தாய்லாந்தின் குரங்கு திருவிழா…100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய தமிழக கிராமம் – Daily Current Affairs 29 November 2021

0
தாய்லாந்தின் குரங்கு திருவிழா...100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய தமிழக கிராமம் - Daily Current Affairs 29 November 2021
தாய்லாந்தின் குரங்கு திருவிழா...100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய தமிழக கிராமம் - Daily Current Affairs 29 November 2021
தாய்லாந்தின் குரங்கு திருவிழா…100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய தமிழக கிராமம் – Daily Current Affairs 29 November 2021
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
 • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெற உள்ளது.
 • எரிசக்தி சேமிப்பு திருத்த மசோதா, மத்திய ஊழல் தடுப்பு ஆணைய திருத்த மசோதா உட்பட 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
 • முதலாவதாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெறப்படும் மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மாணவர் படை தினம்
 • 73 ஆவது தேசிய மாணவர் படை தினம் நேற்று இந்தியா முழுவது கொண்டாடப்பட்டது.
 • தேசிய மாணவர் படை,இந்தியாவில் ஏப்ரல் 16, 1948-ஆம் வருடம் தொடங்கப் பெற்றது.
 • இந்தியாவில் 30 லட்சம் பேர் தேசிய மாணவர் படையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிரதமர் நரேந்திரமோடி என்.சி.சி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர் ஹென்றி லெவின்ஜின் பிறந்தநாள் விழா
 • கொடைக்கானலில் முக்கிய பகுதியாக விளங்கும் 24 ஏக்கர் அளவிலான நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர் ஹென்றி லெவின்ஜின் 202 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
 • இவர் 1864 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இந்த ஏரியை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்ட்  அப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 100 கோடி டாலர்
 • நேற்று நடந்த மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது இந்தியாவில் உள்ள 70 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பு 100 கோடி டாலராக உள்ளது என்று கூறியுள்ளார்.
 • 2015 ஆம் ஆண்டில் 9 முதல் 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தன இருந்தன தற்போது இது 70 ஆகா வளர்ச்சியடைந்துள்ளது.

தாய்லாந்தின் குரங்கு திருவிழா
 • தாய்லாந்தில் உள்ள லோப்புரி மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் காணப்படுகின்றன.
 • வருடம் தோறும் நவம்பர் மாதத்தின் இறுதியில் குரங்கு திருவிழா நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகால நடைபெறாமல் இருந்த திருவிழா தற்போது தொடங்கியுள்ளது.
 • இந்த திருவிழாவில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனைவரும் குரங்குகளுக்கு பிடித்தமான உணவு பொருள்களை வழங்குவர்.

மன்னார் வளைகுடா தீவுகளில் பனைமர விதைகள்
 • மன்னார் தீவுகளில் ஒன்றான தூத்துக்குடி பகுதியிலுள்ள வான் தீவை பாதுகாக்க கடல் அரிப்பை தடுக்கும் நோக்கில் பனை விதைகள் நடும்பணி 2018 ஆம் ஆண்டு தொடங்கியது.
 • இதுவரை வான்தீவில் மட்டும் 2000 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 25 ஆயிரம் விதைகள் மன்னார் வளைகுடா தீவுகள் முழுவதுமாக நடப்பட்டுள்ளது.
 • இந்த செயலிற்கு தூத்துக்குடி மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமம்
 • தமிழகத்தின் திருமங்கலத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமம் தமிழகத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமமாக திகழ்கிறது.
 • கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வாரம் கொரானா விழிப்புணர்வு வாரம் சிறப்பாக நடத்தியதற்காகவும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதற்காகவும் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனிஷ் சேகர் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

செக் குடியரசின் புதிய பிரதமர்
 • இதுவரை செக் குடியரசின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பீட்டர் ஃபியாலா தற்போது பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • இவர் செக் குடியரசின் பிரதமராக நேற்று பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  தேசிய துப்பாக்கி சுடுதல் இந்தியாவிற்கு 3 தங்கம்
 • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் பஞ்சாபி வீரர் ராஜ்வீர் சிங் கில் 3 தங்கபதக்கங்களைபெற்றுள்ளார்.
 • ஆடவர் ஸ்கிட், ஜூனியர் ஸ்கிட் அணிகளில் தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாரா உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்
 • ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக பாரா பவர் லிஃப்ட்டிங் போட்டியில் இந்தியா வீரர் பரம்ஜித் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.
 • ஆடவருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 158 கிலோ பவர் லிஃப்ட்டிங் செய்து 3 ஆம் இடம் பிடித்தார்.
 • இந்த வெற்றியின் மூலம் பரம்ஜித் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முத்தரப்பு கூட்டு போர் பயிற்சி தொடக்கம்
 • 15 ஆவது முத்தரப்பு இரண்டு நாள் கப்பற்படை போர் பயிற்சி மாலத்தீவு கடல் பகுதியில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சிக்கு தோஸ்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.
 • ஆரம்பத்தில் இந்திய- மாலத்தீவு க்கு இடையேயான இருதரப்பு பயிற்சியாக மட்டுமே இருந்தது. 2012 இல் இலங்கையும் இணைத்து முத்தரப்பு போர் பயிற்சியாக மாறியது.
 • இந்தியா பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதன் நோக்கில் இந்த போர் பயிற்சியானது நடைபெற்று வருகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!