Daily Current Affairs 31 January 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs 30 January 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs 30 January 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Daily Current Affairs 31 January 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs January 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defence, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 31 ஜனவரி 2021

உலக தொழுநோய் ஒழிப்பு தினம்!!

  • ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
  • இந்த ஆண்டில் ஜனவரி 31 அன்று இந்த தினம் கொண்டாப்பட்டுள்ளது.
  • தொழுநோய் என்பது தோல் நோய் மட்டுமேயன்றி வேறில்லை என்பதனை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

பிரபுத்த பாரதத்தின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் உரை!!

  • பிரபுத பாரத நிகழ்வின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
  • இந்த நிகழ்வை உத்தரகண்ட் மாநிலம் மாயாவதியில் அமைந்துள்ள அத்வைத ஆசிரமம் ஏற்பாடு செய்துள்ளது.
  • “பிரபுத்த பாரதா” என்பது இந்திய ஆன்மிகவாதியான சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட மாத இதழ் ஆகும்.
  • இந்த மாத இதழ் அவரது குருவான ராமகிருஷ்ணர் உத்தரவின் பெயரில் கடந்த 1896 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
  • இந்த இதழ் இந்தியாவின் பழையமையான ஆன்மிக ஞானத்தை மக்களுக்கு பரப்புவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

“பிரபுத்த பாரதா” பற்றி

நிறுவப்பட்டது: 1896

தலைமையகம்: உத்தரகாண்ட் மாநிலம்

நிறுவியவர்: சுவாமி விவேகானந்தா

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2021

போலியோ தேசிய நோய்த்தடுப்பு தினத்தை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்!!

  • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை அறிமுகப்படுத்தினார்.
  • இதன் காரணமாக இந்த நாளை “தேசிய போலியோ நோய் தடுப்பு” தினமாக அறிவிக்கப்பட்டது.
  • கடந்த ஜனவரி 30 ஆம் தேதி மட்டும் நாட்டில் உள்ள 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பற்றி

மத்திய அமைச்சர்: டாக்டர். ஹர்ஷ வரதன் சிங்

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்: ஸ்ரீ அஸ்வினி குமார்

மிசோரம் மாநிலத்தில் “ஆசியா பாக்ஃபிக் இளைஞர் பரிமாற்றம்” என்ற நிகழ்வினை நடத்த உள்ளது

  • வடகிழக்கு மாநிலமான மிசோரம் “ஆசியா பாக்ஃபிக் இளைஞர் பரிமாற்றம்” என்ற நிகழ்வினை நடத்த உள்ளது.
  • இந்த நிகழ்வில் பிலிப்பைன்ஸ் நாட்டின் குடியரசு தலைவரான ரியா லியோனோர் பங்கேற்க உள்ளார்.
  • அதே போல் மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சர் சோரம்தங்கா மற்றும் அமைச்சரான டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
  • “ஆக்ட் ஈஸ்ட்” என்ற கொள்கையின் கீழ் தான் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த கொள்கை அண்டை நாடுகளுக்கும் நமக்கும் உள்ள உறவினை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

சர்வேதேச நிகழ்வுகள்

679 மெகாவாட் லோயர் அருண் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் நேபாளத்தில் அறிமுகம்!!

  • எஸ்எஸ்ஜேவிஎன் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான நந்த் லால் சர்மா, நேபாளத்தில் 679 மெகாவாட் லோயர் அருண் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டத்தை எஸ்ஜேவிஎன் நிறுவனத்திற்கு ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நேபாள முதலீட்டு வாரியத்தின் ஆலோசனை கூட்டம் 29 ஆம் தேதி அன்று நேபாளத்தின் பிரதமர் சர்மா ஓலி தலைமையில் நடைபெற்றது.
  • லோயர் அருண் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் நேபாளத்தின் சங்குவாசபா மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளது.
  • 679 மெகாவாட் லோயர் அருண் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் மூலமாக ஆண்டுக்கு 3561 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் பற்றி

தலைநகரம் -காத்மாண்டு

நாணயம்- நேபாள ரூபாய்

பிரதமர்- கேபி சர்மா ஓலி

மூலதன செலவினங்களுக்காக (Capital Expenditure) தெலுங்கானாவுக்கு கூடுதலாக நிதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது!!

