ஏப்ரல் 9 நடப்பு நிகழ்வுகள்

0

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்குடியில் பழங்கால பொருட்கள்

 • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்குடி எனும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட சிறிய ஊரில், சங்க காலத்தைச் சோ்ந்த பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 • மேற்கு தொடா்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தேவியாற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது மாங்குடி.சங்க காலத்தில் இங்கு பயன்படுத்திய பானை ஓடுகள் ஏராளமாக காணப்படுகின்றன. மாங்குடி கிராமத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் ஏராளமான கருப்பு, சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆந்திரபிரதேசம்:

ஆந்திராவில் திருநங்கை முதல் பென்ஷன் பெற்றார்

 • முதன்முறையாக ஆந்திராவில் திருநங்கைக்கு பென்ஷன் வழங்கப்பட்டது.இதனை கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சிதலைவர் தொடங்கி வைத்தார்.

குறிப்பிற்கு :ஒடிஷா மாநிலம் இந்தியாவில் முதன் முறையாக திருநங்கைகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது .கேரளம் இரண்டாவதாக மற்றும் ஆந்திரா மூன்றாவதாக இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

தேசியசெய்திகள்

16வது சர்வதேச எரிசக்தி மாநாட்டினை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார்

 • உலகளாவிய எரிசக்தி வரைபடத்தில் வளர்ந்துவரும் இந்தியாவின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் வகையில் 16வது சர்வதேச எரிசக்தி அமைச்சர்களின் மாநாட்டினைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதனன்று தொடங்கிவைக்கவிருக்கிறார்.
 • உலக நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்களின் மிகப்பெரிய மாநாடாகக் கருதப்படும் இந்நிகழ்வில் இத்துறையின் முக்கிய நிபுணர்களும், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும், உலக அளவில் எரிசக்தித்துறையின் எதிர்காலத்தைக் குறித்து விவாதிக்கவிருக்கின்றனர்.

சர்வதேச எரிசக்தி மாநாடு மற்றும் 16 வது  மாநாடு பற்றிய விவரம் அறிய      

சர்வதேசசெய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம்

 • ஜப்பானில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்துக்கு 5 பேர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியது. அமெரிக்க புவியியல் மையம், “ஜப்பானில் ஒன்ஷூ தீவுப் பகுதியில் அதிகாலை 1 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது” என்று கூறியுள்ளது.

அமெரிக்காவில் பல ஆயிரம் தலைப்பாகைகளை கட்டி சீக்கிய அமைப்பு கின்னஸ் சாதனை

 • நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஒன்றுதிரண்ட சுமார் 9 ஆயிரம் சீக்கியர்களுக்கு 8 மணி நேரத்திற்குள் தலைப்பாகை கட்டி முடித்ததன் மூலம் புதிய உலக சாதனை உருவாக்கப்பட்டுள்ளது.  ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதியை ‘டர்பன் தினம்’ (சீக்கியர்கள் அணியும் தலைப்பாகை தினம்) ஆக அங்குள்ள சீக்கியர்கள் கொண்டாட கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.

ஹங்கேரி பாராளுமன்ற தேர்தல் – நான்காவது முறையாக பிரதமராகிறார் விக்டர் ஆர்பன்

 • ஹங்கேரி நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. , பிரதமர் விக்டர் ஆர்பன் நான்காவது முறையாக பிரதமர் பதவியை வகிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகசெய்திகள்

சென்னையில் ஆலை அமைக்கும் ஸ்வீடன் நிறுவனம்

 • வாகனங்களுக்கான பிரேக்குகளை தயாரிக்கும் ஸ்வீடனை சேர்ந்த பிரெம்போ நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை சென்னையில் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.10-ம் ஆண்டு விழாவில் மேலும் ஒரு ஆலையை இந்தியாவில் அமைக்கத் திட்டமிட்டு, அதை சென்னையில் நிறுவப் போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ. 72 கோடி முதலீட்டில் ஓராண்டில் இந்த ஆலை கட்டுமானம் முடிந்து உற்பத்தியைத் தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

விளையாட்டுசெய்திகள்

காமன்வெல்த் போட்டிகள்: பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு முதன்முறையாக தங்கம்

 • காமென்வெல்த் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், மலேசிய அணியும் மோதின, இந்திய அணி முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.

காமன்வெல்த் போட்டிகள்:பளுதூக்குதல் போட்டியில் பிரதீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார்

 • ஆண்களுக்கான 105 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பிரதீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டிகள்: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

 • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அபூர்வி சண்டேலா, மெகுலி கோஷ் பங்கேற்றனர். இதில், மெகுலி கோஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அபூர்வி சண்டேலா வெண்கலப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்றார் ஜித்து ராய், ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலப் பதக்கம்  வென்றார்

 • துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜித்துராய் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
 • இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. 31 தங்கம் வென்றுள்ள ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது.

காமன்வெல்த் போட்டிகள்: இந்தியாவிற்கு 9-வது தங்கம்- ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி சாதனை

 • நைஜீரியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!