ஏப்ரல் 1 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்புவழக்கு

 • காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தில் பிப்ரவரி16 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசுக்கு எதிராக, உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசின் சார்பில்அ வமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டுள்ளது.

புதுதில்லி:

புதுதில்லியில் ஏப்ரல் 1 முதல் யூரோ 6 பெட்ரோல் டீசல் அறிமுகம்

 • புதுதில்லியில் காற்று மாசுபடுதலை தவிர்க்க ஏப்ரல் 1 முதல் யூரோ 6 பெட்ரோல் டீசல் அறிமுகமாக உள்ளது. யூரோ 4லிருந்து நேரடியாக யூரோ 6 வகைக்கு மாறும் முதல் இடம் இந்தியாவிலேயே தில்லி ஆகும்.இந்த திட்டம் ஏப்ரல் 2020லிருந்து இந்தியா முழுவதும் வ ரஉள்ளது.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில்ஏப்ரல் 1 இல் மாபெரும் உணவு பூங்கா தொடங்கப்பட்டது

 • மத்திய உணவுபதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரம்ட்கவுர் க்ரீண்டெக் மெகாபுட்பார்க் என்னும் மாபெரும் உணவு பூங்காவை ராஜஸ்தான் அஜ்மீர் இல் தொடங்கிவைத்தார். இதுவிவசாயிகள் லாபம் அடைவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆந்திரபிரதேசம்:

ஆந்திராவில் கலம்காரி அருங்காட்சியகம்

 • முன்னாள் மத்திய ஜவுளிதுறை அமைச்சர் ஆந்திராவில் கலம்காரி கலைஅருங்காட்சியகத்தைத் தொடங்கிவைத்தார். இந்த கலை பெத்தண்ணா என்னும் இடத்தில் 1970 லிருந்து வளர்ந்து வருகிறது.

தேசியசெய்திகள்

அருணாச்சல் எல்லையில் உள்ள டோக்லாம் எல்லையில் படைகள் குவிப்பு

 • சீனாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, அருணாச்சலபிரதேச எல்லையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்துள்ளது.அருணாச்சல் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் மீண்டும் பதற்றத்தை தடுக்க அப்பகுதியில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்தது.

கோனார்க் சூரியக் கோயிலில் உலகத்தரம் வாய்ந்த விளக்க மையம் மற்றும் சுற்றுலா வசதிகளை பெட்ரோலியத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

 • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு, திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஒடிஷாவில் உத்கல் தின கொண்டாட்டத்தையொட்டி, கோனார்க்கில் உள்ள சூரியக் கோயிலில் உலகத்தரம் வாய்ந்த விளக்க மையம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை தொடங்கிவைத்தார். ஒடிஷா மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் திகழும் கோனார்க் சூரியக் கோயிலின் கட்டடக் கலையின் அற்புதத்தை  உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டியது அவசியம், இதற்காகவே விளக்க மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

சர்வதேசசெய்திகள்

வடகொரியா டோக்யோ மற்றும் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும்.

 • வடகொரியா 2020 மற்றும் 2022 இல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் என்று சர்வேதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தெரிவித்தார்.

மலாலா 5 ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் சொந்த வீட்டுக்குச்சென்றார்

 • அமைதிக்கு நோபல் பரிசு பெற்ற மலாலா 5 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சொந்த தேசத்துக்கு வந்தார். தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டப் பிறகு அவர் தனது சொந்த நாட்டிற்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.

விஞ்ஞானசெய்திகள்

ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் தகவல் தொடர்பைஇழந்தது:இஸ்ரோ

 • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மார்ச் 29 அன்று, ஜிஎஸ்எல்விஎஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் தகவல் தொடர்பை இழந்தது என்று இந்தியவிண்வெளி ஆய்வுமையம்(இஸ்ரோ) அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இஸ்ரோ செயற்கைகோளுடன் மீண்டும் தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது..இந்த ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் ஆகும்.

வணிகசெய்திகள்

அமெரிக்காவிலிருந்து எல் என் ஜி இறக்குமதி

 • அமெரிக்காவிலிருந்து திரவ இயற்கைஎரிவாயு (எல்என்ஜி) நிரப்பப்பட்ட கப்பல் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது இது முதல் முறையாகும்.அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள செனயர் எனர்ஜி சபைன்பாஸ் ஆலையிலிருந்து திரவ இயற்கைஎரிவாயுவை வாங்குவதற்கு கெயில் ஒப்பந்தம்செய்தது.
 • முதலாவது கப்பல் எம்விமெரிடியன் 25 நாள் பயணத்துக்குப் பிறகு மகாராஷ்டிரமாநிலம் தபோல் மின்னுற்பத்தி நிலையத்துக்கு வந்தது. தபோலில் உள்ள மின்னுற்பத்தி ஆலைக்கு இந்த எல்என்ஜி பயன்படுத்தப்படும். திரவஎரிபொருளில் இயங்கும் மிகப்பெரிய மின்னுற்பத்தி ஆலை இதுவாகும்.

விளையாட்டுசெய்திகள்

டி20 கிரிக்கெட் தொடரில்ஆஸ்திரேலியா மகளிர் சாம்பியன்

 • டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்று வந்தது. இதில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இதில் ஆஸ்திரேலியா 57 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here