவதும் சுமார் 1000 ஸ்ட்ரீம் அளவீடுகளைப் பயன்படுத்தி ஒரு மணி நேர அடிப்படையில் நீர் நிலைகளை அளவிடும்.
  • இம்முயற்சியால் வெல்ல அபாய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை தகுந்த நேரத்தில் தெரிவிக்கப்படும்.

விளையாட்டு செய்திகள்

இந்திய ஒலிம்பிக் சங்கம் “ஏக் இந்தியா டீம் இந்தியா” டிஜிட்டல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது

ஒலிம்பிக் போட்டிகளில் 100 ஆண்டுகால இந்திய பங்கேற்பைக் குறிக்கும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் “ஏக் இந்தியா டீம் இந்தியா” என்ற டிஜிட்டல் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

  • இதன் மூலம் நாட்டின் தனித்துவம், விளையாட்டு மரபு, ஒற்றுமையின் மதிப்புகள், நட்பு மற்றும் விளையாட்டில் இந்தியாவின் தகுதி ஆகியவற்றைக் கொண்டாடுகிறது.
ஃபிட் இந்தியா இளைஞர் கழகங்களை (Fit India Youth Clubs) விளையாட்டு அமைச்சர் தொடங்கினார்

ஃபிட் இந்தியா யூத் கிளப் என பெயரிடப்பட்ட முயற்சியை விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு மேற்கொண்டுள்ளார்.

  • இது ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாகும், மேலும் உடற்பயிற்சி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடம் ஏற்படுத்தும்.
  • நேரு யுவ கேந்திர சங்கதின் 75 லட்சம் தன்னார்வலர்கள், தேசிய சேவை திட்டம், என்.சி.சி மற்றும் பிற அமைப்புகள் ஃபிட் இந்தியா இளைஞர் கழகத்தில் பதிவு செய்யலாம்.

பிற செய்திகள்

திரைப்பட தயாரிப்பாளர் நிஷிகாந்த் காமத் காலமானார்

இயக்குனர்-நடிகர் நிஷிகாந்த் காமத் காலமானார். 2005 ஆம் ஆண்டில் மராத்தி திரைப்படமான டோம்பிவலி ஃபாஸ்ட் மூலம் இயக்குனராக அறிமுகமானார், இது மராத்தியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.

  • ஃபோர்ஸ், த்ரிஷ்யம் மற்றும் மடாரி போன்ற சில பிரபலமான பாலிவுட் திரைப்படங்களை நிஷிகாந்த் இயக்கியிருந்தார். 2004 ஆம் ஆண்டில் ஹவா அனே டே என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
பிரபல கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார்

இந்திய கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் காலமானார். அவர் 1930 இல் ஹரியானாவில் பிறந்தார். அவர் தனது வாழ்க்கையில் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றார்.

  • பண்டிட் ஜஸ்ராஜ் 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருது, பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர்; 1987 இல் சங்க நாடக் அகாடமி விருதும், 1999 ல் பத்ம பூஷண் விருதும் பெற்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!