Daily Current Affairs 22 November 2021 in Tamil

0
Daily Current Affairs 22 November 2021 in Tamil
Daily Current Affairs 22 November 2021 in Tamil

Daily Current Affairs 22 November 2021 in Tamil

இந்தியாவின் தூய்மை நகரம் அறிவிப்பு
  • 2021 ஆம் ஆண்டிற்கான தூய்மை நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இதில் தொடர்ந்து 5ஆவது முறையாக மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் மிக முக்கிய திட்டமான ஸ்வச் சுர்வேக்சான் திட்டத்தின் படி நாட்டின் தூய்மை நகரங்களை கண்டறிந்து விருதுகள் வழங்கும் பணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
  • இதன் அடிப்படையில் மாநில வாரியாக சண்டிகர் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.இரண்டாம் இடத்தில் மஹாராஷ்டிரமும் மொனறாவது இடத்தில் மத்திய பிரதேசமும் உள்ளது.
  • இந்த விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

விருது பட்டியல்:

  • இரண்டம் இடம்- சூரத் ( குஜராத் )
  • மூன்றாம் இடம்- விஜயவாடா ( ஆந்திரா )
  • நான்காவது இடம்- நவி மும்பை ( மும்பை )
  • ஐந்தாவது இடம்- புது டெல்லி

ஏபி டி வில்லியர்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்
  • தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • இவர் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து 2018 ஆம் ஆண்டிலிருந்து ஒய்வு எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் நடைபெறக்கூடிய ஐ.பி.எல் போட்டிகளில் 2008 முதல் பெங்களூர் அணிக்காக விளையாடினார்.

சாதனை விவரம்:

  • ஏபி டி வில்லியர்ஸ் 1984 , பிப்ரவரி 17 ஆம் தேதி பிறந்தார்.
  • சர்வதேச போட்டிகளில் மிக விரைவாக 50,100,150 ரன்கள் எடுத்த தென்னாபிரிக்க வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
  • அதுமட்டுமல்லாம், சர்வதேச போட்டிகளில் இதுவரை 8000 க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார்.
  • இவருக்கு மிஸ்டர் 360 என்ற புனைப்பெயரும் உண்டு.

யுனெஸ்கோ நிர்வாக குழுவில் இந்தியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது:
  • யுனெஸ்கோ வின் 2021-2025 ஆம் ஆண்டிற்கான நிர்வாக குழுவில் 164 வாக்குகளை பெற்று இந்தியா மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.
  • மொத்தமாக இந்த அமைப்பில் 58 உறுப்பு நாடுகள் பங்கேற்க உள்ளன.இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், குக் தீவுகள் மற்றும் சீனா ஆகிய நாடுகளும் குரூப் IV இல் உள்ள ஆசிய மற்றும் பசிபிக் நாடுகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யுனெஸ்கோ நிர்வாக குழுவின் விவரம்:

  • இந்த நிர்வாக குழு யுனெஸ்கோ வின் ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் கவனிக்கிறது. அதுமட்டுமல்லாமல் யுனெஸ்கோ வின் பணிகளை நிர்ணயித்து அவை சரியாக நடைபெறுகின்றனவா என்பதையும் கண்காணிக்கிறது.

 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் கப்பல்:
  • மத்திய பாதுகாப்பு துறையின் முக்கியமான திட்டமாக 15பி செயல்படுகிறது.
  • இந்த திட்டத்தின் படி அதிநவீன நான்கு போர் கப்பல்களை தயாரித்து அதனை இந்திய கப்பற்படையிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • இதில் முதல் போர் கப்பல் மும்பையில் உள்ள கப்பல் காட்டும் தளத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு கப்பல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
  • அந்த கப்பலுக்கு ” ஐஎன்எஸ்  விசாகப்பட்டினம் ” என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ்  விசாகப்பட்டினம் பற்றிய தகவல்:

  • இந்த கப்பலின் எடை சுமார் 7,400டன்.
  • இது ஏவுகணைகளை குறிவைத்து தாக்கும் வல்லமை பெற்றது.

நவம்பர் 21 உலக தொலைக்காட்சி தினம் 
  • தொலைக்காட்சி என்பது பல ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு இடங்களில் நடக்க கூடிய நிகழ்வுகளை நம் இல்லம் தேடி வந்து சேர்க்கிறது.
  • இந்த தினம் கொண்டாட படுவதற்கான காரணம் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதேயாகும்.
  • இந்த ஆண்டிற்கான உலக தொலைக்காட்சி தினம் நவம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
தொலைக்காட்சியின் வரலாறு
  • உலகில் முதன் முதலில் மின்னணு தொலைக்காட்சி பெட்டியை உருவாக்கியவர் அமெரிக்கா வை சேர்ந்த ஃபீலோ ஸ்டைலர் ஃபிரான்ஸ் ஒர்த்.
  • 1924 இல் ஜான் லோகி என்ற பொறியாளர் பொருளின் இயக்கத்தை காட்டக்கூடிய தொலைக்காட்சி  வடிவமைத்தார்.
  • மனித முகங்கள் தெரியக்கூடிய வகையிலான பெட்டிகள் 1925 களில் வடிவமைக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபை முதன் முதலில் 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 மற்றும் 22 இல் நடத்தியது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!