  • மத்திய நிதி அமைச்சகம் தெலுங்கானா மாநிலத்திற்கு மூலதன செலவினைகளுக்காக 179 கோடி ரூபாய் நிதியாக கிடைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக மாநிலத்தில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • “ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு”, தொழில் துவங்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்காகவும், நகர்ப்புற முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்திற்காகவும் இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
  • “மூலதன திட்டங்களுக்கான நிதி உதவி” என்ற திட்டத்தின் கீழ் தெலுங்கானா மாநிலத்திற்கு இந்த நிதி வழங்கப்பட உள்ளது.

தெலுங்கானா பற்றி

தலைநகரம்- ஹைதராபாத்

முதல்வர் – கே சந்திரசேகர் ராவ்

ஆளுநர்- தமிழிசை சவுந்தராஜன்

*TamilNadu Aavin Job Notification 2021*

மத்திய பிரதேச முதல்வர் 20 லட்சம் விவசாயிகளுக்காக 400 கோடி ரூபாய் வழங்க இருப்பதாக அறிவிப்பு!

  • மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வரான சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் உள்ள 20 லட்சம் விவசாயிகளுக்கு 400 கோடி ரூபாய் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
  • முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் “சாகரில் முதலமைச்சர் கிசான் கல்யாண் யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்தின் 20 லட்சம் விவசாயிகளுக்கு 400 கோடி மதிப்புள்ள சலுகைகளை வழங்க உள்ளார்.
  • பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 400 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4,000 ரூபாய் கூடுதல் உதவியாக இரண்டு தவணையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பற்றி

தலைநகரம்- போபால்

முதல்வர்- சிவராஜ் சிங் சவுகான்

ஆளுநர்- ஆனந்திபென் படேல்

மரணங்கள்

கிதார் கலைஞர் ஹில்டன் வாலெண்டின் மரணம்!!

  • புகழ்பெற்ற கிதார் கலைஞர் ஹில்டன் வாலெண்டின், 1960 களில் பாப் இசையில் மிகவும் பிரபலமான சுவரங்களை உருவாக்கியுள்ளார்.
  • தனது 77 வயதில் உடல் நல குறைவினால் மரணம் அடைந்துள்ளார்.
  • “Don’t Let Me Be Misunderstood” மற்றும் “We Gotta Get Out of This Place” போன்ற மிகவும் பிரபலமான பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.

பெங்காலி நடிகர் இந்திரஜித் தேப் மரணம்!!

  • மிகவும் பிரபலமான பெங்காலி நடிகர் இந்திரஜித் தேப் காலமானார்.
  • 73 வயதாகும் இவர் இருதயக் கோளாறு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
  • மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான “Tero Parbon” என்பதில் தான் முதன் முதலாக நடித்துள்ளார்.

பொருளாதாரம்

ஜிஎஸ்டி வருவாய் வசூல் ஜனவரி மாதம் மட்டும் 1.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது!!

  • ஜனவரியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் வசூல் கிட்டத்தட்ட 1.2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.
  • இந்த ஆண்டு ஜனவரியில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 1 லட்சம் 19 ஆயிரம் 847 கோடி ரூபாய் என்றும் அதில் சிஜிஎஸ்டி 21 ஆயிரம் 923 கோடி ரூபாய் என்றும் 27 ஆயிரம் பொருட்கள் இறக்குமதி செய்ய 424 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு ஜனவரி மாத வருவாய் கடந்த ஆண்டினை விட 8 சதவீதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகம் பற்றி

மத்திய நிதி அமைச்சர் – நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சகத்தின் மாநில அமைச்சர்- ஸ்ரீ அனுராக் சிங் தாக்கூர்

விளையாட்டு நிகழ்வுகள்

பவர் கோப்பை 2021

  • “பவர் கோப்பை 2021” என்பது புது டெல்லியில் உள்ள மின் மற்றும் மின் அமைச்சகம் அணிகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி ஆகும்.
  • இந்நிகழ்ச்சியில் இந்திய அரசின் மின் அமைச்சக அமைச்சர்கள் எரிசக்தி அமைச்சக அதிகாரிகள் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்ததன் பின்னர் இந்த போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் மின் அமைச்சு அணி வெற்றி பெற்றது.
  • ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைப்பின் தலைவராக நியமனம்!!
  • ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைப்பின் தலைவராக பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஏசிசி தலைவராக நியமிக்கப்பட்ட மிக இளவயது நிர்வாகி ஷா ஆவார்.
  • அவர் நஸ்முல் ஹாசனுக்கு பதிலாக தற்போது ஏசிசி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Download Tamil Current Affairs 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!